வாக்களிப்பதுடன் ஆதாரை இணைப்பது,

வாக்களிக்கும் உரிமை மீதுத் தொடுக்கப்படும் தாக்குதலாகும்

தேர்தல் சட்ட (திருத்த) மசோதா 2021 மக்கள வையில் நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய ஜனநாயகத்தை அரிக்கும் ஆபத்தான நடவடிக்கை யாகும். முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திருத்தமானது, வாக்களிக்கும் உரிமையை, ஆதாரைக் கொண்டு சரிபார்த்தலுடன் இணைக்க வேண்டுமென்கிறது. அப்படி இணைப்பதால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி தெரிந்துகொள்ளவும், நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும், பாராளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு இந்த முன்வைப்பை அனுப்பவேண்டுமென்று, பல எதிர்க்கட்சி எம் பி க்களும் கோரினர். அதையும் மீறி, வேறுபல மக்கள் விரோதச் சட்டங்களைப் போலவே, இந்தத் திருத்தமும் கூட, குரல் வாக்கெடுப்பின் மூலமாக மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது.

2017&ன், உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பானது, அந்தரங்க உரிமையை அடிப்படை உரிமையென உயர்த்திப் பிடித்தது. இது, ஆதார் தனித்துவ அடையாள அட்டைத் திட்டத்திற்கு வக்காலத்து வாங்க, இந்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்ட தாகும். 2018 இல், உச்சநீதி மன்றம் ஆதாருக்கான அரசியலமைப்பு செல்லுபடியை உறுதி செய்தது. ஆனாலும், அதனை அரசின் நலத்திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென சொன்னது. மேலும், 2015 இன் தேசிய வாக்காளர் பட்டியலை சரிப்படுத்துதல் மற்றும் அங்கீகரித்தல் திட்டத்தை நிறுத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்ற ஆணையை உறுதி செய்தது. இது, ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முயன்றத் திட்டமாகும். 2018 இல், தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச அரசாங்கங்கள் இந்த உச்சநீதிமன்ற ஆணையை மீறி, ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தன - இதன் காரணமாக, குறைந்தபட்சம் 55 லட்சம் வாக்காளர்கள்  வாக்காளர் பட்டியலிலிருந்து முறைகேடாக நீக்கப்பட்டனர்.

ஆதார் இணைப்பால் பொது வினியோகத் திட்டத்திலிருந்தும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்ததும், ஏற்கனவே ஏழைகளும், வறியவர்களும் பெரும் எண்ணிக் கையில் வெளியேற்றப்பட்டு விட்டனர். மேலும், ஆதார் இணைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறுகள், பட்டினிச் சாவுகள் நிகழ்வதற்குக் கூட இட்டுச் சென்றன. தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் ஆதார் இணைப்பானது, வாக்கா ளர்கள் பெரும் எண்ணிக்கையில் நீக்கப்படுவ தற்கு இட்டுச் சென்றது. மேலும், ஆதார் இணைப்பின் மூலம் வாக்காளர் அடையாளங் களை உறுதிசெய்ய கைப்பேசிகளும், அதன்மூலம் சமூக ஊடகங்களும் இணைக்கப்படும் என்றும் தெளிவாகிறது. தவிர்க்க இயலாமல், வாக்காளர் களை அவர்களின் சமூக அடையாளங் கள், அரசியல் பார்வைகள், வேறு முன்னுரிமை களின் அடிப்படையில் வகைப்படுத்தவும் இது வழிவ குக்கும். வாக்காளர் பட்டியலை தங்கள் விருப்பத் திற்கு மாற்றியமைக்கவும் அரசியல், சமூக வகைப்படுத்தலுக்கு ஏற்றவாறு வாக்காளர்களை நீக்கவும் முடியும். நலத்திட்டங்களையும், வாக்களிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்துவதற்கான நல்வாய்ப்பை ஆளுங்கட்சிக்கு ஆதார் வழங்குகிறது. எனவே, மிரட்டல்களுக்கும் போலி வாக்குறுதிகளின் வசீகரத்திற்கும் ஆட்படாமல் இருக்க ஆளுங்கட்சியின் கருணையை வேண்டி நிற்பவர்களாக வாக்காளர்களை இது நிர்பந்திக்கும்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது மக்களின் "தன்விருப்பத்துடன்" செய்யப்படும் என்று அரசாங்கம் சொல்வது, ஒரு ஏமாற்று வித்தையாகும். நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைத்ததால் நலத்திட்டங்களுக்கு ஆதார் கண்டிப்பாக வேண்டுமென்று முடிவானதைப் போல, வாக்களிப் பதை ஆதாருடன் இணைப்பதால் வாக்களிக்கவும் ஆதார் கண்டிப்பாக வேண்டுமென்ற நிலைக்கே இட்டுச் செல்லும். ஆதார் தன்னளவில் மனிதத் தவறுகளும் பித்தலாட்டங்களும் நிரம்பியதாக (உண்மையில் வாக்காளர் பட்டியலை விட அதிகமாகஇருக்கும்போது, தரவுத் தொகுதிகளை ஆதார் "சுத்தப்படுத்தும்" எனச் சொல்வது அபத்தமானது.

குடியுரிமைக்கான ஆதாரம் ஆதார் அல்ல. அதனை வாக்களிப்பதுடன் இணைப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். இது  ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும்  நடவடிக்கையாகும். இதனை நாம் அனைத்து சக்திகளையும் கொண்டு எதிர்க்க வேண்டும். ஆதாரைக் கைவிடு! ஆதாரை வாக்களிப்பதுடன் இணைக்காதே என்போம்!

-எம்எல் அப்டேட் தலையங்கம்

   21-27 டிசம்பர், 2021

தமிழாக்கம் - செந்தில்

Image Thanks Liberation