இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கருடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு

7.9.2022 அன்று டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்திய அலுவலகத்தில் இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் சந்தித்துக் கொண்டனர். பாஜகவின் புல்டோசர் ராஜ்ஜியத்தை தடுத்து நிறுத்திட செயலூக்கமுள்ள பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டியதன் அவசரத் தேவை பற்றி அவர்கள் விவாதித்தார்கள். பீகாரின் பற்றி எரியும் பிரச்சனைகளும் விவாதத்தில் இடம் பெற்றன. ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஒன்றுபட்ட முயற்சியின் அவசர தேவை பற்றியும் இகக(மாலெ) பொதுச்செயலாளர் எழுப்பினார்.

பாட்னாவில் ஜூன் 5 அன்று முழு புரட்சி நாள் (சம்பூர்ண கிரந்தி திவாஸ்) நிகழ்ச்சி

பாட்னாவில், பாபு சபாகரில் நிகழ்ந்த மகா கூட்டணியின் மாபெரும் கருத்தரங்கில் இந்த ஆண்டின் முழு புரட்சி நாள் அனுசரிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் கேடுகெட்ட ஆட்சியினை அம்பலப்படுத்தும் விதமாக குற்றப்பத்திரிகை ஒன்றும் வெளியிடப்பட்டது.

நேர்காணல்: எங்கள் போராட்டம் தொடர்கிறது!

2020 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மாகாகட்பந்தன் கூட்டணியில் இகக (மாலெ), இகக, இகக (மா), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன