சிபிஐ(எம்-எல்) தலைவர் டிபி பக்சி 4-ம் ஆண்டு நினைவு நாள்!
செவ்வணக்கம்!
70 களில் நக்சல்பாரி இயக்கம் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளான போது, ஜூலை 28, 1974 ல் கட்சி புனரமைக்கப் பட்ட பின்னர், அகில இந்திய அளவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்)- விடுதலை கட்சியை வளர்த்து எடுப்பதில் முக்கியமான பங்கு வகித்தார். துர்காபூர் REC மண்டல பொறியியல் கல்லூரியிலிருந்து CPIML கட்சிக்கு வந்த தோழர்கள் வினோத் மிஸ்ரா, பிரிஜ் பிகாரி பாந்தே மற்றும் சில முழுநேரப் புரட்சியாளர்களில் அவரும் ஒருவராவார்.
2018 மார்ச்சில் நடைபெற்ற கட்சியின் 10 வது அகில இந்திய மாநாட்டுக்கு முன்னர் வரை, அரசியல் தலைமை குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தார். நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களில் (குறிப்பாக ஒடிசா, அசாம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் தமிழ் நாடு உட்பட) கட்சியை வளர்க்க பொறுப்பு ஏற்று சிறப்பாக பணியாற்றினார். கட்சி செயல்பாடு சிக்கலாக இருந்த மாநிலங்களில் ஒற்றுமை, கூட்டுத் தலைமை, புதிய முன்முயற்சிகள் ஆகியவை மூலமாக வளர்ச்சியை கொண்டு வர வழிகாட்டியவர்.
கட்சி தொழிலாளர் வர்க்க துறையின் பொறுப்பாளராகவும், குறிப்பாக ரெயில்வே அரங்கத்தை வளர்க்கவும் பணியாற்றினார். எளிமையானவர், சிறந்த படிப்பாளி, எழுத்தாளர், தலைசிறந்த அமைப்பாளர். கடினமான சூழ்நிலைகளிலும்
இனிமையாக பழகக் கூடியவர்.
தோழர் வழிகாட்டிய, விட்டுச் சென்ற கடமைகளை நிறைவேற்றுவோம் !