ஜூன் 20, 2021 நெல்லை_மாவட்டம், பாசிச பாஜக-இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி இந்து முன்னணி கும்பல்களுக்கு ஆதரவாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாக, அவதூறாகப் பேசிய நெல்லை நகர் காவல் உதவி ஆணையர் திரு.விஜயகுமார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக கட்சி, அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.
இகக(மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர்.த.சங்கரபாண்டியன், தோழர் என்.கே. நடராஜன் இகக(மாலெ) மாநிலச்செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ரமேஷ் உள்ளிட்ட பல தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.