வரலாற்றில் தடம் பதித்த 11ஆவது கட்சிக் காங்கிரஸ் சொல்லும் செய்தி

இதுதான் இகக(மாலெ) விடுதலையின் 11ஆவது கட்சிக் காங்கிரஸின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியும் அரசியல் முழக்கமும் ஆகும். கட்சி அணிகளுக்கும் அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் நாடெங்கிலுமுள்ள போராடும் மக்களுக்கும் ஒரு மிகத் தெளிவான அழைப்பாகும்.-ஒரு நீண்ட கால புரட்சிகர கண்ணோட்டத்தில் இன்று நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிகவும் அவசரமான அரசியல் பணிகளாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகும்.

வேங்கைவயல் எழுப்பும் கேள்விகள்

வேங்கைவயல் தலித்துகள் குடிக்கும் சமைக்கும் தண்ணீரில் மலம் கலந்த கொடூரச் செயல் வெளி உலகத்துக்கு தெரிய வந்து நான்கு மாதங்களாகி விட்டது. இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. வேங்கைவயலைச் சுற்றி பல இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் உள்ளன. வெளியிலுள்ள வர்கள் வேங்கைவயல் மக்களுடன் கலந்து விடக் கூடாதென்று கவனமாக காவல்துறை சோதனை போட்டுத் தடுக்கிறது. வேங்கைவயல் மக்கள், வெளி உலகத்திலிருந்து துண்டித்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது அரசு செயல்படுத்தும் தீண்டாமை. இது அரசே செய்யும் மனித உரிமை மீறல்.

மதுச்சேரியை மக்கள் புதுச்சேரியாக மாற்றப் போராடுவோம்!

பாஜகவின் பாசிச ஆட்சியில் மாநில ஆளுநர்கள் தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுகளை செயல்பட விடாமல் தொடர் சர்ச்சைகள் ஏற்படுத்துவது அதிகரித்து வரும் சூழலில், பல போராட்டங்களுக்குப் பின்னால், தற்போது தமிழ்நாட்டிலும் தெலுங்கானாவிலும் ஆளுநர்களால் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை உள்ளிட்ட கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கனியாமூர்-வேங்கை வயல் முதல் அம்பை-உடன்குடி வரை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கையை துரிதமாக எடுப்போம்... இந்த அரசைப் பொறுத்தவரை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே ஓர் அவமானச் சின்னம் என்று கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று ஏப்ரல் 12 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தெளிவற்ற, நடைமுறைச் சாத்தியமற்ற தொலைதூர வாக்களிப்புத் திட்டம்

உள்நாட்டில் புலம்பெயர்ந்தோருக்கான தொலை தூர வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு, பிப்ரவரி 27, 2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் இகக (மாலெ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த முன்மொழிவு நடைமுறை சாத்தியமற்றது, முற்றிலும் தெளிவற்றது என்று  கூறியுள்ள இகக(மாலெ), வாக்களிக்கும் குறிக்கோள் மற்றும் நோக்கத்திற்காக உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் பற்றிய எந்தவொரு உறுதியான வரையறையையும் வழங்காமல், இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு முன்மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உருவாக்குவதை நோக்கி அவசரமாக செயல்படு வது குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது. 

ஊர் தோறும் ஊராட்சி தோறும் மக்களிடம் செல்வோம்

மார்ச் 20 ல் தொடங்கிய சட்டப்பேரவை தொடர்ந்து நடந்து வருகிறது. பல துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடந்து வருகின்றன. ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து கூறுவதானால், நிதி அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை ஆட்சியாளர்களின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. விவசாய அமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையும் நிதியமைச்சர் காட்டிய பாதையிலேயே உள்ளது.

வைக்கம் போராட்ட நூற்றாண்டிலும் வரம்பின்றி தொடரும் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள்

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள், ஈழவர்கள், புலையர்கள், தீயர்கள் நடமாடத் தடை விதிக்கப் பட்டிருந்தது. அந்த மக்களை தடைவிதிக்கப் பட்டிருக்கும் தெருக்களில் 1924 மார்ச் 30 அன்று ஊர்வலமாக அழைத்துப் போகப் போவதாக அன்றைய கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கே.பி.கேசவ மேனன் அறிவிப்பு வெளியிட்டார். அப் போராட்டத்தைத் துவக்கியவர் வழக்கறிஞராக இருந்த டி.கே.மாதவன். தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று இருந்த காலக் கட்டம் அது. அறிவித்தபடி தொண்டர்களுடன் அணி திரண்டனர். அந்தத் தெருவில் சென்று நின்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

மோடி ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்படும் தங்கு தடையற்ற அவசரநிலையை எதிர்ப்போம்

திரிபுராவில் குறுகிய வெற்றியில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட மோடி அரசாங்கம், இந்தப் பாசிச ஆட்சியின் அடையாளமாக மாறியுள்ள தெரு அதிகாரம், பரப்புரை, அரசு அதிகாரம் ஆகியவற்றின் கொடிய சேர்க்கையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முழுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

பாசிச, இன வெறுப்பு அரசியலை முறியடித்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!


மனித வாழ்க்கையில் புலம் பெயர்வு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் துவங்கி, மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம், கண்டம் விட்டு கண்டம் என அது விரிவடைந்து செல்லும் இயக்கப் போக்காக நிலை பெற்றிருக்கிறது. தேச எல்லைகளைக் கடக்கும் போது அது கட்டுப்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாகி விடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நாட்டிற்குள் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்ல, பணிபுரிய, தொழில் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. சில வடகிழக்கு மாநிலங்கள் வேலைக்கு வருபவர்களை ஒழுங்குபடுத்த உள் நுழைவுச் சீட்டு முறையை கொண்டுள்ளன.