தோழர்களே! இந்த மாநாட்டிலே பேச வாய்ப் பளித்தமைக்காக மக்கள் அதிகாரத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழர் திபங்கர் அவர்கள் 5 'சி' மூலம் எதிரிகளின் நடவடிக்கை பற்றி மிகத் துல்லியமாக நம் மத்தியில் புரிய வைத் துள்ளார்கள். எதிரிகளிடம் எவ்விதக் குழப்பமும் இல்லை. கார்ப்பரேட்டிடம் எந்தக் குழப்பமும் கிடையாது. காவிப் பாசிசத்திற்கு எந்தக் குழப்பமும் கிடையாது. அதை எதிர்த்துப் போராடுபவர்களிடத்தில் அதற்கு ஏற்ப ஒன்றுமை வர வேண்டும். அதை தமிழகத்தில் ஏற்படுத்துகிற வகையில் இந்த மாநாடு முக்கிய பங்காற்றும். வெள்ளிக் கிழமை ராஜினாமா செய்தவர் சனிக்கிழமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகிறார். இது பற்றி உச்சநீதிமன்றம் கேட்டதால் வெளியே தெரிந்துள்ளது. 2024 தேர்தலில் பிஜேபியைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், அதற்கு நம்மிடம் அதற்கேற்ப ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அமித்ஷா நாடு முழுவதும் ஒரே போலீஸ் என்கிறார். டெல்லிதான் எல்லா போலீஸ் ஸ்டேசன்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார். மாநில உரிமை என்னவாகும்? மாநில உரிமைகள் எப்படிப் பாதுகாக்கப்படும்? தேர்தலுக்கு அப்பாற்பட்டு நாம் ஒன்றுபட்டு போராட வேண்டியுள்ளது. எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், ஆர்எஸ்எஸ்-பிஜேபியை வீதியின் நின்று போராடி ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். அனைத்து சாதி யினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நியமனத்திற்கு எதிராக இன்றும் நீதிமன்றத்தில் சனாதனவாதிகளால் வழக்குப் போடப்பட்டு அந்த பணி நியமனம் இன்றும் கேள்விக்குள்ளாக்கப் பட்டுவருகிறது. தீண்டாமை எங்கிருந்தாலும் ஆதிக்கம் எங்கிருந்தாலும் அதை அடித்து நொறுக்குவதுதான் ஜனநாயம். அதுதான் நாகரிகம். இந்தி என்பது ஒரு மொழி அல்ல. இந்தித் திணிப்பு மூலம் ஆதிக்கத்தை அமல்படுத்துகிறார்கள். உச்சநீதிமன்றம் சொன்னாலும் பாராளுமன்றம் சொன்னாலும் அவர்கள் மீறுவார்கள். ஆனால், நாடு முழுவதும் பல போராட்டங்களை பிஜேபி-ஆர்எஸ்எஸ் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எதிர்கொள்வதற்கு அவர்கள் கலவரங்களை நடத்துகிறார்கள். கர்நாடகாவில் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார். கல்புர்கி, நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டார்கள். இதைச் செய்தவர்கள் சனாதன் சன்சாத் என்கிற அமைப்பு. நாம் ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராட வேண்டும். ஆர்எஸ்எஸ்-பிஜேபியின் அனைத்து நடவடிக்கை களையும் எதிர்த்துப் போராட வேண்டும். பிஜேபி-ஆர்எஸ்எஸ்ஸை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல இந்தியாவில் இருந்தே விரட்டி அடித்திடுவோம் தோழர்களே, நன்றி வணக்கம்.