ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; ஆளுநர் பதவியை ஒழித்துக் கட்ட வேண்டும்!!

இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலிருந்தும் ஆளுநர் ரவீந்திர நாராயண ரவி வெளியேறி விட்டார்! வழக்கம் போல், முதல் நிகழ்வாக, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.  தேசியகீதம் முதலாவதாக இசைக்கப்படவில்லை என்றுகூறி ஆளுநர் வெளியேறிவிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன் வைக்கும் அறிக்கையையே   சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையை விட்டு வெளியேறிவிட்டார்.  இந்த ஆண்டு மட்டுமல்ல தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ரவி இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்.

சந்தர்ப்பவாத அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!

கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக இந்தத் தேர்தலில் தனி அணியாக போட்டியிடுகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக  கூட்டணியிலிருந்து விலகியதற்கு அதிமுக சொல்லும் காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இழிவுபடுத்தி பேசிவிட்டார் என்பதுதான். இது உண்மை என்றால், பல்லடம் பொதுக்கூட்டத்தில் மோடி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதைக் கேட்டு தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அப்போ, உண்மைக் காரணம் வேறுதானே.

இன்னொரு சாதியாதிக்கப் படுகொலை!

திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முத்தையா, நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் செய்தார் என்பதற்காக படு கொலை செய்யப்பட்டார். முதலில் வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தில் கொலை வழக்காக பதிவு செய்திருந்த காவல்துறை, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைந்துவிட்டு, அந்த மூன்று பேரில் முத்தையாவை யார் என்றே தெரியாத சுரேஷ் என்பவரின் தங்கையை முத்தையா கேலி செய்தார் என்பதற்காக இவர்கள் மூவரும் சேர்ந்து கொலை செய்தார்கள் என்று கூறி இப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கி விட்டு, வெறும் கொலை வழக்காக மாற்றியுள்ளது.