மக்கள் கோரிக்கை மாநாடு
24.2.22 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்புறம் இகக(மாலெ) சார்பாக மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. வீடு-, வீட்டுமனை, அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, சுடுகாடு ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிமிரிவி மாவட்டச் செயலாளர் தோழர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்துக் கொண்ட நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி மற்றும் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினர். தோழர் பாலசுந்தரம் தனது உரையில், நூறு நாள் வேலைத் திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். மேலும், கூடுதலாக தமிழ்நாடு அரசாங்கம் இந்த கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி கிராமப்புற ஏழைகளுக்கு 100 நாட்களும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், பிடிஓவை சந்தித்து மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.