இகக(மாலெ) கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலச் செயலாளரும் மத்தியக் குழு உறுப்பினரு மான தோழர் என்.கே.நடராஜன் 2022 டிசம்பர் 10 அன்று எதிர்பாராத நேரத்தில் அவரின் அன்புக்குரிய எம்எல் கட்சியையும் நம்மையும் விட்டுப் பிரிந்தார். தோழர் என்கேயின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன. 10.12.2023 அன்று திண்டுக்கல் மாவட்டம் எரியோட் டில் தோழர் என்கே நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் தோழர் ரவி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் தோழர் பழ. ஆசைத்தம்பி கட்சிக் கொடியை ஏற்றி தோழர் என்கே படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மத்திய கமிட்டி உறுப் பினர் தோழர் பாலசுந்தரம், தோழர் அ.சிம்சன், தோழர் தேன்மொழி, தோழர் சுப்புராமன், தோழர் விஜயகுமார் மற்றும் தோழர் கனகராஜ், என்.கேயின் சகோதரர்கள், மாவட்ட நிலைக்குழு மற்றும் மாவட்ட கமிட்டித் தோழர்கள், கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத் தினர். தொடர்ந்து தோழர்கள் அனைவரும் என்.கே. நினைவு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பொதுக் கூட்டத்திற்கு இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சுப்புராமன் தலைமை தாங்கினார். மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி பேசுகையில், சுதந்திர போராட்ட காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் பங்கு பற்றி குறிப்பிட்டு அந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு இணையானது தோழர் என்கேவின் புரட்சிகர பயணம் என்று கூறினார். 2024 தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்துவது குறித்தும் சிறப்புரையாற்றி னார். மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் தோழர் என்.கே.,தோழர் சுகுந்தன், தோழர் முனி யாண்டி தாத்தா போன்ற திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய தோழர்களின் வரலாற்றை விரிவாக எடுத்து ரைத்தார். தோழர் ஜெயந்தி, தோழர் என் கே.உடனான தனது அரசியல் பணி பற்றி பகிர்ந்து கொண்டார். தோழர் தேன்மொழி, மக்கள் விரோதி களுக்கு எல்லாம் பொது இடத்தில் சிலை வைக்கும் போது கண்டு கொள்ளாத காவல்துறை இகக(மாலெ) கட்சிக்கு சொந்தமான இடத்தில் தோழர் என்கே விற்கு நினைவுத் தூண் அமைக்க அனுமதி மறுத்ததை கடுமையாக விமர்சித்துப் பேசினார். மாநில நிலைக்குழு உறுப்பினர் தோழர் சிம்சன், தோழர் என்கே போன்றவர்களின் எளிமையான வாழ்க்கை முறை தோழர் ஜீவா போன்ற தலைவர்களின் எளிமையான வாழ்க்கைக்கு இணையானது என்பதை விளக்கிப் பேசினார்.

இகக(மாலெ) புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் வீ.மு.வளத்தான், மாநிலக்குழு உறுப்பினர் ரெங்கசாமி ஆகியோரும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் தோழர் ரவி தீர்மானங்களை முன்வைத்தார். மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் பொன்னுத்துரை நன்றி கூறினார்.

2024 பிப்ரவரி 1 அன்று தஞ்சையில் நடைபெறவிருக்கும் பாசிச எதிர்ப்புப் பேரணிக்கு அதிக எண்ணிக்கையில் மக்களைத் திரட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.