CPIML கட்சியின் பஞ்சாப்பின் மூத்த தலைவர் தோழர் கிரிபால்வீர் சிங் மறைந்தார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை CPIML கட்சியின் பஞ்சாப்பின் மூத்த தலைவர் தோழர் கிரிபால்வீர் சிங் மறைந்தார்!

CPIML தோழர்கள் சந்திரகுமார்- சந்திரசேகர் நினைவு நாள்

செப்டம்பர் 2, 2022 தஞ்சாவூர்- மணலூரில் வர்க்கப்போராட்டத்தில் உயிர்நீத்த CPIML தோழர்கள் சந்திரகுமார்- சந்திரசேகர் நினைவு நாள் 38-வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் மணலூரில் நடைபெற்றது.

நீங்கள் உயிர் தியாகம் செய்த இலட்சியங்களுக்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்!

தோழர் மாணிக்கத்திற்கு செவ்வஞ்சலி

நாமக்கல் மாவட்ட ஏஐசிசிடியு ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் ப.மாணிக்கம் உடல் நலக் குறைவால் 31.7.2022 அன்று காலமானார். அவரது வீட்டிற்குச் சென்று இகக(மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் அ.சந்திர மோகன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் தோழர் பொன்.கதிரவன், ஒன்றிய செயலாளர் தோழர் வெங்கடேசன், நகர செயலாளர் தோழர் சுப்ரமணி மற்றும் தோழர்கள் முருகன், பேபி, இக்க(மாலெ) மற்றும் ஏஐசிசிடியு முன்னணி நிர்வாகிகள், தோழர் மாணிக்கம் உடலுக்கு செங்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

ஜூலை 31, 2022 தோழர் மாணிக்கம் மறைந்தார் தோழருக்கு செவ்வணக்கம்!

தோழர் மாணிக்கம் மறைந்தார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் தலைவர். CPIML கட்சியின் நாமக்கல் மாவட்ட கமிட்டி உறுப்பினர். 1987ல் இருந்து சங்கத்தின் முன்னணி ஊழியராக செயல்பட்டு வந்தவர். 31.7.22 புற்று நோயால் சேலம் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் மரணமடைந்துவிட்டார். அவரது இழப்பு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்க தோழர்களுக்கும் விசைத்தறித் தொழிலாளர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜுலை 18, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், கெடிலத்தில் CPIML ஆர்ப்பாட்டம்

ஜுலை 18, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், கெடிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ) சார்பில் கனியாமூர் சக்தி மெட்குலேசன் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
உயிர் இழந்த ஶ்ரீமதிக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்.