புரட்சிகர இளைஞர் கழகத்தின் 7வது அகில இந்திய மாநாடு செப்டம்பர் 10-11 தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்தின் நீலாம்பர் பீதாம்பர் நகர் என்று அமைப்பாளர்களால் பெயரிடப்பட்ட, மேதினி நகரில் தொடங்கியது. 1857 கிளர்ச்சியின் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் மாநாட்டு இடம் நீலாம்பர் பீதாம்பர் நகர் என மறுபெயரிடப்பட்டிருந்தது. மாநாட்டின் பொது அமர்வை தோழர் திபங்கர் தொடங்கி வைத்தார். மேலும் இகை(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வினோத் சிங், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாண வர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுசேதாடே, அகில இந்திய மாணவர் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரசென்ஜித் குமார், பீகாரின் இகக(மாலெ) எம்எல்ஏ அஜித் சிங் குஷ்வாஹா, புரட்சிகர இளைஞர் கழகத்தின் ஜார்கண்ட் தலைவர் ஜெய்விர் ஹன்ஸ்தா ஆகியோரும் உரையாற்றினர். 

முறைபடி அரங்க நிகழ்வுகள் துவங்கும் முன், மாநாட்டின் விருந்தினர்களும், பிரதிநிதி களும் லெஸ்லிகஞ்ச் சென்று, பாலமுவின் வனங் களிலும் வயல்களிலும் சுமார் இரண்டு ஆண்டு களாக 1857ஆம் ஆண்டின் தீச்சுடரை உயிர்ப்போடு வைத்திருந்த நீலாம்பர், பீதாம்பர், அவர்களது சக போராளிகள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினர். நீலாம்பரும் பீதாம்பரும் ஒரு போதி மரத்தில் தூக்கிலிடப்பட்ட கிராமத்திற்கும் குரைன் பத்ரா பஞ்சாயத்தில் நமது மகத்தான தியாகிகளின் சடலங்கள் வீசப்பட்ட கிணறு உள்ள வயலுக்கும் சென்றனர்.

1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியை கிட்டத்தட்ட
ஈராண்டுகளுக்கு நடத்தி, காலனித்துவ ஆட்சியாளர்களால் 1859 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட ஜார்கண்டின் மாபெரும் தியாகிகள் நீலாம்பர், பீதாம்பர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்த பிறகு மாநாடு தொடங்கியது.

தோழர் திபங்கர் தனது உரையில், மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயக இந்தியாவுக்கான இன்றைய போரில் இளம் இந்தியா கவனம் செலுத்தும்போது, HSRA இந்துஸ்தான் சோசலிச குடியரசு படையின் ஆவணத்திலிருந்து உத்வேகம் பெறவேண்டும் என்று கூறினார். மேற்கூறிய இரண்டு இடங்களிலும் 1857ன் இந்த மாவீரர்களுக்கு நினைவுச்சின்னம் ல்லை, ஆனால் இதக(மாலெ)யின் பாலமு, ஜார்கண்ட் பிரிவுகளின் முழு ஆதரவுடன் உள்ளூர் குடிமக்களால் அவர்களின் நினைவுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டம் நடந்து வருகிறது.

புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநாடு இந்த கோரிக்கையை இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நினைவேந்தலில் ஒரு முக்கிய பிரச்சி னையாக ஏற்றுக்கொண்டது.

நீலாம்பர், பீதாம்பர்புரத்திலிருந்து (லெஸ்லிகஞ்ச்) மாநாடு நடைபெறும் இடத்திற்குத் திரும்பும் வழியில் சுபாஷ் போஸ், டாக்டர் அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரின் சிலை களுக்குத் தலைவர்கள் மாலை அணிவித்தனர். மாநாட்டு இடம் முன்பு மகாத்மா காந்தியின் பெயரிடப்பட்ட நகரமன்றம் ஆகும். காந்தியின் மார்பளவு சிலை அங்கே இன்னும் உள்ளது. ஆனால் ரகுபர் தாஸ் ஆட்சியானது புனரமைக் கப்பட்ட நகரமன்றத்திற்கு சற்று வெளியே தீன்தயாள் உபாத்யாயாவின் மார்பளவு சிலையை நிறுவியது. ரோஹித் வெமுலா, புரட்சிகர மாணவர்இளைஞர் இயக்கத்தின் எப்போதும் புன்னகைக்கும், எப்போதும் உத்வேகம் தரும் தியாகி தோழர் சந்திரசேகர் ஆகியோரின் பெயரிடப்பட்ட மாநாட்டு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்பு, பிரதிநிதிகளும் விருந்தி னர்களும் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திரம், ஜனநாயகத்திற்காக போராடிய நமது தியாகிகள் அனைவருக்கும் மரியாதை செலுத்தினர்.

இந்தியாவிற்கும் இந்திய இளைஞர்களுக்கும் எதிரான பாசிச சதியை முறியடிக்கவும், அனைவருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, சுகாதார உரிமைகளை வென்றெடுக்கவும், பாசிசத்தால் கைப்பற்றப்படுதலில் இருந்து குடியரசைப் பாதுகாக்கவும், கார்ப்பரேட் கொள்ளை, அழிவிலிருந்து சுற்றுச்சூழல், காலநிலையை பாதுகாக்கவும், இந்தியா முழுவதும் உள்ள 18 மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

மாநாட்டில் 103 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கவுன்சில், 51 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகிகள் குழு, 6 தேசிய துணைத் தலை வர்கள், 6 தேசிய செயலாளர்கள் ஆகியோருடன்
மனோஜ் மன்சில் தலைவராகவும், நீரஜ் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து எம்.சுந்தர்ராஜ் தேசிய துணைத் தலைவராகவும் உதுமான் அலி தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பெரோஸ் பாபு மற்றும் தனவேல் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார்கள்.

மாநாட்டில் தோழர்கள் சுந்தர்ராஜ், உதுமான் அலி, பெரோஸ் பாபு, மங்கையர்கரசி, மதன் குமார், அபிதா, ரஞ்சித் குமார், காளிதாஸ், மணீஸ்வரன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.