கோவை: தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம், குறைந்த பட்ச சம்பளத்தை அமுல்படுத்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கு, கொரானா காலத்தில் அரசு அறிவித்த முன்களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஊதியம் வழங்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள குளறுபடிகளை களைந்து சேமிப்பில் இருந்து பணம் எடுத்து கொள்ள உதவி செய், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 27.6.2022 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன், இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் வெங்கடாசலம் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினார்கள்.