மோடி ஆட்சியை வெளியேற்று வோம்! தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பாதுகாப்போம்!| தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 200 நாள் வேலை, நாளொன்றுக்கு ரூ.600/ சம்பளம் வழங்கு!!! கிராமப்புற ஏழைகளுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாநில தழுவிய அளவில் ஜூன் 15 முதல் ஜூன் 30 வரை பிரசார இயக்கம், கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டங்கள் மாவட்டங் களில் ஒன்றிய மட்டங்களில் நடத்தப் பட்டன. இந்த பிரச்சார இயக்கத்தில் விவசாய, கிராமப்புறத் தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாகக் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். மோடி அரசுக்கு எதிரான தங்கள் குமுறல்களை கோபத்தை வெளிப்படுத் தினர். ஜூன் 30 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பேரணி, ஆர்ப்பாட் டங்கள், பொதுக்கூட்டங்கள் நடை பெற்றன. கிராமப்புறத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட் டங்கள், பேரணி களில் திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சார, போராட்ட நிகழ்ச்சிகளில் அனைத்திந்திய விவசாய, கிராமப் புறத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் குணசேகரன், மாநிலத் துணைத் தலைவர் தோழர் வீ.மு.வளத்தான், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர் தோழர் ரேவதி, இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பழ. ஆசைத்தம்பி, அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநிலத் தலைவர் தோழர் சிம்சன் புதுக்கோட்டை ஏஐகேஎம் மாவட்டச் செயலாளர் விஜயன், மதுரை சண்முகம், கடலூர் தனவேல், விருதாச்சலம் ராஜசங்கர், திருநாவலூர் கலியமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

.