செப்டம்பர் 8 அன்று, இந்தியா கேட்டில் புதிய கர்தவ்ய பாதையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ராஜ பாதை (ஆங்கிலத்தில் கிங்ஸ்வே என்பதில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) என்பது அடிமைத் தனத்தின் ஒரு அடையாளமாக இருந்தது என்று கூறினார். அதேபோல், கடந்த வாரம் ஐஎன்எஸ் விக்ராந்த் துவக்க நிகழ்வின் போது மோடியினால் வெளியிடப்பட்ட இந்திய கப்பற்படை கொடியில் ஏற்கனவே இருந்த புனித ஜார்ஜின் சிலுவை அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு புதிய சின்னம் சேர்க்கப்பட்டிருந்தது.