நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம்

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

 

நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேசிய அளவிலான ஒருங்கிணைப் பாளர்கள் கூட்டம் 2021 டிசம்பர் 18, 19 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் கர்நாடகாவிலிருந்து வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உருவாவதற்கான விதை தமிழ்நாட்டில் போடப்பட்டது. இன்று நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொடுமையான கோவிட் &19 முதல் காலக்கட்டத்தில் ஆன் லைன் மூலமாக முதல் கூட்டம் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. பின்னர் நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட ஆன் லைன் கூட்டமாக நடத்தப்பட்டு சங்கம் உருவாக்கப்பட்டது. பெங்களூருவில் நடந்த இந்தக் கூட்டம்தான் முதன் முதலாக நடத்தப்பட்ட தோழர்கள் நேரடியாக கலந்து கொண்ட கூட்டம் ஆகும். வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என 45 பேர் கலந்து கொண்டனர். 2022 மே மாதம் 28,29 தேதிகளில் கொல்கத்தாவில் முதல் அகில இந்திய மாநாட்டை நடத்திடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக நாடு முழுவதும் அமைப்பை விரிவுபடுத்திட, உறுப்பினர்கள் சேர்ப்பு நடத்துவதும் மாநில மாநாடுகளை 2022 மார்ச் மாதத்திற்குள் நடத்திடவும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், சட்ட மாணவர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் மீது பிரச்சார இயக்கங்கள், போராட்டங்களை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து வழக்கறிஞர்கள் ஜோதிபாசு, அதியமான், ஜி.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது