கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினோ ஹூண்டாய் நிறுவனத்தின், ஒரு கோடியாவது காரை ஓடவிடும் நிகழ்ச்சியில், தொழில் வளர்ச்சிக்கு தொழில் அதிபர்கள் ஆதரவே முதன்மையானது என்றார். பாஜகவின் மோடி தலைமை தாங்கும் ஒன்றிய அரசின் பாதைதான் ஸ்டாலின் பாதையா? என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவி லேயே முதல்முறையாக 1972ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப் பட்டது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழகம். நிறுவனங்கள் சட்டம் 1956\2013 கீழ் 1.4.2010ல் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு ஒரு முன்னேறிய மாநிலம் என்று சொல்வதற்கு, கொள்முதல், சேமிப்புக் கிடங்குகள், 23 நவீன அரவை ஆலைகள், பொதுவிநியோக அங்காடிகள் என விரிவான கட்டமைப்பு கொண்ட இந்த நிறுவனம் ஒரு முக்கிய காரணம். இது மிக முக்கியமான மக்கள் சேவை நிறுவனம் ஆகும். உணவுப்பாதுகாப்பில், மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை பாராட்டு வதற்கு இந்த விரிவான வலைப்பின்னல் கொண்ட இந்த நிறுவனமே காரணம்.
இந்த அமைப்பில் சரிசெய்யப்பட வேண்டிய பல குறைபாடுகள் உள்ளன. கிராமப்புர, நகர்ப்புர ஏழைகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் அதிருப்திகளை காட்டி வருகிறார்கள். ஆனாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, கடந்த 50ஆண்டுகளாக தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பொன்விழா ஆண்டில், தொழிலாளர்,
அவர்களை வெளியேற்றும் வேலையில் இறங்கி யுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மட்டுமின்றி, விவசாயிகள், பொதுவிநியோக அங்காடிப் பொருள்களையே பெரிதும் நம்பியிருக்கும் கிராமப்புர, நகர்ப்புர ஏழைகள் ஆகியோரை மிக மோசமாக பாதிக்கும் வகையில் தனியார் மயமாக்கி பொதுவிநியோகத்தை ஒழித்து கட்டும் முயற்சிகளில் திமுக ஆட்சி இறங்கிவிட்டதோ என்ற பேரதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் முதல் கட்டமாக தநாநுபொவாக த்தின் கீழ் செயல்படும் வட்டசெயல்முறை கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், சேமிப்புக் கிடங்குகள் நேரடி நெல்கொள்முதல் சேமிப்பு கிடங்குகள், திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் பணிசெய் யும் சுமைப்பணியாளர்கள், தூய்மைப்பணி தொழிலாளர் பணிகளை அவுட் சோர்ஸ் (நிறுவன தொழிலாளரைக் கொண்டு நிறுவனமே செய்யாமல் ஒப்பந்த முறையில் வெளி யாட்களைகொண்டு செய்ய) முறையில் பணிசெய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சில கிடங்குகளில், ஒப்பந்ததாரர்களை, நியமனமும் செய்துள்ளது. இதைக் கண்டித்து, ஏஐசிசிடியூ சங்கம் 28.2.22ல் சென்னை, மாநிலத் தலமையகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட முற்றுகை போராட்டத்தை நடத்தியது.
பொதுத்துறை, அரசுத்துறைகளில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த தற்காலிக, கேசுவல் தொழிலாளர்களை வரன்முறை படுத்துவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதிக்கு (வாக்குறுதி எண்153) எதிரானது என கண்டனம் தெரிவிக்கப் பட்டது. சுமைதூக்கும் பணியை வெளியில் கொடுப்பது (அவுட்சோர்ஸ்) என்பது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருமானத்தை பறிப்பதாகவும், பணியிலிருந்து விரட்டுவதாக வும் உள்ளது. மேலும் தநாநுபொவா கழகத்தில்,
பயன்பாடுகளி லிருந்தும் வெளியேற்றுவதாகவும் உள்ளது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதிலும்
தனியார் மயம்?
டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் இல்லாத நிலை, வியாபாரிகள் நெல் அளவையில் மோசடி, கொள்முதல் செய்த, நெல்லுக்கு பணம் கெடுக்காமல் இழுத்தடிப்பு என்ற இழி நிலையில் அரசே நெல்லை கொள்முதல், செய்ய வேண்டும் என விவசாயிகள் நடத்திய போர்க்குணமிக்க போராட்டங்களாலும், சிறைகளை, நிரப்பிய தாலும், அன்று (1972) ஆட்சியில் இருந்த திமுக, தநுபொவாக த்தை துவக்கி நேரடியாக அரசே கொள்முதல், செய்தது. 2002-2003ல் 347 நேரடி கொள்முதல் மய்யங்கள் மூலம், 1.59 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டது. 2019-2020ல் 2113 நேரடி கொள்முதல் மய்யங்கள் மூலம் 28.10 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப் பட்டிருக் கிறது. இதன்மூலம், நேரடிக்கொள்முதல் மய்யங்களின் தேவையையும் பொதுவிநியோகம் இதை ஆதாரமாகக் கொண்டிருப்பதையும் புரிந்துகொள்ள முடியும். மொத்த நெல் கொள்முதலில் 34%யே அரசு கொள்முதல் மய்யங்கள் செய்கின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குகளுக்கு உரிய நேரத்தில் அனுப்பாமல் திறந்தவெளிக் கிடங்கில் வைத்ததால் ஒருகோடி மதிப்புள்ள 50 ஆயிரம் மூட்டைகள் கும்பகோணத்தில் மழையில் நனைந்து வீணானதை டிடி நெக்ஸ்ட் ஜனவரி 1, 2022 (தினத்தந்தியின் ஆங்கிலப் பதிப்பு) சுட்டிக் காட்டியுள்ளது. எனவே நேரடி கொள்முதல் மேலும் அதிகப்படுத்த வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை புறக்கணித்து விட்டு கொள்முதலை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைப்பது விவசாயிகள் தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போடுகிற செயலாகும்.
குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடைகள்
தமிழகத்தில் வருமானம் பாகுபாடின்றி 2
கோடியே 15 லட்சம் குடும்பங் களுக்கும் ரேசன்
அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. தநாநுபொவாக ன்கீழ் 1455 நியாயவிலை கடைகள், கூட்டுறவு
துறையில் 35000 ரேசன் கடைகள் என 37,342
கடைகள் மூலம், சிறைச்சாலைகள், சத்துணவு
மையங்கள், காவலர்கள் வரை, உணவுப்பொருள்
விநியோகம், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தமிழக அரசு, மக்கள், வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட உள்கட்டுமான வசதிகள் கொண்ட நவீன அரிசி ஆலைகளில் 23ல் 13, தனியார் அரவை முகவர்களுக்கு, தாரை வார்த்து விட்டது. நவீன அரிசி ஆலைகள் இயக்கத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யவே ஆலைகளை, தனியாருக்கு வழங்குவதாக முன்வைக்கிறார் உணவு அமைச்சர். இந்த அரவை முகவர்களே நெல் கொள்முதலையும் செய்ய அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. இவர்கள் லாபநோக்கத்துடன், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர் மூலம் நெல்லை கொள்முதல் செய்வார்கள். இதனால் விவசாயிகள் போராடிபெற்ற நெல் கொள்முதல் உரிமையை இழப்பார்கள்.
தநாநுபொவாக ன்கீழ் செயல்படும் ரேசன்கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றவும் முயற்சிக்கின்றனர். 1986ம்ஆண்டு எம்ஜிஆர் அரசு, ரேசன் கடைகளை, தநாநுபொவாக லிருந்து கூட்டுறவு துறைக்கு கட்டாயப்படுத்தி மாற்றியது. போகமறுத்த 1400 கடை ஊழியர்களை தநாநுபொவாக ஊழியர்களாக பதிவு செய்து பணி அமர்த்தும் உத்திரவை உச்சநீதிமன்றம் சென்றுதொழிற்சங்கங்கள் பெற்று வந்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜனநாயக விரோதமாக இப்போதைய அரசு செயல்படுகிறது. புதிதாக தொடங்கப்பட்ட 6 மாவட்டங்களில், மண்டல மேலாளராக கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளரை நியமனம் செய்து துணை மேலாளர் மேலாளர் பதவி உயர்வை தடைசெய்கிறது. மேலும் இதுபோன்ற நியமனங்கள் மூலம் 48 பணி இடங்களை ரத்து செய்கிறார்கள். படிப்படியாக ரேசன் கடைகளை, தனியாருக்கு வழங்கி பொதுவிநியோகத்தை, அழித்து மக்கள் உணவு பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வேலையில் ஈடுபட்டுவருகிறது.
பொதுத்துறை தனியார் மயம்!
இவை வெறும் ஊழியர்பிரச்சனை மட்டு மல்ல, ஒட்டுமொத்த சமூக பிரச்சனை என்பதை அறிந்த ஏஐசிசிடியூ தலைமையில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், தநாநுபொவாக தனியார்மய எதிர்ப்பு, விவசாயிகள், தொழிலாளர் நுகர்வோர் பாதுகாப்பு மாநாடு நடத்த முடிவெடுத்தது. 24.7.22ல் அன்று திருவாரூரில் நடந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சுமைதூக்குவோர், மற்றும் ஊழியர்களும் பங்கேற்.
றனர். பரந்த ஊடக செய்தி, தநாநுபொவாக ஊழியர்கள் மத்தியில், பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஏஐசிசிடியூ, சிஐடியூ,ஏஐடியூசி, ஐஎன்டியூசி, 4 சங்கங்கள் துவங்கிய முன்முயற்சி யில் கடந்த 17.8.2022 அன்று சென்னை தலைமையகம் முன்பு நடந்த கறுப்பு பேட்ஜ் ஆர்ப்பாட்டத்தில் 4 சங்கங்களின் அழைப்பை ஏற்று சங்க பாகுபாடின்றி அனைத்து சங்க ஊழியர்களும் பங்கேற்றனர். கடந்த 26.8.22ல் நடைபெற்ற மாநிலம் தழுவிய, மண்டலங்கள் கறுப்பு அட்டை அணியும் போராட்டமும் மிகவெற்றிகரமாக நடைபெற்றது. ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபரில், 1000 இடங்களில் நடைபெற உள்ள மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச்செய்ய போராட்ட ஆயத்த மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மண்டல மாநாடு மதுரையில் நடை பெற்றது.
இந்த மாநாட்டில் ஏஐசிசிடியூ, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏஐசிசிடியூ சார்பாக, தோழர் சங்கரபாண்டியன், குகானந்தன், சின்னதுரை சிறப்புரை நிகழ்த்தினர். நெல்லை தூத்துக்குடி, திண்டுக்கல், மாவட்டங்களிலிருந்து சங்க மாநில நிர்வாகிகள் தோழர்கள், L.மரியராஜ், என். கந்தசாமி, . சுரேஷ், இக்க(மாலெ) மதுரை மாவட்டச் செயலாளர் சி.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசே, டிஎன்சிஎஸ்சி நிர்வாகமே வட்டகிடங்குகள், திறந்தவெளி கிடங்குகளில் சுமைதூக்குவோர் பணியை டெண்டர் விட்டு, தொழிலாளரை வெளியேற்றாதே
'சுமைதூக்குவோருக்கு, 2022ல் வழங்க வேண்டிய கூலியை இந்திய உணவுக்கழக
தொழிலாளர்களுக்கு இணையாக நிர்ணயம் செய்து காலதாமதமின்றி வழங்கு, பச்சை அட்டைவழங்கு, ஒராண்டு பணி முடித்த சுமைதூக்குவோரை வரன்முறை படுத்து.
டிஎன்சிஎஸ்சி ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றாதே, அனைத்து ரேசன் கடைகளையும், தநாநுபொவாக நிர்வாகமே ஏற்று நடத்து. தநாநுபொவாக ல் கூட்டுறவு அதிகாரிகளின் நியமனத்தை ரத்துசெய்.
நவீன அரிசிஆலையை,நெல் கொள்முதலை தனியார்மயம் ஆக்காதே, பொதுவிநியோகத்தை சீர்குலைக்காதே. கொள்முதல் தொழிலாளர் வேலையைப் பறிக்காதே. மைய
தாலுகாவிற்கு ஒரு பல்பொருள் அங்காடி அமைத்திடு, 110 விதியின் கீழ் அறிவித்தபடி, பெட்ரோல், மண்ணெண்ணெய் பங்க், சமையல் எரிவாயு மையம் அமைத்திடு.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் மாதம், மாநிலம் முழுவதும் 1000ம் இடங்களில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய எஅய்சிசிடியு உள்ளிட்ட 4 சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகள், தொழிலாளர்கள், நுகர்வோர் என அனைத்து சமூகத்தையும் பாதிக்கும் தனியார் மயத்தை எதிர்த்து நடத்தும் இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ய லெனினிஸ்ட்) ஆதரிப்பதென்றும் முடிவெடுத் துள்ளது. நமது முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதி அமைத்த படிக்கட்டுகளில் ஏறி நடக்கிறேன் என்று திமுக தலைவரானதன் 4வது ஆண்டை நினைவுகூரும்விதமாக கூறினார். படிகளை பாதுகாப்பார் என்று தநாநுபொவாக ஊழியர்கள், தொழிலாளர், விவசாயிகள், ஏழைமக்கள் நம்புகின்றனர். நம்பிக்கையை காத்திடுவாரா முதல்வர்? .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)