அகில இந்திய விவசாயிகள் மகாசபை

தமிழ்நாடு மாநில அமைப்புக் குழு கூட்டம்

அகில இந்திய விவசாயிகள் மகாசபை- (ஏஐகேஎம்-) தமிழ்நாடு மாநில அமைப்பு குழு கூட்டம் மார்ச் 6 அன்று  தஞ்சாவூரில்  கூடியது. மாநில தலைவர் .சிம்சன் தலைமை தாங்கினார்மாநில பொதுச் செயலாளர் சந்திர மோகன் வேலை அறிக்கை முன்வைத்துப் பேசினார். பல் வேறு மாவட்டத்தில் இருந்து பங்கெடுத்துக் கொண்ட  மாநிலக் குழு உறுப்பினர்கள் மாவட்ட வேலை அறிக்கைகளை முன்வைத்தனர். உறுப்பினர் சேர்ப்பு, மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடு மற்றும் மாவட்ட மட்ட போராட்டங்கள் திட்டமிடப்பட்டன. சிபிஐ-எம்எல் மத்திய குழு உறுப்பினர் பழ.ஆசைத்தம்பி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் சார்பு திட்ட நெருக்கடிகளுக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் உள்ள திமுக அரசாங்கம் எதிர்கட்சியாக இருந்தபோது ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்த, எட்டுவழிச் சாலை, ஹைட்ரோகார்பன் போன்ற கார்ப்பரேட் சார்பு திட்டங்களுக்கு ஆதரவாக நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. சிப்காட் போன்ற தொழிற்துறை வளாகங்களுக்கு நிலவங்கிகள் அமைப்பது என்ற பெயரால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக வரைமுறையற்ற வகையில், செழிப்பான வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபடக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.