ஆளுநர் உரைக்கு எதிராக ஆளுநர்.

தேசிய கீதத்துக்கு ஆளுநர் அவமரியாதை

பிப் 12 அன்று ஆளுநர் உரையோடு ஆரம்பிக்க வேண்டிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஆளுநர் வெளிநடப்போடு துவங்கியது. தேசிய கீதத்துடன் உரையை முடிப்பதற்குக் கூட அவர் காத்திருக்கவில்லை. சட்டப் பேரவைத் தலைவரால் அவமதிக்கப்பட்டதாக காரணம் கூறி, தேசிய கீதத்துக்காக எழுந்து நின்ற ஆளுநர், அது பாடப் படும் வரை காத்திராமல் வெளியேறி, தேசிய கீதத்தையே அவமதித்து விட்டார்.

ஆளுநர் கோட்சேவுக்கு எதிரானவரா?

வருணாசிரம முறைக்கு வலு சேர்க்கும் விஸ்வகர்மாத் திட்டம்

ஜூன் 1953. அன்றைய காங்கிரசின் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் திரு. ராஜாஜி அவர்கள் ஒரு கல்வித் திட்டத்தை அறிவித்தார். "மாற்றப்பட்ட திட்ட அடிப்படையிலான ஆரம்பக் கல்வி" என்ற பெயரில் அறிவித்தார். அதன்படி, காலை நேரம் முறையான வகுப்பறைக் கல்விக்காகவும் மதிய நேரம் மாணவர்கள் தங்கள் தந்தையரின் பாரம்பரியமான குலத் தொழிலைக் கற்றுக் கொள்வதற்கும் என ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி, தோட்டியின் மகன் தோட்டி வேலையைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். செருப்பு தைப்பவரின் மகன் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். பூசாரியின் மகன் பூசாரியின் தொழிலைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஓபிஎஸ் (பழைய ஓய்வூதியத் திட்டம்) வேண்டும்! மாற்றியமைக்கப்பட்ட என்பிஎஸ் (புதிய ஓய்வூதியத் திட்டம்) வேண்டாம்!

கீன்சியனுக்குப் பிந்தைய காலகட்டத்தின் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான ஒரு சர்வரோக நிவாரணியாக உலக மூலதனத்தால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் நவதாராளவாதக் கொள்கை. அந்தக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்ததன் விளைவாக, ஒரு கண்ணியமான ஓய்வூதியத்திற்கான இயக்கம் பெரும் முக்கியத்துவமிக்க ஒன்றாகவும் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதாகவும் மாறியுள்ளது. புதிய தாராளமயக் கொள்கைகளின் அறிமுகத்துடன் மக்கள் நல அரசு என்ற கருத்தின் முடிவு தொடங்கியது. ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டதால் ஓய்வூதிய நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!

மோடி ஆட்சியின் அடக்குமுறைகளும், மோசடிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக சங்கிகளின் ஆட்சி, மோடி என்கிற தனிநபரின் ஆட்சி என்பதாக இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரமாக, பாசிசமாக மாறி வருகிறது. சர்வாதிகாரம், யதேச்சாதிகாரம் என்பன அடிப்படையில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். பாசிசம் என்பது அரசு எந்திரத்தோடு கூடவே, தனியார் படைகளை, அரசு சாராத படைகளை, அரசு சாராத கும்பல்களைப் பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். இதுவும் கூட பாசிசத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.