தேயிலை மேம்பாடு மற்றும் வளர்ச்சி மசோதா 2022:

இழப்பிற்கும் எதிர்கால வறுமைக்குமான புதிய ஏற்பாடு

அபிஜித் மஜூம்தார்

தேயிலைப் பயிரிடுதல், நிர்வாகம், தேயிலை நிறுவனங்களை கட்டுப்படுத்துதல், தேயிலை விதைக்கட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி, இன்னும் பல விசயங்களைக் கையாண்ட, 'பழைமை'யான தேயிலைச் சட்டம் 1953 நீக்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. இந்தியத் தேயிலை வாரியம் தனது செய்திக் குறிப்பில், "68 வருடங்களுக்கும் மேலான பிறகு தேயிலைச் சட்டம் 1953 இன் ஏற்கனவே இருக்கும் சில விதிமுறைகள் கால ஓட்டத்தில் 'காலாவதியாகி' விட்டன, எனவே இப்போது இருக்கும் அந்த சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டுமென முன்வைக்கப் பட்டுள்ளது. அதன்படி, தேயிலை தொழிற்துறை யின் நலனுக்கு நன்மையளிக்கும் விதத்தில் இந்தியத் தேயிலை வாரியம் செயல்படும்" என தெரிவித்துள்ளது". இந்த முடிவு ஏற்கனவே தேயிலை தொழிற்துறையின் அனைத்து பங்குதாரர்களுக்கும் சுற்றுக்கு விடப்பட்டுள்ள, தேயிலை மேம்பாடு மற்றும் வளர்ச்சி மசோதா 2022 என்ற வரைவு முன்வைப்பு வடிவத்தை எட்டியுள்ளது.

இந்த மசோதாவை முழுமையான சட்டமாக்க முயற்சிக்கும் ஒட்டுமொத்த செயல்முறையிலும் வெளிப்படும் அவசரத்தின் அளவு மிகவும் கவனிக்கத்தக்கது. இந்த மசோதா, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜனவரி 10, 2022 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும் ஜனவரி 21 க்குள் அதாவது 10 நாட்கள் என்ற மிகக் குறைந்த கால இடைவெளியில், பொதுமக்களும், பங்குதாரர்களும் தங்களுடைய மேலான கருத்துக்களை அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். செயல்முறையில் உள்ள இந்தத் தேவையற்ற அவசரத்தை மொத்தமுள்ள 11 மத்திய தொழிற்சங்கங்களில், 10 சங்கங்கள் மிக கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும், இந்த வரைவு மசோதா மீதான முதல்கட்ட கருத்துக்களை உள்ளடக்கிய கூட்டுக் கடிதம் எழுதி உள்ளனர். தேயிலை தொழில் அதிக உடல் உழைப்பு மிகுந்த தொழிலாக இருப்பதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கண்டிப்பாக புறக்கணிக்கப்படக்கூடாது, மேலும், அரசாங்கத்தின் அறிவிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள, பல்வேறு அமைச்சகங்களின் இணையதளங்களில் தொழிலாளர் கள் உலாவிக் கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கவும் கூடாது என இந்தக் கடிதத்தில், ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் குறிப்பிட் டுள்ளனர். முடிவெடுக்கும் செயல்முறைகளில் தகவலறிந்த ஜனநாயகப் பங்கேற்பை உறுதி செய்யும் நோக் கத்தை இந்த அவசர நடவடிக்கை தோற்கடித்து விடும். தேயிலை உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றை திறன்மிக்க விதத்தில் மேம்படுத்தும் அதேநேரத்தில், பொருளாதார, அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் தேயிலை வாரியம் செயல்படும் என இந்த மசோதா முன்வைத்துள்ளது என தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தொழி லாளர்களின் நலனில் பங்காற்ற வேண்டியதிலிருந்து  வேண்டுமென்றே தேயிலை வாரியம் விடுவிக்கப் பட்டிருக்கிறது. தேயிலை வாரியத்திற்கு வழங்க வேண்டிய, கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அழித்து, அதனை முழுமையாக நிராயுதபாணியாக்கியதற்கு எதிராக, தொழிற்சங்கங்கள் தங்கள் கண்டனத்தை எழுப்பியுள்ளனர். தற்போதைய சட்டங்களில் இருக்கும் பிரிவுகளான, அத்தியாயம் 3 (தேயிலைத் தோட்டங்களின் விரிவாக்கம் மீதான கட்டுப்பாடு), அத்தியாயம் 4  (தேயிலை மற்றும் விதை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு) ஆகியவற்றை முன்வைக்கப்பட்டுள்ள புதிய மசோதா 2022 இல் விலக்கி இருப்பதன் மூலம் தேயிலை வாரியத்தின் கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டுள்ளன என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 'ஒரு குறிப்பிட்ட நிலைமைகளில் தேயிலை நிறுவனங் களையும், தேயிலை ஆலைகளையும் மத்திய அரசாங்கம் நிர்வகிக்கும் அல்லது கட்டுப்படுத்தும்' என்ற விதிமுறையை உள்ளடக்கிய அத்தியாயம் 3 ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டிருப்பதில் தொழிற் சங்கங்கள் தங்கள் திகைப்பை வெளிப்படுத்தியுள்ளனதேயிலை தொழில் துறையின் நலனை பாதுகாப்பது, அதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாபெரும் நிலவளங்களை பாதுகாப்பது, அதன் மாபெரும் தொழிலாளர் பட்டாளத்திற்கு பாதுகாப்பை அளிப்பது ஆகியவற்றிலிருந்து தனது பொறுப்பை அரசாங்கம் தட்டிக் கழிப்பதாகவே இதனை நாம் காண முடியும். இவையனைத்திற்கும் மேலாக, மசோதா 2022 தொழிலாளர் சமூகத்தினை ஒரு பங்குதாரராக சேர்க்கவே இல்லை.

தொழிலாளர் சமூகங்கள் இந்த தேயிலை தோட்டங்களை நம்பியே தங்கள் வாழ்வை நடத்தும் நிலையில் உள்ளனர். ஆனால், இந்த முன்வைப்பு மசோதா, தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து கள்ள மவுனம் காக்கிறதுதொழிற்சங்கத் தலைவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள இயலாது என கருதுகின்றனர். மேலும், இது, தொழிலாளர் உரிமைகளையும், மனித உரிமைகளையும் அப்பட்டமாக மீறுவதற்கான சூழலை உருவாக்கும் எனவும் எண்ணுகின்றனர். ஒன்றிய வர்த்தக அமைச்சகம் ஆகஸ்டு 23, 2021 அன்று வெளியிட்ட அரசு ஆணையில், தேயிலைச் சட்டம் 1953 இன் பிரிவு 12-16 மற்றும் அதோடு தொடர்புடைய தண்டனை வழங்கும் பிரிவு 39-40 இன் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்துள்ளதை நமது வாசகர்களுக்கு நாம் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். தேயிலைத் தோட்டங்களைக் கட்டுப்படுத்துதல், வரம்பிடுதல் குறித்த இந்த பிரிவுகளை நிறுத்தி வைத்ததால் தேயிலைத் தோட்டங்களின் வரம்பற்ற விரிவாக்கத்திற்கும், 'தேயிலையற்ற நிலப்பகுதி'யிலும் தேயிலை பயிருடுவதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. இது தொழிலாளர் சமூகங்கள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் மீது மிகப்பெரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். இந்தப் புதிய மசோதா உருவாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் உள்ளார்ந்த ஆழமான சிக்கலை புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியமானதாகும். கடந்தகால வரலாற்றை பார்த்தால் 1980 திலிருந்து, அசாம், வடக்கு வங்காளம், கேரளா, அருணாச்சல் பிரதேசம், மிசோரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான தேயிலை உற்பத்தியாளர்கள் சட்ட அனுமதி பெறாமலேயே பல ஹெக்டேர் நிலப்பரப்புகளில்  தேயிலை பயிரிட்டனர். பெருமளவு விவசாய நிலங்கள் நில ஊக வணிகர்களால் கபளீகரம் செய்யப்பட்டு, தேயிலை உற்பத்தி மற்றும் தேயிலை விற்பனையில் தங்களது வளமான எதிர்காலத்தை கண்டடைய விரும்பிய புதிய தொழில் முனைவோர்களிடம் விற்கப் பட்டன. ஏற்கனவே வழக்கமான தேயிலை தோட்டங்களை வைத்திருக்கும் முதலாளிகள், தேயிலையைப் பதப்படுத்துவதற்கு வேறொரு இடத்தில் தனியாக ஆலைகளை ஏற்படுத்த முதலீடு செய்த புதுவகை நிகழ்வும் அரங்கே றியது. மேலும் அவர்கள் பல எண்ணிக்கையிலான சிறிய தேயிலை உற்பத்தியாளர் களிடம் இருந்து தேயிலையை கொள்முதல் செய்தனர். இந்த தனித்துவமான, தேவைக்கும் வழங்கு வதற்குமான முறைசாரா உறவினால், முறைப் படியாக பதிவுசெய்யப்பட்ட வேலை திட்டத்தி லுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகள் மீது எந்த பொறுப்பும் அற்றவர்களாக வேலை அளிப்பவர்களும், முதலாளிகளும் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்டதே நடந்தது. 'கேரள மாதிரி' என பரவலாக அறியப்பட்ட உற்பத்தி செய்பவர்களுக்கும், பதனிடுபவர்களுக்கும் இடையேயான இந்தப் புதிய வகை உற்பத்தி உறவால், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951 இன் கீழான நிபந்தனைகளிலிருந்து வேலையளிப் பவர்கள் தப்பித்துக்கொள்ள வழியேற்பட்டது. வரையறுக்கப்பட்ட கூலி, வீட்டுவசதி, உணவுப் பொருள் மற்றும் குடிநீர் வழங்குதல், தொழிலா ளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, தொழிலா ளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்குதல் ஆகிய செலவுகளை வேலையளிப்பவர்கள் வெற்றிகர மாகக் குறைத்து விட்டனர். தேயிலைச் சட்டம் 1953 இன் கீழ்வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்காக  ஏற்படுத்தப் பட்ட தேயிலை வாரியம் மேற்குறிப்பிட்ட இந்த நிகழ்வுப் போக்கினை எளிதாக்கவும், ஊக்குவிக்க வுமான அற்புதமான வேலையைச் செய்தது. மேலும் நாட்டின் சட்டங்களை புறக்கணித்த நேர்மையற்ற வேலையளிப்பவர்களின் இலா பத்தை அதிகரிப்பதற்கான உந்துசக்தியைப் அளித்தது.

எனவே முன்வைக்கப்பட்டுள்ள இந்த மசோதா 2022லிருந்து தொழிலாளர்களின் நல்வாழ்வை திட்டவட்டமாக நீக்கி விட்டதால், இதுவே இழப்பிற்கும் எதிர்கால வறுமைக்குமான புதிய ஏற்பாட்டிற்கான காரணமாகலாம். முறைப்படுத்தப் பட்ட வேலைவாய்ப்பு அளிக்கப் பட்டிருந்த தொழிலாளர்கள், எந்தவொரு சட்ட உரிமைகளும் இல்லாமல் பிணைத் தொழி லாளர்கள் என்ற நிலைமையின் கீழ் வேலை செய்பவர்களாக மாற்றப்படும் கட்டாய சூழ்நிலைக்கு இது வழிவகுக்கும். மேலும் இந்த மசோதா, இந்திய ரயில்வே துறைக்குப் பிறகு இரண்டாவதாக அதிக உடல் உழைப்பு மிகுந்த தொழில் துறைக்கு சேரவேண்டிய பலன்களைப் பெறவிடாமல் தடுக்கும் செயலையே செய்கிறது. குறிப்பாக தேயிலைத் தொழிலாளர்களின் சட்ட உரிமைகளைப் பாதிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் இழிவான பிரிவுகளுக்கு ஈடு செய்வதாகவே மத்தியிலுள்ள மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையையும் கான முடியும்.