2022 செப்டம்பர் 28

2022 செப்டம்பர் 27 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சகம், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (PFI) மற்றும் ரிகேப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அதன் இணைந்த அல்லது சார்பு அமைப்புகள் அல்லது முன்னணிகளைத் அறிவிப்பு ஒன்றை தடை செய்து வெளியிட்டுள்ளது. அனைத்திந்திய இமாம் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, இளவல் முன்னணி, எம்பவர் இந்திய ஃபவுண்டேசன் மற்றும் ரிகேப் ஃபவுண்டேசன், கேரளா ஆகியவை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1967ன் (Unlawful Activities (Prevention) Act, 1967) கீழ் ஒரு 'சட்டவிரோத அமைப்பு' என 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. 2022 செப்டம்பர் 22 அன்று தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறை மற்றும் மாநில காவல்துறையினரால் சோதனைகள் நடத்தப்பட்டு பிஎப்ஐயின் தலைவர்கள், உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து இந்த தடை அறிவிப்பு வந்துள்ளது.

அரசு எந்திரத்தை, அரசுத் துறைகளை ஆயுதமாகப் பயன்படுத்தி அரசு அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராகப் பேசுபவர் குரல்வளையை நெரிக்கும் அரசாங்கத்தின் செயல்கள்தான் பிஎப்ஐ மற்றும் அதன் தொடர்பு டைய அமைப்புகள் மீதான தடையாகும்.

பொதுமக்கள் மத்தியில் இஸ்லாம் பூச்சாண்டியை பரப்பவும் இஸ்லாமிய சமூகத் தையே சாத்தானாகச் சித்தரிக்கவுமான ஒரு திட்டமிட்ட முயற்சியே இந்தத் தடை. இது இஸ்லாமியர்களை மொத்தமாக சிறையி லடைத்து சித்தவதை செய்யும் நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் துன்புறுத்தலாகும்.

இது ஆட்சியின் ஜனநாயகக் கோட்பாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். இது மேலும் இஸ்லாமிய சமூகத்தை அரசியல் அமைப்பி லிருந்து அந்நியப்படுத்துவதாகும். இது அரசாங்கம் . இஸ்லாமியர்களை மொத்தமாக கைது செய்ய வழி வகுக்குப்பதோடு இஸ்லாமியர்களைக் குறிவைத்து தாக்குவதற்கும், பழிவாங்குவதற்கும் பயன்படுத் தப்படும்.

ஆர்எஸ்எஸூம் அதன் தொடர்புடைய அமைப்புகளும் வெளிப்படையாகவே இஸ்லாமி யர்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கும்போதும் அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய மாண்புகளுக்கு எதிராகச் செயல்படும் போதுகூட அவர்கள் தண்டனை ஏதும் இன்றி சுதந்திரமாகத் திரிவதற்கு அனுமதியளித்து விட்டு, 2 பிஎப்ஐ மீது தடை என்பது அப்பட்டமான பாரபட்ச நடவடிக்கையாகும். சமீபத்தில், பல பத்தாண்டுகளாக ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியராக இருந்த யஷ்வந் சிண்டே, 2006ஆம் . ஆண்டு நடைபெற்ற நன்தெத் குண்டு வெடிப்பு வழக்கில் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார். அதில் -ஆர்எஸ்எஸ்ஸூம் விஸ்வ ஹிந்து பரிசத்தும் நாடு ர முழுவதும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் குண்டு தயாரிக்கும் பயிற்சிகள் பற்றியும் பல கூட்டங்களில் திட்டம் தீட்டினார்கள் என்பதை விவரித்துள்ளார். இது பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதற்குப் பதிலாக மத்திய புலனாய்புத் - துறையானது, முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியரான 5 யஷ்வந் சிண்டே தன்னை வழக்கில் ஒரு 5 சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்துள்ள மனுவினைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோருகிறது.

பாஜக அரசாங்கம், எதிர்க் கருத்துக்கள் எவ்வடிவத்தில் வந்தாலும் அதை ஒடுக்குவதற்கு
கொடூரமான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1967 (Unlawful Activities (Prevention) Act, 1967)ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. குற்றவியல் சட்டத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை நீர்த்துப் போகச் செய்து, நீண்ட காலத்திற்கு பிணையே கிடைக்காமல், சிறையில் அடைப்பதற்கு வழிவகை செய்கிறது UAPA சட்டம். இந்தச் சட்டத்தில் பாஜக அரசாங்கம் கொண்டு வந்துள்ள பல்வேறு திருத்தங்களும் அதன் கொடூரத்தன்மைக்கு வலுவூட்டுவதாக மட்டுமே உள்ளது.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளால் உருவாக்கப்படும் வெளிப்ப டையான வெறுப்புப் பிரச்சாரத்தால் இஸ்லாமிய சமுதாயம் சமூகத்தின் விளிம்பு நிலைக்கு ஏற்கனவே தள்ளப்பட்டுவிட்டது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீதான தற்போதைய தடையானது இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்லாமிய சமுதாயத்தைக் குறிவைப்பதாகும்

ஃபாப்புலர் பிரண்ட் தடை குறித்து திபங்கர், பொதுச் செயலாளர் இகக(மாலெ)

     ஐந்து நாட்களாக, ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதல் சோதனைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் நடத்திய பிறகு, உள்துறை அமைச்சகம் பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியாவும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் பலவும் சட்டவிரோத அமைப்புகள் என்று அறிவித்து தடை செய்திருக்கிறது.

எனவே இந்த தடை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகவும் அரசியல் துன்புறுத்தலாகவுமே தோன்றுகிறது. இது இந்திய இஸ்லாமிய வெகுமக்களை சிறைப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். இஸ்லாமியர்களை குறிவைத்து, அவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் பாலியல் வன்முறை செய்ய வேண்டுமென்று வெளிப்படையாக அழைப்பு விடுத்து வரும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய அமைப்புகளும் இந்து அடையாளத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் அமைப்புகளும் தண்டனைப் பற்றிய அச்சமின்றி திரிந்து கொண்டிருக்க (உள்துறை, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீது அறிவித்திருக்கும் இந்தத் தடை) அப்பட்டமான பாரபட்சம் கொண்டதாகும். இந்த அழிவுகரமான மதவாத பாரபட்சத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.