இகக(மாலெ)யின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் கட்சியின் ஆகச் சிறந்த அமைப்பாளரும் தமிழ்நாட்டு கட்சி வேலைகளுக்கு மிகவும் பரிச்சயமானவருமான தோழர் டி.பி. பக்க்ஷியின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சி கந்தர்வகோட்டையில் ஜூலை 26, 2022 அன்று மாநிலக்குழுக் கூட்டத்தின் இரண்டாவது நாளில் நடைபெற்றது. தோழர் பக்க்ஷியின் உருவப் படத்துக்கு இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன், மத்தியக்கமிட்டி உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம், தோழர் சந்திரமோகன், தோழர் ஆசைத்தம்பி, தோழர் சோ.பாலசுப்பிரமணியன் மற்றும் மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர். அதே நாளில் தமிழ்நாடு முழுவதும் தோழர் பக்க்ஷிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.