தோழர் சங்கரநாராயணன் 6ஆம் ஆண்டு நினைவேந்தல்

மார்க்சிய-லெனினிய சிந்தனையாளரும் நெல்லை மாவட்டத்தில் இகக(மாலெ) கட்சியைக் கட்டமைத்தவர்களுள் ஒருவருமான மறைந்த தோழர் எஸ்.சங்கர நாராயணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 14.12.2021 அன்று பாளையங்கோட்டையில் நடை பெற்றது

நிகழ்ச்சியில் தோழர் சுப.உதயக்குமார், பேராசிரியர் சோமசுந்தரம், பிரபாகிருஷ்ணன், வழக்கறிஞர் கு.பழனி, ஆசிரியர் சங்கரநாராயணன், காஞ்சனை மணி, தொ..விஜயலெட்சுமி, சிந்து, சேகர், வழக்கறிஞர் ஜி.ரமேஷ், ஆர்ஒய்ஏ தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்.


 

ஆட்சி மாறியது. ஆனாலும் காட்சிகள் மாறவில்லை.

 

ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு ஆட்சிக்கு வந்த திமுக தான், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்ளின் கோரிக்கைகளுக்கு நியாயம் கேட்டுப் போராடுபவர்களை காவல்துறைக் கொண்டு ஒடுக்குகிறது

 

தமிழ்த்தாய் வாழ்த்து அவசியமில்லை என நீதிபதி சொன்னதற்காக அவசர அவசரமாக அரசாணையை தயார் செய்கிற இதே அரசுதான், நீதிபதியின் உத்தரவைக் காட்டி, சென்னையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவந்த ஏழை மக்களை அவரவர்  வீடுகளிலிருந்து விரட்டி அடிக்கிறது; ஆனால், ஆகப்பெரிய ஆக்கிரமிப்பு சாமியார்களான ஜக்கியும் பங்காருவும், அரசு நடவடிக்கைகள் எதுவுமின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.