லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதானது பாஜக தலைவர்கள் மற்றும் அரசாங்கம் விவசாயிகள் மீது நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனத்தின் சமீபத்திய நிகழ்வாகும். உள்ளூரில் குற்றவியல் பின்னணி கொண்டிருந்த, பின்னர் மத்திய உள்துறை இணை அமைச்சரான அஜய் மிஸ்ரா டேனியின் மகன் அசிஷ் மிஸ்ரா நன்கு திட்டமிட்டு கொடூர கொலைபாதக செயலாக, பேரணியாக சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீது வரிசைகட்டி வரும் வாகனங்களை ஏற்றி கொலை செய்தார்.இந்தக் கொடிய வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு ஊடகவியலாளர், ஒரு ஓட்டுநர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டார்கள். அசிஷ் மிஸ்ரா வெறும் காரை ஏற்றி மட்டும் கொலை செய்யவில்லை, மேலும் அவர் கைத்துப்பாக்கியால் சுட்டு விவசாயிகளை கொன்றதாக இப்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டி ருக்கும் விவசாயிகளுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதம் அஜய் மிஸ்ரா பேசியதை அடுத்து லக்கிம்பூர் கேரி வன்முறை வெடித்திருந்தது.
விவசாயிகள் போராட்டம் துவங்கியது முதலே பாஜக பல்வேறு தந்திரங்களை கையாண்டு அதை ஒடுக்கிவிட முயன்றது. இருந்த போதிலும், ஒவ்வொரு நடவடிக்கையையும் திருப்பித் தாக்கி விவசாய இயக்கத்தின் எல்லையை விரிவாக் குவதில் போய் தான் அது முடிந்திருக்கிறது. முதலில் அரசியல் தூண்டுதலால் போராட்டம் நடப்பதாகவும் போராட்டமும் பஞ்சாப் மாநிலத் திற்குள் சுருங்கி இருப்பதாகவும் சொல்லி தட்டிக் கழித்தது.டெல்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை டெல்லி எல்லையில் காவல்துறை வன்முறை கொண்டு, முள்வேலி அமைத்து தடுத்தது. விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த முற்றுகையானது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகளின் ஒற்றுமையில் போய் முடிந்தது. டெல்லி எல்லைப்புறத்தில் முகாமிட்டுள்ள விவசாயி களுக்கு உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து ஹரியானா விவசாயிகள் உதவினர். எல்லைப் பகுதியிலிருந்து விவசாயி களை அப்புறப்படுத்த ஜனவரி 26 அன்று எடுக்கப்பட்ட முயற்சியானது மேற்கு உத்தர பிரதேச விவசாயிகளை போராட்டக் களத்தை நோக்கி அணிதிரட்டி கொள்வதிலும், அந்தப் பிராந்தியத்தில் ஆங்காங்கு விவசாயிகளின் பேரணியை கட்டமைப்பதிலும் போய் முடிந்தது. படுமோசமான கொடூர கொலைக்கு எதிரான கோபாவேசம் மாநிலம் முழுவதும் கனன்று கொண்டிருக்கும் போது, லக்கிம்பூர் கேரி படுகொலை சம்பவம், உத்தர பிரதேசத்தில் திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக் கையை இப்போது தந்திருக்கிறது.
விவசாயிகள் இயக்கத்தை பின்னுக்கு தள்ளவோ அல்லது பிசுபிசுத்து போகச் செய்யவோ பாஜக தவறிவிட்ட போது, அதன் அதிகரித்த விரக்தி அடுத்தடுத்த வன்முறை வெடிப்பு சம்பவங்களுக்கு இட்டுச் செல்கிறது. கர்னாலில் போராடும் விவசாயிகளின் 'மண்டையை உடையுங்கள்' என்று சொல்லி துணைநிலை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதை அடுத்து விவசாயிகள் மீது ரத்த வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை நாம் பார்த்தோம்.அதைவிட மோசமாக இப்போது ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது கட்சி ஊழியர்களிடம்" 500,700, 1000 என்ற எண்ணிக்கையில் மக்களைக் கொண்டு தன்னார்வலர் குழுக்களை உருவாக்கி கொள்ளுங் கள் என்றும் ஒவ்வொரு இடத்திலும் பதிலுக்கு பதில் அடி கொடுங்கள், கவலைப் படாதீர்கள், வரலாற்றின் பக்கங்களில் உங்கள் பெயர் பொறிக்கப்படும், சிறையில் ஒரு மாதமோ, 3 மாதமோ,6 மாதமோ இருந்தால் நீங்கள் பெரிய தலைவராகி விடுவீர்கள்" என்று சொல்லி வருவதை பார்த்து வருகிறோம். அசாமின் தல்பூரில் வறிய முஸ்லீம் விவசாயிகளை 'வங்கதேசத்தவர்' என முத்திரை குத்தி அவர்களை அப்புறப்படுத்தும் கொலைபாதக திட்டமானது ஒரு மனிதர், ஒரு சிறுவர் கொலையோடு அந்த கொலையுண்ட மனித உடலை மிருகத்தனமாக வதைசெய்வதில் போய் முடிந்திருக்கிறது. அஜய் மிஸ்ரா விடுத்த அச்சுறுத்தலை தொடர்ந்து, அவருடைய மகனின் அடுத்தடுத்த கொலைகள் என்பது அவர்களின் பரந்த நிகழ்ச்சிநிரலான வன்முறை மற்றும் அச்சுறுத்தல் என்பதின் ஒரு அங்கமே ஆகும்.
விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் லக்கிம்பூர் கேரி படுகொலை விவகாரத்தில் உத்தரபிரதேச அரசை பணிந்து வரும்படி நிர்ப் பந்தித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு இழப்பீடு வழங்குவதற்கும்,அசிஸ் மிஸ்ரா மீது கொலை குற்றத்திற்காகவும் அஜய் மிஸ்ரா டேனி மீது சதி குற்றத்திற்காகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. பாஜகவின் வெற்றுக்கூப்பாடு, வன்முறை சம்பவங்களுக்கு விவசாயிகள் மீது பழிபோடும் அதன் பிரச்சார ஊடகங்கள் ஆகியவற்றையும் தாண்டி உத்தரப்பிரதேச அரசாங்கம் உண்மையின் கேந்திரமான உட்கூறுகளை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
நீண்ட வன்முறை, குற்ற நடவடிக்கைகள் பின்புலம் கொண்ட அஜய் மிஸ்ரா டேனி அதேபோல் பின்புலம் கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு துணையாக செயல்படுவதற்குப் பொறுக்கி எடுக்கப்பட் டுள்ளார். விவசாயிகள் மீது கொலைவெறித் தாக்குதலை கட்டவிழ்த்துவிட சதி செய்தார் என இப்போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள டேனி எப்படி தொடர்ந்து அமைச்சராக பொறுப்பு வகிக்க அனுமதிக்கப் படுகிறார்? அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொரு நாளும் வலுத்து வருகிறது.
மோடி, யோகி, கட்டார் அரசாங்கங்கள் எந்த அளவு முடியுமோ அந்த அளவு வன்முறையை கட்டவிழ்த்து விடுவார்கள். அது அவர்களின் விரக்தி யையும் விவசாயிகளின் தீரத்தையும் குறிக்கவே பயன்படும். அஜிஸ் மிஸ்ராவை நீக்க வேண்டும். கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நீதி வேண்டும். அசாமிலிருந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி வரை உள்ள கொலை பாதக பாஜக அரசாங்கத்துக்கு தண்டனை வழங்க வேண்டும், வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை விவசாயிகள் எழுப்பும் போது மொத்த நாடும் அவர்களோடு சேர்ந்து நிற்க வேண்டும்.
எம்எல் அப்டேட் – தலையங்கம் 5-11 அக். 2021
தமிழாக்கம் – தேசிகன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)