குஜராத் மாடல், குஜராத் மாதிரி' என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் பாஜக-சங்கிகளின் முகங்கள் எல்லாம் தொங்கிப் போய் காட்சி தருகின்றன மோர்பி நகரின் மச்சூ ஆற்றின் தொங்குபாலம் அறுந்து விழுந்து 142 பேர் ஆற்றில் மாண்டு போனதால். அப்போதும்கூட இது எதிர்க்கட்சியினர் சதி என்று கூறி சங்கிகள் திசை திருப்பி வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.
கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தபோது, ஏமாற்றுக் காரர்களின் மோசடியை கடவுள் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று மோடி பேசினார். இப்போது முன்மாதிரி குஜராத்தில், பாஜக ஆளும் குஜராத்தில் மோர்பி நகரில் பாலம் இடிந்து பரிதாபமாக மக்கள் மரணம் அடைந் துள்ளார்கள். 16 வயதிற்கும் கீழ் இறந்தவர்கள் 40க்கும் மேல். குழந்தைகள் பலர் இறந்துள் ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்துள்ளார்கள். நெஞ்சமெல்லாம் மோர்பி பாலம் சம்பவம்தான் இருக்கிறது என்று வேறு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார் மோடி. குஜராத்தில் தேர்தல் என்பதால் அதிசயமாக ஆஸ்பத்திரி சென்று சிகிச்சையில் இருப்பவர் களைச் சந்தித்துள்ளார். இல்லையென்றால், ஒக்கி புயலின் போது நாகர்கோயில் வந்து சுவரில் ஒட்டப்பட்ட புகைப்படங்களைப் பார்த்துவிட்டுச் சென்றதுபோல் சென்றிருப்பார். மோடி மோர்பி மருத்துவமனைக்கு வருகிறார் என்றவுடன் மருத்துவமனை அவசரகோலத்தில் புனரமைக் கப்பட்டது. சோகத்திலும் ஆடம்பரம், விளம்பரம் இதுதான் மோடி-பாஜக மாடல். மோர்பி பாலம் விபத்து குறித்து விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளர், பாலத்தின் கம்பி வடங்கள் (கேபிள்கள்) துருப்பிடித்து இருந்தன. கம்பிவடங்கள் மாற்றப்பட்டு இருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் மட்டுமின்றி தடய அறிவியல் துறை அதிகாரிகளும் இதையே கூறியுள்ளார்கள். பாலத்தைத் தாங்கிப்பிடிக்கும் கம்பி வடங்கள் துருப்பிடித்து இருந்தன, கேபிள்களில் எண்ணை அல்லது கிரீஸ் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, வேறு எந்த புனரமைப்புப் பணிகளும் கூட மேற்கொள்ளப் படவில்லை என்று கூறியுள்ளார் கள். இதிலி ருந்தே கடிகார நிறுவனமான ஒரேவா, பாலத்தை பழுது பார்க்கவேயில்லை என்று தெரிகிறது. அந்த நிறுவனம் சரியாகப் பழுது பார்த்துள்ளார்களா என்று அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோகூட அதைச் சரிபார்க்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. கையூட்டு பெற்றுக் கொண்டு தனியாரிடம் காண்ட்ராக்ட் விட்டால் என்ன வாகும் என்பதற்கு மோர்பி பால விபத்து மீண்டும் உறுதி செய்துள்ளது. 6 மாதங்களாக பாலம் பழுது பார்க்கும் வேலை நடக்கிறது. இன்னும் சில மாதங்கள் வேலையை முடிக்க ஒப்பந்தம் இருந்தபோதும், அவசர அவசரமாக குஜராத் நாளில் அக்டோபர் 26 அன்று பாலத்தைத் திறந்து, டிக்கெட் போட்டு கல்லா கட்டியுள்ளார்கள்.
இந்த மோர்பி பாலம் 1879ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. அந்த 143 ஆண்டு பழைமை வாய்ந்த பாலத்தினைப் பழுது பார்க்க, அஜந்தா கடிகாரம் தயாரிக்கும் நிறுவனமான 'ஒரேவா'விற்கு கொடுத்துள்ளது குஜராத் பாஜக அரசு. பாலத்தைப் பழுது பார்க்கும் வேலையை அரசாங்கத்தின் பொதுப்பணித்துறையிடம் கொடுக்கவில்லை. அந்த ஒரேவா நிர்வாகம் பாலத்தை சீர் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, பாலத்தின் கம்பி வடங்களை மாற்றாமல், துருப்பிடித்துப் போன கம்பி வடங்களுக்கு பெயிண்ட் மட்டும் அடித்துவிட்டு புதுப்பித்துவிட்டதாகக் கணக்குக் காட்டி கல்லா கட்டி விட்டது. பாஜக ஆட்சியில் ஊழலே கிடையாது என்று ஊளையிடுவோர் இது என்ன மாதிரியானது என்று சொல்வார்களா?
எய்தவன் இருக்க அம்பை நோவது போன்றுவழக்கம்போல், ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள், சப் காண்ட்ராக்டர்கள், டிக்கெட் கொடுத்தவர், பொறியாளர்கள், காவலாளி என அடிமட்டப் பணியாளர்களை காவல்துறை கைது செய்துள்ளது. ஒரேவா நிறுவனத்தின் மீதோ அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்த பாஜக அரசின் அமைச்சர்கள் மீதோ எவ்வித குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. இது ஒரு விபத்து என்று சொல்வது முற்றிலும் தவறானது. இது காவி-கார்ப்பரேட் கூட்டு களவாணித் தனத்தின் கொள்ளையால் ஏற்பட்ட படுகொலை. இந்த மோசமான படுகொலை, ஊழலுக்குப் பொறுப்பேற்று மோடி அரசு வெளியேற வேண்டும். நாடு முழுவதும் இந்த 'குஜராத் மாதிரி'யால் இன்னும் பல உயிர்கள் பறிபோகும். மோடி முதல்வராக இருந்தபோது நடந்த கோத்ரா ரயில் எரிப்பும் அதனைத் தொடர்ந்து குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படு கொலையும் உலகெங்கும் மோடியை யும் பாஜகவையும் பகிரங்கப் படுத்தி யது. அதிலிருந்து மீள்வதற்காக கார்ப்பரேட்டு களை கையில் எடுத்தார் மோடி. மேற்கு வங்கத்தில் சிங்கூர்-நந்திகிராமில் விவசாயிகளால் விரட்டப் பட்ட நானோ கார் கம்பெனியை பட்டுக் கம்பளம் விரித்து குஜராத்திற்கு வரவேற்றார். அதன் பின் கார்ப்பரேட் முதலாளிகளால், அவர்களின் ஊடகங்களால் முன்நிறுத்தப்பட்டு பிரதமர் ஆனார். நாடெங்கும் குஜராத் மாதிரி என்றார். இன்று கார்ப்பரேட் கம்பெனிகள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதும் அரசுத் துறைகள் அனைத்தும் தனியார்களிடம் தாரை வார்க்கப் படுவதும் அன்றாடப் பணியாக மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் விளைவு உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு மோடியின் நண்பர் கௌதம் அதானி போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்.
தனியார்மயத்தால்தான் நாட்டின் பொரு ளாதாரம் வளர்ச்சி பெறும் என்று சொல்லி அதானிக்கு, அம்பானிக்கு எளிய மக்கள் சேர்த்து வைத்த வங்கிச் சேமிப்பையெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்து விட்டு அவர்கள் திருப்பிச் செலுத்தாதபோது, அதை வராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்திய பொதுத் துறை வங்கிகளில் 4ஆவது பெரிய வங்கியான கனரா வங்கி மட்டும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 88 கோடி ரூபாய் அளவிற்கு கடன் தள்ளுபடி செய்திருக்கிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திடீரென காய்கறி வாங்க சந்தைக்குச் செல்கிறார். நான் என் வாழ்நாளில் வெங்காயமோ பூண்டோ சாப்பிடத்தில்லை அதனால் எனக்கு வெங்காயம், பூண்டு விலை பற்றி கவலையில்லை என்று சொன்னவர். தேர்தல் நேரம் என்பதால், சந்தைக்குப் போய் காய்கறிகளைப் பார்த்துப் பார்த்து வாங்கினார். ஆனால், காய்கறிகள், அரிசி பருப்பு விலைகள் பற்றியோ அவை விண்ணை முட்டும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பது பற்றியோ வாய்திறக்கவில்லை. ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது என்று பொருளாதார நிபுணர்கள் சொல்லும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்து கொண்டே போகிறது என்று அறிய கண்டு பிடிப்பைச் சொன்னார். நான் தோற்கவில்லை, அவர்கள் ஜெயித்துவிட்டார்கள் என்பதுபோல்.
இன்னொருபுறம், காய்கறிகளை கூவிக்கூவி விற்பதுபோல், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்களிடம் கூவிக் கூவி விற்றுக் கொண்டி ருக்கிறார். இதில் இந்திய, உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட 5ஜி அலைக் கற்றையை அம்பானிக்கும் அதானிக்கும் தாரை வார்த்தது மட்டுமின்றி, அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் 5ஜி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கிறார். இந்திய உள்நாட்டு 5ஜி அலைக்கற்றையை, இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தரமாட்டாராம். அந்நிய நாட்டு நிறுவனத்திற்குக் கொடுப்பாராம். பிஎஸ்என்எல் இன்னும் 3ஜிலேயே நின்று கொண்டிருக்கிறது. அதன் ஊழியர்கள் கட்டாய ஓய்வு கொடுத்து வெளியேற்றப்படுகிறார்கள்.
இனி எல்லா இடங்களிலும் அம்பானியின் ஜியோ மட்டுமே செயல்படும் என்கிற நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றங்களில் கூட நடை முறைக்குச் சாத்தியமில்லாத மெய்நிகர் (வீடியோ மூலம்) நீதிமன்றம் என்றும் இ-கோர்ட் பைலிங், கணினி வழியே அனைத்து மனுக்களும் தாக்கல் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். கணினி மூலம் மனு, ஆவணங்கள் தாக்கல் செய்தால் மட்டும் போதாது. வழக்கம் போலவே, தாளில் டைப் செய்தும் மனுவையும் ஆவணங் களையும் தாக்கல் செய்ய வேண்டும். பல நேரங்களில் இந்த இ-கோர்ட் முறை வேலையே செய்வதில்லை. அப்படியிருக்க இதெல்லாம் எதற்கு? அம்பானிக்காக, அம்பானியின் ஜியோ நாடெங்கும் நீக்கமற நிறைந்திருக்கச் செய்வ தற்காக. வழக்கறிஞர் தொழிலையும் கூட கார்ப்பரேட் மயமாக்குவதற்காக. தனி வழக்கறி ஞர்கள் இனி பணி செய்ய முடியாமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் மட்டுமே பணி செய்ய முடியும் என்கிற நிலை வருங்காலத்தில் உருவாகும். இப்படி மோர்பி பாலம் நிகழ்ச்சி போல் மோடி அரசின் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் நாடும் நாட்டு மக்களும் மேலும் மேலும் மூழ்கி, மூச்சு முட்டி, பட்டினியால் சாவும் நிலைதான் உருவாகும். அதைத் தடுத்து நிறுத்தும் கடமை இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளதை உணர்ந்து களம் காணும் நேரம் இது. மோர்பிகளை தடுத்திடுவோம். கார்ப்ரேட் காவிப் பாசிச மோடி ஆட்சியை, ஆர்எஸ்எஸ் - சங்கிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)