ஏஐசிசிடியுவின் 11ஆவது அகில இந்திய மாநாட்டை பெரு வெற்றி பெறச் செய்வோம்!

ஏஐசிசிடியுவின் 11ஆவது அகில இந்திய மாநாட்டை பெரு வெற்றி பெறச் செய்வோம்!

தொழிலாளர் வர்க்கத்தின் மீதான பாசிச தாக்குதலை முறியடிப்போம்

சளைக்காத முயற்சிகள் மூலம் தடைகளை கடந்து ஏஐசிசிடியுவை புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்வோம்!

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை: வெற்று ஆரவார அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதற்கடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெற்று ஆரவாரம்தான் என அம்பலமாகியுள்ளது. முழுமையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பரிசீலனை செய்தால் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இருக்கிறது.

விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க, விவசாயிகளின் வாழ்வா சாவா எனப்படும் இயற்கை பேரிடர்கள், பயிர்க் காப்பீடுகள், விவசாய கடன்கள் மற்றும் தள்ளுபடிகள் வரை ஒதுக்கப்பட்ட நிதி மிகமிகக் குறைவானதே !

ரயில் பயணிகளுக்கு விரதச் சாப்பாடு! 100 நாள் வேலை தொழிலாளிக்குக் காயுது வயிறு! மோடி அரசின் வேதனை!!

பார்ப்பன வழிபாட்டுமுறையின்படி "இரயில் பயணிகளுக்கு வெங்காயம், பூண்டு சேர்க்காத விரதச் சாப்பாடு நவராத்திரியின் போது கொடுக்கப் படப்போவதாக" இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அவர்கள் கவனம் எங்கே இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்திய அரசின் திட்டமிட்ட செயல் பாட்டால், இந்தியாவில் வேலையுறுதிச் சட்ட வேலை அட்டை வைத்திருக்கும் 15.63 கோடி ஏழை குடும்பங் களுக்குச் சாதாரணச் சாப்பாடே பறிபோகிறது. பார்ப்பன இந்துப் பண்பாட்டைக் காப்பாற்றுவதில், அல்லது அதுபோல நடிப்பதில் உள்ள கவனம் சட்டக் கடமையை நிறைவேற்றுவதில் இந்த அரசுக்கு இல்லை.