செப்.18 அன்று நாகப்பட்டினத்தில் துவங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - (AIKS- CPIM) 30 வது மாநில மாநாட்டில், பொது அமர்வில், அகில இந்திய விவசாயிகள் மகாசபை AIKM மாநில குழு சார்பில், தோழர். சந்திரமோகன், மாநில பொது செயலாளர் வாழ்த்துரை வழங்கினார்.

கார்ப்பரேட் சூறையாடலுக்கு எதிராக இடதுசாரி விவசாய சங்கங்கள் இணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன்… "கார்ப்பரேட் முதலாளிகளின் ஹைட்ரோகார்பன் திட்டங்களால்

காவிரி டெல்டா பாலைவனமாக்கப்படுவதை தடுத்திட, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்திட… டெல்டா விவசாயத்தை, விவசாயிகள் கழுத்தை நெரிக்கும் கோவில் - மடங்கள் நிலங்களை உழுவருக்கே சொந்தமாக்க அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் ; நிலவுடமை மிச்சசொச்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் !" என்று குறிப்பிட்டார்!

https://fb.watch/fEdwzGiNA0/