பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இ ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தையும் அதன் உயிர்ப்பையும் கேலிக்கூத்தாக்குகிறது

முற்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தோடு மோடி அரசாங்கம் கொண்டு வந்த 10% ஒதுக்கீட்டை சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வில் பொதிந்துள்ள குறிக்கோளையும் நோக்கத்தையும் தெள்ளத் தெளிவாக மீறியுள்ளது. இந்த தீர்ப்பானது உரிமை பறிக்கப்பட்ட பிரிவினருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை மேலும் இறுக்கிட மட்டுமே செய்துள்ளது. இதைதான் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவி னருக்கான தீர்ப்பில், தலைமை நீதிபதி யு.யு.

மோடியும் மோர்பியும்

குஜராத் மாடல், குஜராத் மாதிரி' என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் பாஜக-சங்கிகளின் முகங்கள் எல்லாம் தொங்கிப் போய் காட்சி தருகின்றன மோர்பி நகரின் மச்சூ ஆற்றின் தொங்குபாலம் அறுந்து விழுந்து 142 பேர் ஆற்றில் மாண்டு போனதால். அப்போதும்கூட இது எதிர்க்கட்சியினர் சதி என்று கூறி சங்கிகள் திசை திருப்பி வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

ஸ்டெர்லைட்டை எதிர்த்த மக்களைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணை முதலில் போடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவரால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால், அப்போதைய எடப்பாடி அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தில் பல்வேறு தரப்பினர்கள் சாட்சியம் அளித்துள்ளார்கள்.

வெறுப்பை நிராகரிப்போம்! பயத்தைத் தடுப்போம்! அரசமைப்புச்சட்ட உரிமைகளை உறுதி செய்வோம்!

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் வீழ்ச்சி தடையற்று தொடருகிறது. 2020 இல் கணக்கெடுக்கப்பட்ட 107 நாடுகளில், 97வது தரவரிசையிலிருந்தது. 2021இல் ஏழு தரவரிசைகள் வீழ்ந்து இந்தியாவின் இடம் 116 இல் 101 என்றானது. சமீபத்திய 2022 குறியீட்டில் மேலும் ஆறு தரவரிசைகள் வீழ்ந்து 121 நாடுகளில் 107 வது இடத்தை அடைந்துள்ளது. போரால் நாசமாக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தவிர, இந்தப் பட்டியலில் நம்முடைய மற்ற அனைத்து அண்டைய நாடுகளும் இந்தியாவை விட பெருமளவு முன்னணியில் உள்ளனர்.

ஈரானில் போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து அவர்களோடு நிற்கிறது அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்

ஈரானில் ஆடை நெறிமுறையை மீறினார் என்று 'கலாச்சாரக் காவல்துறையினர்' எடுத்த நடவடிக்கையின் காரணமாக 22 வயது மாஷா அம்னி மரணமடைந்தார். இதை அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் டெக்ரானிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரைக் கைது செய்து, கடந்த செப் 13, 2022 முதல் சிறைப்படுத்தி வைத்திருந்தனர் ஈரானின் ஒழுக்க நெறி காவல்துறையினர். அவரைக் கொடூரமாக அடித்து, ஹிஜாப் பற்றிய நீதியையும் கல்வியையும் கற்றுக் கொடுப்பதற்காக, அவப்புகழ் பெற்ற 'ஒஷாரா' சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். செப் 16, 2022 அன்று அவர் மரணமடைந்துவிட்டார்.

கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4000 தொழி லாளர்கள் பணி புரிகிறார்கள். கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்தும்கூட அவர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தமுறையிலேயே தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.333 மட்டுமே. கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஊதிய உயர்வும் வழங்கப் படவில்லை. கொரோனா பொது முடக்க காலத்தில் தங்களின் உயிரைப் பொருட்படுத் தாமல் பணி புரிந்த முன்களப் பணியாளர்களான தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகை எதுவும் கொடுக்கப் படவேயில்லை.

சத்தியம் என்றால் காந்தி; நீதி என்றால் கோட்சே!

கடந்த 8 ஆண்டுகளாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியரான இவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலடைக்கப்பட்டார். 90% மாற்றுத் திறனாளி இவர். சக்கர நாற்காலி இல்லாமல் இவரால் நகர முடியாது. தன்னுடைய தேவைகள் அனைத்திற்கும் அவர் அடுத்தவர்களை நம்பித்தான் இருக்க வேண்டும். சிறையில் இவருக்கு குளிர் தாங்குவதற்கான போர்வை கூட கொடுக்கப்படாமல் விரைவில் நான் செத்துவிடுவேன் என்று தன் இணையருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதினார்.