இயக்கங்களால் பெற்ற வெற்றி; இயக்கங்கள் பெற்ற வெற்றி!

இயக்கங்களால் பெற்ற வெற்றி;

இயக்கங்கள் பெற்ற வெற்றி!

தோழர்ராஜாராம் சிங் நேர்காணல்

பிப்ரவரி 16 பொது வேலை நிறுத்தத்தில் அவிகிதொச

பிப்ரவரி 16 அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் பங்குபெறுவதென்று அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. பிப்ரவரி 6 அன்று கூடிய அவிகிதொச மாநில நிர்வாகக் குழு மாநில அளவில் ஊராட்சி தோறும் பரப்புரை இயக்கம் நடத்துவது, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதென்று முடிவுசெய்திருந்தது. துண்டறிக்கை, சுவரொட்டி மூலம் பரப்புரை செய்யப்பட்டதுடன் ஊராட்சிகளில் ஊராட்சி கிராமங்களில் கிராமப்புர மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. ஊர்கூட்டங்களும் நடத்தப்பட்டன.

மோடி அரசு வீழ, மக்கள் வாழ நாடு தழுவிய வேலை நிறுத்தம்! கிராமப்புற முழு அடைப்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!

தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறு!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்காதே!

நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தாதே!

அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26,000 உத்தரவாதம் செய்!

விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதம் செய்!

மோடி ஆட்சிக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்

இந்த ஆண்டு ஏப்ரலில் துவங்கிய புதிய வேலை 6 மாதங்கள் கடப்பதற்குள் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கியது. இது இதற்கு முந்தைய ஆண்டு செலவிடப்பட்ட தொகையைவிட 33 சதம் குறைவானதாகும். தற்போதைய நிலையில் வேலைத் திட்டம் ரூ.6,146.93 கோடி பற்றாக்குறையில் இருக்கிறது. 

செப்டம்பர் 2-13 மக்கள் சந்திப்பு பரப்புரைப் பயணம்

கிராமப்புர மக்களின் நிலம், வேலை,கூலி, கவுரவம், ஜனநாயகம் கோரிக்கைகளை வலியுறுத்தும் பரப்புரைப் பயணம் தோழர் சந்திரகுமார் பிறந்த ஊரான பெருந் தோட்டத்தி லிருந்து 2023 செப்டம்பர் 2 அன்று தொடங்கியது. தரிசாக கிடக்கும் நிலத்தை உழைக்கும் மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மீது உற்சாக மிக்க பெருந்திரள் கிளர்ச்சியால் ஊக்கம் பெற்று முன்னணி தோழர்கள், மயிலாடுதுறை மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர் குணசேகரன் தலைமையில் தியாகிகள் சுடரேந்தி பயணத்தைத் தொடங்கினர்.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான சட்டம் 2023ஐ உடனே திரும்பப்பெறுக !

பரந்தூர் விமானநிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம், என்எல்சி சுரங்கங்கள், சிப்காட் தொழிற்சாலை வளாகங்கள், எட்டுவழிச் சாலை எனத் தமிழ்நாட்டில் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள், மீனவர்கள், பொது மக்கள் வலுவான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டுவரும் பின்னணியில், கடந்த ஏப்ரல் 21, 2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட "தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) என்ற சட்டம் 2023" (TamilNadu Land Consolidation (for Special Projects) Act 2023) விவசாயிகள் விரோத, சுற்றுச்சூழல் விரோத மசோதா சட்டமன்றத்த

தோழர்கள் சந்திரகுமார்சந்திரசேகர், சுப்பு தியாகிகள் பெயரால் உறுதி ஏற்போம்! கார்ப்பரேட் காவிப்பாசிசத்தை தோற்கடிப்போம்!!

தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக.. பாட்டாளி வர்க்க விடுதலைக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகப்பெரிய விலை கொடுத்தது வரலாறு. '40 கள் தொடங்கி '60 கள் வரை செங்கொடி ஏந்திய பல தலைவர்கள், தொண்டர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தோழர்கள் வாட்டாக்குடி ரணியன் களப்பால் குப்பு, இன்னும் பலர் நிலவுடைமை ஆதிக்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் உச்சமாக, கீழ் வெண்மணியில் பெண் கள், குழந்தைகள், ஆண்கள் என 44 விவசாயக் கூலிகள் குடிசையில் வைத்து கொளுத்தப் பட்டார்கள்.