- ✓ லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை விசயத்தில் நீதியை நிலைநாட்டத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும்…
- ✓ டில்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையும்,
- ✓ போராட்ட வழக்குகளை திரும்ப பெறாமல் துரோகம் இழைப்பதைக் கண்டித்தும்…
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின்
மார்ச் 21 : நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. தோழர். செல்வராஜ் தலைமை தாங்கினார். எஸ்கேம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன், தங்கவேலு, சிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் எஸ்கேஎம் மாநில செயற்பாட்டு குழு உறுப்பினர் சந்திர மோகன் கண்டன உரையாற்றினர். வி.அய்யந்துரை, அன்பு, எஸ்யூசிஐ மோகன் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கெடுத்துக் கொண்டனர்.
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி அரசாங்கத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கும், ஏப்ரல் 11-17 வரை ஒருவார காலம் நடைபெறவுள்ள MSP- வேளாண் விளைபொருட்களுக்கு
குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்திடக் கோரும் கோரிக்கை இயக்கத்திற்கும், விவசாயிகளைத் தயாராகும்படி அறைகூவல் விடப்பட்டது.