உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக விளங்கியவர் ஆசிரியர், தோழர். சக்திவேல்

ஆசிரியர், தோழர் சக்திவேல் அவர்கள் வாகன விபத்தொன்றில் அகால மரணம்  அடைந்தது கந்தர்வக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஆசிரியப் பெருமக்கள், இடதுசாரி இயக்கத்தினர், உழைக்கும் மக்கள், மாணவர்கள் மத்தியில் பேரதிர்வை ஏற்படுத்தியது.

எளிய விவசாய குடும்பத்தில் வீரடிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர் தோழர் சக்திவேல். கல்லூரி படிக்கும்போதே விவசாய வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார். 1999ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதலாய் அவர், மாணவர் நலன், ஆசிரியர் நலன், மக்கள் நலன் என நின்று புரட்சிகர இடதுசாரி அரசியலை தழுவிக்கொண்டார்.     

 மாவீரன் பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23, 2022 அன்று தோழர் சக்திவேலுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி இகக(மாலெ) சார்பாக நடைபெற்றது. இகக(மாலெ) மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். நிகழ்வில் தோழர் சக்திவேலின் உருவப் படத்தை இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சங்கர் திறந்து வைத்து உரையாற்றினார்நிகழ்ச்சியில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே. நடராஜன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வளத்தான், ஏஐசிசிடியு மாநில பொதுச்செயலாளர் தோழர் ஞானதேசிகன், இகக மாவட்டச் செயலாளர் தோழர் மாதவன், இக(மாலெ)-மக்கள் விடுதலையின் மாநில பொதுச்செயலாளர் தோழர் கசி.விடுதலைக் குமரன், மேனாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.தமிழரசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் திரு. பழனியாண்டி, திரு. ராசு, அம்பேத்கர் சிலை அமைப்பு கமிட்டியின் தோழர் கோவி.ராஜேந்திரன், இகக(மா) மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ராமையன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாவட்டத் தலைவர் தோழர் ராசாங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர் ரேவதி, ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் சிவராஜ், தமிழக ஆசிரியர் கல்வி பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கோவி. ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.