எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், ஆர்எஸ்எஸ்-பிஜேபியை வீதியின் நின்று போராடி ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்

தோழர்களே! இந்த மாநாட்டிலே பேச வாய்ப் பளித்தமைக்காக மக்கள் அதிகாரத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழர் திபங்கர் அவர்கள் 5 'சி' மூலம் எதிரிகளின் நடவடிக்கை பற்றி மிகத் துல்லியமாக நம் மத்தியில் புரிய வைத் துள்ளார்கள். எதிரிகளிடம் எவ்விதக் குழப்பமும் இல்லை. கார்ப்பரேட்டிடம் எந்தக் குழப்பமும் கிடையாது. காவிப் பாசிசத்திற்கு எந்தக் குழப்பமும் கிடையாது. அதை எதிர்த்துப் போராடுபவர்களிடத்தில் அதற்கு ஏற்ப ஒன்றுமை வர வேண்டும். அதை தமிழகத்தில் ஏற்படுத்துகிற வகையில் இந்த மாநாடு முக்கிய பங்காற்றும். வெள்ளிக் கிழமை ராஜினாமா செய்தவர் சனிக்கிழமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்ற ஒன்றிணைவோம்

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்நாடு மாநில மாநாடு 2022 ஆகஸ்ட் 6-9 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 6 அன்று, “சமூக நல்லிணக்கத்தைக் காப்போம், மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் கலந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஅய்(எம்) மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

எழுச்சி மாநாடு