இந்திய விடுதலை இயக்கத்தின்

முற்போக்கு மரபை முன்னெடுத்துச் செல்வோம்!

- திபங்கர்

 

இந்திய சுதந்திர இயக்கத்தின் 75 வது ஆண்டை, இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் கடத்திச்செல்லும் ஒரு பெரிய நடவடிக்கையாக மோடி அரசாங்கம் மாற்றியிருக்கிறது. இன்றைய பாஜக வின் கருத்தியல், அமைப்பு முன்னோர்கள், இந்தியாவின் காலனி எதிர்ப்பு தேசிய விழிப்பில் எந்தவொரு பங்குமில்லாதவர்கள். அவர்கள் காலனிய ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து, அவர்களதுபிரித்தாளும்போர்த்தந்திரத்தை செயல்படுத்துவதற்கு,தங்களது இந்துத்வா அல்லது இந்து மேலாதிக்க மதவாத தேசிய வாதத்தைக் கொண்டு மதச்சார்பற்ற இந்திய தேசியத்தை தடம்புரளச் செய்ய உதவிசெய்வதில் மும்முரமாக இருந்தனர். இன்று அவர்களது வழித்தோன்றல்கள், அந்தப் பேரழிவுவாத வழிகளில் வரலாற்றை திருத்தி எழுதுவதிலும் இந்தியாவை மறுவரையறை செய்வதிலும் மும்முரமாக இருக்கின்றனர்.

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை அமுதப் பெருவிழாவாக கொண்டாடிவரும் மோடி அரசாங்கம், அமுதம் அல்லது தேன் என்ற பெயரில் பொய்யாலும் வெறுப்பாலும் காற்றை நஞ்சாக்கி வருகிறது. இந்திய விடுதலை இயக்கத்தின்பாடப்படாதவீரர்களை கொண்டா டுவற்காக இந்த அறிவிப்பு கவனம் செலுத்துவ தாகச் சொல்லப் படுகிறது. சொல்லப்படும் இந்த நோக்கம் குறித்து நமக்கு எந்தவொரு எதிர்ப்பு இல்லை. ஆனால், பாஜகவின் சுதந்திர போராட்ட வரலாற் றில், இந்துத்வாவின் முதல் தத்துவகர்த்தாவான விடி சவர்க்கார், இவர்தான் இறுதியான இந்தியப் பிரிவினைக்கும் கருத்தியல் தளம் அமைத்துக் கொடுத்தவர், அதுமட்டுமல்ல, இந்தியாவின் சுதந்திர போராளிகளின் புகழ்மிக்க மரபை, கறைப்படுத்தும், ‘ஊதாரி மகனுக்குமீண்டும் மீண்டும் கருணை மனு அனுப்பியதோடு மட்டுமின்றி காலனிய எஜமானர்களுக்கு சேவைசெய்வதாக வாக்குறுதியும் அளித்த சவர்க்கார்தான் பாடப்படாத வீரர் என சித்தரிப் பதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சங்க் குடும்பத்திலுள்ள பலரும், இந்தியா சுதந்திரம் பெற்ற உடனேயே காந்தியைக் கொன்ற இந்துத்வா பயங்கரவாதி நாதுராம் கோட்சேவின்மரபைவெளிப்படையாகவே கொண்டாடியும் வருகின்றனர் 

பாடப்படாத வீரர்கள்எனக்கூறி சங்க் பரிவார் திருஉருக்களுக்கு மறுவாழ்வு அளிப்ப தோடு மட்டுமன்றி, விடுதலைப்போராட்டத்தின்பாடப்படாத நீரோட்டமெனசங்பரிவாரத்தையும் முன்னிறுத்தி வருகிறது. போராட்டங்களின் பல நிகழ்வுகளையும் திரு உருக்களையும் திரித்துக் கூறுவதோடு அபகரிக்கவும் செய்து வருகிறது. பாஜகவின் வரலாறு மீதான போர், விடுதலை இயக்கத்தின் நோக்கங்கள், இலக்குகளை தரந்தாழ்த்தியும் அவமதிப்பு செய்தும் வருகிறது. அதோடு மட்டுமின்றி விடுதலையை கிட்டத்தட்டபிரிவினை பயங்கரம்ஆக குறுக்கிவிடுகிறதுஇதை இன்னும் தெளிவாகக் காட்டுகிற வகையில், பாகிஸ்தான் உருவான ஆகஸ்ட் 14 அய்பிரிவினை பயங்கரத்தை நினைவுகூரும் நாளாகஅரசாங்கம் அறிவித்திருக்கிறது. பிரிவினையால் சமுதாயங்களுக்கிடையில் ஏற்பட்ட வேதனைத் துயரங்களை மறுத்துவிட்டு, பிரிவினை காரண மாக இந்தியாவின் ஒருபகுதியை தங்கள் சொந்த நிலமாகக் கொண்டு பிரிந்துசென்ற இஸ்லாமிய சமுதாயத்தினரை பாவிகளென சாத்தான்மயமாக்கு வதும் அதே பிரிவினையால் பாதிக்கப்பட்ட இந்துக்களை பலியானவர்களாகவும் தூக்கி நிறுத்தப்படுகிறது.

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் போது, நாம் வெறுமனே விடுதலை இயக்கத்தின் மிகமுக்கிய நிகழ்வு களையும் திருப்புமுனைகளையும் வீரமிக்க போராட்டங்களையும் எண்ணற்ற விடுதலைப் போராட்ட போராளிகளையும் திரும்பிப் பார்ப்பதாக மட்டும் இருந்துவிடக்கூடாது. விடுதலைப் போராட்டத்தில் குறிக்கப்பட்ட கருத்தியல் யுத்தத்தையும், கருத்துக் கோப்பு பரிணாம வளர்ச்சியையும் கிரகித்துக் கொள்வ தோடு; அதன் முற்போக்கு மரபு, சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பிறகும் கூட இன்றும் எதிரொலிப்பதையும் காண வேண்டும். பழுப்பு நிற எஜமானர்கள் பற்றி பகத்சிங் நம்மை எச்சரித்ததுபோல, மோடி அரசாங்கம் நமது குடியரசின் அரசமைப்புச் சட்ட வரையறையை காலில் போட்டு துவைத்து வருகிறது. அப்போதைய காலனி ஆட்சியின் வழித் தோன்றல்கள் போல நடந்து கொள்ளும் போது பாசிசத்திடமிருந்து விடுதலை பெற நடந்து வரும் நமது யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல விடுதலை இயக்கத்தின் முற்போக்கு மரபை நாம் முன்னெத்தாக வேண்டும்.

காலனிய சகாப்தத்தின் போது, விடுதலை என்பது முதலாவதாக காலனிய அடிமைப் படுத்தலில் இருந்து விடுதலையாகும். இது நமது தேச விடுதலைப் போராட்டமாகும்; தேச விடுதலை எனும் இந்த லட்சியம், தேசத்தின் நீதிபதிகளாகிய மக்களைச் சுற்றி நங்கூர மிட்டிருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் முழு சுயாட்சி தீர்மானத்தை முறையாக நிறைவேற்று வதற்கு வெகுமுன்பாகவே, இந்தியாவிலுள்ள காலனிய எதிர்ப்புப் போராளிகள், விடுதலை, வெகுமக்கள் இறையாண்மை எண்ணங்கள் குறித்து பேசத்தொடங்கியிருந்தார்கள். 1857ன் கீதம், மக்களை நாட்டின் உரிமையாளர்களாக அறிவித்தது; (இந்த மண்ணின் உரிமையாளர்கள் நாங்கள், இந்தியா  எங்களுடையது). பிர்சா முண்டாவின் உல்குலான் நமது நாடு, நமது ஆட்சி எனும் சங்கநாதத்தை எழுப்பியது. வெகு மக்கள் இறையாண்மை அல்லது மக்களுக்கே அதிகாரம் என்ற இந்த உணர்வு அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், ‘இந்திய மக்களாகிய நாங்கள்இந்தியாவை இறையாண்மை பெற்ற குடியரசாக அமைக்க உறுதிபூணுகிறோம் என்று அரசமைப்பு அங்கீகாரம் பெற்றது. இந்தியா எனும் கருத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் மக்களே நடுநாயகமாகும்.

இந்திய மக்கள் எப்போதுமே பெரிதும் பல்வகைப்பட்டவர்களாகவே இருந்து வந்துள் ளனர். இன, மொழி, பண்பாடு, மத பன்முகத் தன்மை என்பதே இந்திய ஒற்றுமையின் அடித்தளக் கோட்பாடாகும். விடுதலைப் போராட்டத்தின் போக்கில் மேம்பட்ட தகவல் தொடர்பு, மேம்பட்ட இடப் பெயர்ச்சி நிச்சயம் மாபெரும் தேசிய ஒற்றுமையைக் கொண்டு வந்தது; ஆனால் இந்த ஒற்றுமை ஒரே மாதிரி யான, ஒன்று போலான தன்மைக்கான வேட்கை என்று தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடாது. ஒரே மாதிரியான, ஒன்று போலான தன்மையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எப்போதும் ஒற்றுமையை வலுவிழக்கவேச் செய்திருக்கிறது, இதனால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்கள், சமூகங்களால் வலுவாக மறுக்கப்பட்டிருக்கிறது. கெடுவாய்ப்பாக  நிகழ்ந்த, (நாட்டுப்) பிரிவினை பன்முகத்தன்மையை ஓரளவுக்கு மங்கச் செய்து விட்டது, பிரிவினைக்குப் பிந்தைய இந்தியா, உலகின் மிகவும் பன்முகத் தன்மையுடைய ஒரு நாடாகும். விடுதலைப் போராட்டமானது, ஆரோக்கியமான புரிதலுக்கும் பரஸ்பர மரியாதைக்கும் வழிவகுத்ததோடு இந்தியாவின் பன்முகத் தன்மையையும் அங்கீகரித்தது. இதுதான் இந்திய தேச ஒற்றுமையின் தாங்கு திறனையும் (இந்து இஸ்லாமிய ஆட்சியாளர்களால்) ஆளப்பட்ட நூற்றுக்கணக்கான  ராஜதானிகளை (சமஸ்தானங்களை) இந்திய தேசிய அரசுடன் விரைவாக ஒன்றிணைக்கப்பட்டுவிட்டதற் கான விளக்கத்தையும் கூற முடியும்.

அரசமைப்புச் சட்டம், பாரபட்சமற்ற, சமத்துவக் குடியுரிமைக்கான உறுதிப்பாட்டை அளித்திருக்கிறது, அரசை ஒப்பீட்டளவில் மதத்தி லிருந்து விலக்கி வைக்கிறது, இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடாக, வெளிப்படையாக அங்கீகரிக் காவிட்டாலும் கூட மாநிலங்கள் பல துறைகளில் ஓரளவு சுயாட்சித்தன்மை கொண்டிருந்தன. மதச்சார்பின்மை, கூட்டாட்சி மறுகட்டமைப்பு, இந்தியாவின் சாரமான பன்முகத்தன்மை பன்மைவாதத்தை பெருமளவில் அங்கீகரிப்பது ஆகியவற்றுக்கான இயக்கப்போக்கை முன்னெடுத் துச்செல்வது தேவையாக இருந்தது. மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் மிக வேகமாக எதிர்த் திசையில் செல்கிறது; குடியுரிமை திருத்தச் சட்டம் குடிமக்களிடை யேயும் குடியுரிமைக்கு மனுச் செய்யும் புலம் பெயர்ந்தோருக்கிடையேயும் மத அடிப்படையில் பாகுபாட்டை அறிமுகப் படுத்தியிருக்கிறது; அதிகரித்த அளவில் அரசு ஒரு இந்து ராஜ்யம் போல நடந்து கொள்கிறது, ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனக்கென எடுத்துக் கொண்டு மாநிலங்களை மகிமைப் பெற்ற நகராட்சிகள் நிலைக்குத் தகுதி இறக்கம் செய்துள்ளது; பன்மைவாதம் அதிகரித்த அளவில் சாத்தானாக்கப்படுகிறது, ஒற்றைத்தன்மைக்கு கீழ்ப்படியச் செய்யப்படுகிறது.

விடுதலைக்கப்பால், நமது விடுதலை இயக்கத்தின் மற்றுமொரு திறவுகோலான சொல், புரட்சி; இந்தச் சொல்புரட்சி ஓங்குகஎன்ற முழக்கத்தின் மூலம் இறவாப் புகழ்பெற்று விளங்குகிறது. உருது கவிஞராலும் விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா ஹஞரத் மொஹானி யாலும் முழங்கப்பட்டு பகத்சிங், அவரது தோழர்களாலும் இறவாப் புகழடையச் செய்யப் பட்டதுமான இந்த முழக்கம், விடுதலையின் புரட்சிகர முக்கியத்துவம் குறித்தும் முன்னேறிய மாற்றங்கள், உரிமைகளுக்காக தொடரும் போராட்டங்களின் இறவா கண்காணிப்புக்குமான நடுநாயகத்தன்மை குறித்தும் நமது கவனத்தை ஈர்ப்பவையாகும். இந்தப் புரட்சி, சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுமக்கள் விழிப்புணர் வாகவும் பார்க்கப்பட்டது.

உண்மையில் பகத்சிங்கும் படுகேஷ்வர் தத்தாவும் பேரவையின் மைய மண்டபத்தில் எழுப்பிய மற்றொரு முழக்கம்ஏகாதிபத்தியம் ஒழிக’. இந்திய விடுதலை இயக்கம், பிரிட்டீஷ் காலனியத்துக்கு எதிரான தனித்த பிரத்தியேகமான சண்டையல்ல; அது சர்வதேசிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரங்கிணைந்த பகுதியாக வளர்ந்திருந்தது. 1917 ருட்சியப் புரட்சிக்குப்பிறகு அய்ரோப்பா, பாசிசப் பிற்போக்கைக் கண்டபோது இந்திய விடுதலைப் போராட்டத்தின் முற்போக்கு நீரோட்டம் அய்ரோப்பாவின் பாசிச எதிர்ப்புப் போராட் டத்தை ஆதரித்தது. ஆறு இந்தியர்கள்- எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த், பத்திரிகையாளர் கோபால் முகுந்த் ஹுட்டர், மருத்துவர்கள் அடல் மென்ஹன்லால், அயூப் அகமத் கான்நக்ஷபந்தி, மேலும் மேனுவல் பின்டோ, மாணவர் ராமசாமி வீரப்பன் ஆகியோர், தளபதி பிராங்கோ வால் தலைமை தாங்கப்பட்ட பாசிசத் துருப்புகளை எதிர்த்துப் போரிட சர்வதேச படைப்பிரிவில் சேர்ந்திருந்தனர், லண்டனில் இருந்த இந்தியர்கள் நிதி திரட்டினர், ஜவஹர்லால் நேரு 1938ல் ஸ்பெயினுக்கு ஒருமைப்பாட்டு பயணம் மேற்கொண்டார். இந்தியாவிலிருந்த ஆர்எஸ்எஸ், முசோலினி, ஹிட்லரிடமிருந்து உத்வேகம் பெற்றது; இந்தியாவின் முற்போக்கு விடுதலை போராளிகளோ அய்ரோப்பாவின் பாசிச எதிர்ப்பு சக்திகளோடு கரம் கோர்த்தனர்.

விடுதலைப் போராட்டமென்பது இந்தியா வில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதுமட்டுமாக இல்லை, அது நவீன ஜனநாயக இந்தியாவைக் கட்டுவதற்கானதாகவும் இருந்தது. ஆதிவாசிகளும் பிற விவசாய சமூகத் தினரும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய சமூக அடித்தளமாக இருந்தனர்; இவர்கள் நிலப்பிரபுக்கள், வட்டிக்காரர்களி டமிருந்து விடுதலைபெற இடைவிடாது போராடிக் கொண்டிருந்தார்கள். ஆதிவாசிகளின் எழுச்சி, 1857 சுதந்திரப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் காலனிய ஆட்சி, ராணுவக் கட்டுப்பாட்டின் மூலமும் ஒடுக்குமுறை சட்டங் களால் மட்டும் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள வில்லை; ‘நிரந்தர குடியமர்வுகளால் உருவாக்கப் பட்ட நிலப்பிரபுக்கள் வர்க்கம் செயல்படுத்திக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமும் மேலும் பிற (வரி) வருவாய் மூலமும் (மன்னர்கள் ஆண்ட) சமஸ்தானங்களின் அதிகாரத்தை தொடர்ந்து நீடிக்கச் செய்ததாலும் இந்துக்கள் முஸ்லீம்கள் இடையே தீவிரமான பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்தியும் தனது ஆட்சியை உறுதிப் படுத்திக்கொண்டது. அந்தக் காலத்திலிருந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவரது வெளிப் படையான வார்த்தைகளில் சொல்வதாயின், ‘நமது முயற்சி, வேறுபட்ட பல மதங்கள், இனங் களுக்கு இடையே இருக்கும் பிரிவினையை (இது நமக்கு நல்வாய்ப்பாகும்) ஆனமட்டும் தூக்கிப்பிடிப்பதாகவே இருக்கவேண்டும்...; பிரித்தாளுதல் இந்திய அரசாங்கத்தின் கோட்பாடாக இருக்க வேண்டும்’ (மொரதா பாத்தின் தளபதியான லெப்டினட் தளபதி கோக்கர், இந்தியா இன்று எனும் ரஜினி பாமிதத் நூல், 1940). நிலப்பிரபுக்களும் பொம்மை சமஸ்தான ஆட்சியாளர்களும், ஒரு சில மதிப்புக்குரிய விதிவிலக்குகள் தவிர, காலனிய ஆட்சியின் அடித்தளமாக இருந்தனர், எனவே நிலப்பிரபுக்கள், வட்டிக்காரர்களுக்கெதிரான விவசாயிகள் போராட்டங்களிலிருந்து காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் வலுவைப் பெற்றுக் கொண்டன.

காலனிய இந்தியாவில், நிலப்பிரபுத்துவத் தையும் கந்துவட்டியையும் ஒழிப்பது விவசாயிகள் இயக்கத்தின் மய்ய முழக்கமாக முன்வந்திருந்தது. இந்தக் கருவான நிகழ்ச்சி நிரலுக்கு காந்திய சத்தியாகிரக இயக்கம் உரிய அழுத்தம் கொடுக்காத நிலையில், விவசாய இயக்கம் அகில இந்திய விவசாயிகள் சபை எனும் வடிவத்தில் தனது போர்க்குணமிக்க மேடையை உருவாக்கிக் கொண்டது. அகில இந்திய விவசாயிகள் சபை, ஏப்ரல் 1936ல் அதன் முதல் தலைவராக சுவாமி சகஜானந்தா சரஸ்வதியைக்கொண்டு துவக்கப்பட்டது; ஜமின்தாரி முறையை ஒழித்துக்கட்ட வேண்டும் கிராமப்புறக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் ஆகஸ்ட் 1936ல் அதன் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது. சக்தி வாய்ந்த கிராமப்புற விவசாயிகள் போராட்டம், கிராமப்புற இந்தியா வின் நிலப்பிரபுத்துவ- காலனிய அதிகாரத்தை வலுவிழக்கச் செய்தது மட்டுமல்ல, மதவாத அணிச்சேர்க்கை, வன்முறைக்கெதிரான சக்திமிக்க கதையாடலையும் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கியிருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு பழையவகை நிலப்பிரபுத்துவம் சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டது, அதற்குப் பிறகும் நிலச்சீர்திருத் தங்கள் நிறைவு செய்யப்படவில்லை மட்டுமின்றி சமீபகாலமாக நிலச்சீர்திருத்தங்கள் பின்னோக்கி திருப்பப்படு வதையும் காண்கிறோம். காலனிய (ஆட்சி) என்ற இடத்தில் பெருங்குழும என்பதை வைத்தால், விவசாயிகள் இயக்கம் பெருங்குழும நிலப்பிரபுத் துவம், கடன் நெருக்கடி எனும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதைக் காணமுடியும்.

தொழிலாளர் வர்க்கம், (தான்) அமைப்பா வதற்கான உரிமை, மேலான வேலை நிலைமை, வாழ்நிலைமைகளுக்காகப் போராடுவதற்கான உரிமைகள் உள்ளிட்ட தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்கான யுத்தமென்பது இந்திய விடுதலைப் போராட்டத்தின் மற்றுமொரு முக்கிய முற்போக்கு மரபைக் கொண்டதாகும். இந்த போராட்டங்கள், காலனிய காலத்திலேயே தொழிலாளரது உரிமைகள் குறித்த பல சட்டங்களை நிறைவேற்றுவற்கு இட்டுச்சென்றன. தொழிற்சாலை சட்டம் முதற்கொண்டு தொழிற்சங்கங்கள் சட்டம் 1926, சம்பளப் பட்டு வாடாச் சட்டம், குறைந்த பட்ச ஊதியச்சட்டம் உள்ளிட்ட பல முக்கிய சட்டங்கள் சுதந்திரப் போராட்ட காலகட்டத்திலேயே நிறைவேற்றப் பட்டன. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் 1920ல் உருவாக்கப்பட்டதும் 1920 களில் அமைப்பாக்கப்பட்ட கம்யூனிச இயக்கம் உருவாக்கப்பட்டதும் 1936ல் டாக்டர் அம்பேத்க ரால் உருவாக்கப்பட்ட சுதந்திர தொழிலாளர் கட்சியும் காலனிய இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம், தொழிலாளர் வர்க்க உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் பல முக்கிய பங்குவகித்தன. பார்ப்பனியம், முதலாளித்துவம் இரண்டையும் முக்கிய எதிரிகளாக அடையாளம் கண்ட சுதந்திர தொழிலாளர் கட்சி, மும்பை ராஜதானியில் முக்கிய போக்காக எழுந்தது; முக்கியமான தேர்தல் வெற்றிகளையும் ஈட்டியிருந்தது, மேலும் சட்டமியற்றும் அரங்கிலும் பரந்துபட்ட தொழிலாளர்-&விவசாயிகள் போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்திருந்தது.

1936, உண்மையில் பல முற்போக்கான அழைப்புகளுக்கு வழிவகுத்த ஆண்டாக இருந்தது. விவசாயிகள்  சங்கம், நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவதற்கு அழைப்பு விடுத்ததென் றால் அம்பேத்கார் சாதியை அழித்தொழிக்க வேண்டுமென்ற போர்ப் பிரகடனத்துடன் முன்வந்தார். சாதியை அழித்தொழிப்பதற்கான அழைப்பு சமூகநீதி நிகழ்ச்சி நிரலை ஒரு சமூக மாற்றமெனும் உயர்ந்த தளத்துக்கு எடுத்துச் சென்றது. தீண்டாமையை ஒழிப்பது எனும் வரையறுக்கப்பட்ட காந்திய பொருளிலிருந்து விலகி நின்றி சாதி அமைப்புமுறை முழுவதை யுமே அழித்தொழிப்பதை நோக்கி அம்பேத்கர் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தார். வேலைப் பிரிவினை என்ற பெயரால் சாதியை நியாயப் படுத்தும் முயற்சிகளை மறுத்து, சாதி தொழிலா ளர்களை பிரிக்கிறது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதற்கான விடை, சாதி எதிர்ப்பு அடிப்படையில் தொழிலாளரை ஒன்றுபடுத்துவதில் பொதிந்துள்ளது என்பதும் அப்போது, சாதி வர்க்கமாக கரைந்துபோகும் என்பதும் தெளிவானது. நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது, சாதியை அழித்தொழிப்பது, தொழிலாளரை ஒன்றுபடுத்துவது என்ற இந்த முற்போக்கு கருத்துகளின் ஒன்றுகுவிப்பு, வர்க்க ஒற்றுமையையும் வர்க்கப்போராட்டத்தையும் இன்னும் பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டிருந்தது. ஆனால் கெடு வாய்ப்பாக அந்த கட்டத்தில் அதை ஈடேற்ற முடியவில்லை. விடுதலை இயக்கத்தின் இந்த நிறைவேற்றப்படாத ஆற்றலையும் மரபையும் இன்றைய இந்தியாவில் கண்டெடுப்பதுதான் மிகத் துல்லியமான நமது தேவையாக இருக்கிறது.

பெண்கள், பொதுக் கிளர்ச்சிகளில் அதிக அளவில் கலந்துகொள்வதையும் விடுதலை இயக்கம் பொருள்படுத்தியது. அவ்வாறு பங்கு பெற்றதன் விளைவாக ஆணாதிக்க நடை முறைகளையும் கட்டுப்பாடுகளையும் விரிந்த அளவுக்கு கேள்வி கேட்பதற்கு வழிவகுத்தது; மேலும் சம உரிமை, கவுரவம் பெண் விடுதலைக்கான யுத்தத்தை வலுப்படுத்து வதற்கும் இட்டுச்சென்றது. ஒருசில குறிப்பிட்ட போராட்ட வடிவங்களில் மட்டும் பெண்கள் கலந்து கொண்டனர் என்பதாக  அது வரையறுக் கப்பட்டிருக்கவில்லை; சந்தால் ஹல் (எழுச்சி) யிலிருந்து 1857 சுதந்திரப் போர், சட்டகிராம் ஆயுதக் கொள்ளை, தேபகா, தெலுங்கானா போன்ற விவசாய பேரெழுச்சிகள் உள்ளிட் டவற்றில், ஏறத்தாழ அனைத்து முக்கிய கட்டங்களிலும் அனைத்து போராட்ட வடிவங்களிலும் பெண்கள் முன்னணியில் இருந்தனர். மிகக் குறைவாகவே அறியப் பட்டிருந்த மணிப்பூரின் நுப்பி லன் (1904, 1939) போராட்டங்களில் பெண்கள் தலைமைப் பாத்திரம் வகித்தனர். லுப்பி லன் என்றால் மணிப்புரி மொழியில்பெண்கள் போர்என்று பொருள்; உள்ளூர் அரசர், பணக்கார வணிகர்கள், காலனிய சக்திகளுக்கெதிராக தொடுக்கப்பட்ட பெண்கள் போர், மணிப்பூரில் பெண்கள் ஒப்பீட்டளவில் பெற்றிருந்த உயர் தகுதியை கீழ்மைப்படுத்த முயன்ற ஆணாதிக்க காலனிய சக்திகளிடமிருந்து தங்கள் தகுதியை காத்துக் கொள்ள நடத்தப்பட்ட போருமாகும். அந்தப்போர் அடிமைத்தனத்திலிருந்தும் ஒடுக்கு முறையிலு மிருந்து ஆண் தொழிலாளர்களுக்கும் விடுதலை யைப் பெற்றுத்தந்தது. நிச்சயமாக இது இன்றைய, பாராபட்சமிக்க, பிளவுபடுத்துகிற குடியுரிமைச் சட்டத்திற்கெதிரான ஷாகின் பாக் போராட்டங்கள், ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கெதிரான சக்திமிக்க கிளர்ச்சிகள், அரசு ஒடுக்குமுறை, பயங்கரத்துக்கு எதிரான, மணிப்பூர், காஷ்மீர் பெண்கள் போராட்டங்களுக்கு முன்னோடி யாகும்.

பாஜகவுக்கு தேசியமென்றால், இந்துத்வா; விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாட்ட மென்பது அவர்களுக்கு, மதச்சார்பற்ற இந்தியாவை இந்து ராஜ்யமாக மாற்றும் முடிக்கப் படாத அவர்களது திட்டத்திற்கு சேவை செய்வதற்காக வரலாற்றை கடத்திச் செல்கிற வேலை யாகும். நமக்கோ, விடுதலை இயக்க மரபு என்பது, மதவாத அணிச்சேர்க்கை ஆபத்து, காலனிய எச்சங்களுக்கெதிரான சக்திமிக்க எச்சரிக்கையாகும்; மேலும் சோசலிச மதச்சார்பற்ற குடியரசு என்ற நவீன இந்தியா எனும் லட்சியத்தை நோக்கி, ‘இந்திய மக்களாகிய நாம்மேற்கொள்ளும் சாதிக்கப்படாத இந்த பயணத்தில் கைவரப்பெறாத ஆற்றல்களை புடம் போடு வதற்கான நீடித்த உந்துதலாகும். விடுதலைப் போராட்டத்தின்போது மக்கள் பாசிஸ்ட் சதித்திட்டத்தை தோற்கடித்தார்கள்; சுதந்திரத்தின் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மீண்டும் ஒருமுறை அதை (பாசிச சதியை) தோற்கடித்துக் காட்டுவார்கள்.

-லிபரேஷன்; 2022, ஜனவரி

தமிழாக்கம் - பாசு

Image Thanks WION