சிபிஐஎம்எல் மக்களவை உறுப்பினர் தோழர் சுதாமா பிரசாத் உரை

குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை!

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

சிபிஐஎம்எல் மக்களவை உறுப்பினர் தோழர் சுதாமா பிரசாத் உரை

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை: வெற்று ஆரவார அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதற்கடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெற்று ஆரவாரம்தான் என அம்பலமாகியுள்ளது. முழுமையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பரிசீலனை செய்தால் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இருக்கிறது.

விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க, விவசாயிகளின் வாழ்வா சாவா எனப்படும் இயற்கை பேரிடர்கள், பயிர்க் காப்பீடுகள், விவசாய கடன்கள் மற்றும் தள்ளுபடிகள் வரை ஒதுக்கப்பட்ட நிதி மிகமிகக் குறைவானதே !