சமூக சீர்திருத்த இயக்கங்களின் மாபெரும் பங்களிப்புகளால் மாற்றங்களைக் கண்ட தமிழ் நாட்டில் வெளிப்பட்ட கல்வி நிலையப் பாகு பாடுகள் அதிர்ச்சிகளை ஏற்படுத்தின.

பிளேடால் முதுகில் கீறியது, சாதிக் கயிறு பிரச்சினையில் தாக்குதல் மரணம், வீடு புகுந்து தாக்குதல் தடுத்த சகோதரியும் படுகாயம், அம்AAAபேத்கர் படத்தை செல்போன் முகப்புப் படமாக வைத்ததற்கு தாக்குதல், பிற்படுத்தப்பட்ட சாதி யைச் சேர்ந்த பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்ததற்கு தாக்குதல்...என கொடூரமான நிகழ்வு கள் அரங்கேறின.

சாதிக் கயிறு, திலகம் கூடாது என 2019இல் அன்றைய அரசு ஒரு சுற்றறிக்கை விடுத்த போது பாஜக அதுவெல்லாம் மத நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்டவை, ஆகவே அரசு தடுக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது. அன்றைய அஇஅதிமுக அரசும் பின் வாங்கியது.

இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 3 மாதங்களாக களஆய்வு ஒன்றை "பள்ளிகளில் நிலவும் சாதியப் பாகுபாடுகள்” குறித்து தமிழ்நாட்டின் 36 மாவட்டங்களில் நடத்தியுள்ளது. 441 பள்ளிகளில் பயிலும் 644 மாணவர்களிடம் அவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் சாதிய மேலாதிக்கம் கொண்ட இந்துத்துவா ஊடுருவல்கள், சாதிய ஆதிக்க சக்திகளின் செயல்பாடுகள் மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்து வருவதை இந்த ஆய்வின் மூலம் உணர முடிந்தது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆய்வின் விரிவும், வரம்பும்:

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 250 தன்னார்வ ஆய்வாளர்களுக்கு பயிற்சி தந்து 441 பள்ளிகளைச் சேர்ந்த 644 மாணவர்கள் மத்தியில் கள ஆய்வுகளை நடத்தியுள்ளது. இதில் 321 அரசுப் பள்ளிகள், 58 அரசு உதவி பெறும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகள். 644 மாணவர்களில் 6- 8 வகுப்பு 152 பேர்,  9 - 12 வகுப்பு 219  பேர், 11-12  வகுப்பு  273 ஆவர். பாலின அடிப்படையில் 333 ஆண்கள், பெண்கள் 311. சாதிப் பிரிவினர் எனில் எஸ்.சி 438, எஸ்.சி(A)  68, M.B.C 46, B.C  41, S.T 19, முற்பட்டவர் 1. சிலர் விவரம் தரவில்லை. மதம் எனில் இந்துக்கள் 532, கிறித்தவர் 22, இஸ்லாமியர் 9. மதம் சிலர் குறிப்பிடவில்லை.

ஆய்வுக்கான கேள்வித் தாளில் 78 விவரங்கள் கேட்கப்பட்டன. வகுப்பறை, இருக்கைகள், சக மாணவர் உறவு, ஆசிரியர் மாணவர் உறவு, பெற்றோர் அணுகுமுறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம், சாதிய அடையாளங்கள் உரையாடல்கள் ஏச்சுக்கள் கிண்டல்கள், மதிய உணவு, நூலகம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள், போட்டிகள், தேர்வுகள், பரிசுகள், பாலியல் தொல்லை உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்று இருந்தன.

சாதிக்கென்று நிறத்தை கட்டமைத்து கயிறு, பொட்டு, டாலர், செயின், கடுக்கன், தொப்பி என அடையாளங்களுடன் பள்ளிகளுக்கு வருவதும், சாதி அடையாளத்துடன் தலைவர்கள் படத்தை பஸ் பாசுக்குள் வைத்து வருவது, டீ சர்ட்டுகள், பனியன்கள் சாதி அடையாளத்துடன் அமைவது என்பதும் உள்ளது. பதின் பருவத்தில் இயல்பாக ஏற்படும் சீண்டலுக்கான உந்தல் சாதிச் சீண்டலாக மடை மாற்றம் ஆகியுள்ளன. தேர்தலுக்கான வாக்கு வங்கி அரசியலும் சமூகம், குடும்பம் என ஊடுருவி பள்ளிகள் வரை நீள்கின்றன.

நேரடியாக சாதியப் பாகுபாடுகள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை:

மாணவர்களிடம் சாதிய உணர்வை வெளிப் படுத்தும் மாணவர்கள் உள்ள பள்ளிகள் 24,

* சாதிய ரீதியாக குழுக்களாக மாணவர்கள் பிரிந்திருக்கும் பள்ளிகள் 10

*தண்ணீர் குடிப்பதற்கு ஒரு டம்ளர் இல்லாத பள்ளிகள் 19

*பலர் முன்னிலையில் சாதி குறித்து இழிவாகப் பேசும் பள்ளிகள் 10

* விளையாட்டு மைதானத்தில் / விளையாடு வதில் பாகுபாடுகள் உள்ளப் பள்ளிகள் 12

சாதிய மோதல்கள் வந்து பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பள்ளிகள் 25

*சாதிய ரீதியாகக் கைகளில் கயிறு, கடுக்கன், டாலர் செயின் அணிந்து வருவது 33

* பள்ளிகளில் சாதியப்பெருமை பேசுவது 38

 இன்னும் பல

ஆலோசனைகள்:

விரிவான "சமத்துவப் பள்ளிக்கான" வழி காட்டல் ஆவணத்தை வெளியிடலாம்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் சமூகநீதிக் கென்று ஒரு தனிக் கட்டமைப்பை தலைமைச் செயலகம் முதல் மாவட்டங்கள் வரை ஏற்படுத்திட வேண்டும். இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவரை இதன் நிர்வாகப் பொறுப்பாளராக நியமித்திட வேண்டும்.

சாதிப் பாகுபாடு குறித்த இலக்கணம் வரையறுக்கப்பட்டு அது குறித்த விழிப்புணர்வு மாணவர் ஆசிரியர் அலுவலகஊழியர் பெற்றோர் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உட்பட அனைவ ருக்கும் உளவியல் சார்ந்த வகுப்புகளை எடுக்க வேண்டும். அத்தோடு பாலினச் சமத்துவம் குறித்தான உரையாடலை நடத்திட வேண்டும்.

ஆசிரியர் பயிற்சிகளிலும், மாணவர்களின் பாடத்திட்டத்திலும் சாதிப் பாகுபாடு ஒழிப்பு, சமத்துவ சிந்தனை குறித்த அம்சங்கள் இணைக்கப் பட வேண்டும். ஆசிரியர் அலுவலர் பணியில் சேர்ந்தபின்னர் அவர்களுக்கு இது குறித்த சிறப்புப் பயிற்சி நடத்தப்பட வேண்டும்.

சாதி குறித்தான பார்வையை அறிவியல் பார்வையோடு ஒற்றுமைப்படுத்தி இந்தக் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். குறிப்பாக பாகுபாடு கொண்ட இந்த சாதியப் பிரச்சனைகளுக்கு ஆசிரியர்கள் கூடி விவாதிக்க வேண்டும்.

பள்ளிகளில் சாதிய ரீதியாக ஊர் விழாக்க ளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் மத்தியில் சாதியக் கண்ணோட்டம் இல்லாமல் இருக்க பள்ளி மேலாண்மை குழு குறிப்பான நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.

"சாதி மதம் பாரோம்" என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மத்தியில் பேச்சு, பாடல், ஓவிய, கட்டுரைப் போட்டிகள் நடத்தலாம். பெற்றோர்க்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம்.

* சமூக சீர்திருத்த இயக்க முன்னோடிகளின் பணிகளையும், பங்களிப்புகளையும் குறித்த ஒரு துவக்க அறிமுகத்தை இவ்விழாக்களில் மாணவர் களுக்கு ஏற்படுத்திட வேண்டும்.

மாணவர்கள் மன மாற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். பிரபல இசை அமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்களைப் பயன்படுத்தி அரசே சாதிய வேறுபாடுகளுக்கு எதிராகவும், அறிவியல் முனைப்பு உடையதாகவும் இசைப் பாடல்களை உருவாக்கி பள்ளி விழாக்களில், வகுப்பறைகளில் பகிர வேண்டும். கலை விழாக்கள், வீதி நாடகம் போன்ற விழிப்புணர்வுக் கொண்டாட்டங்களை ஊக்குவிக்க வேண்டும்.

இன்னும் பல

(ஆ.கு) இந்த ஆலோசனைகளை அரசு செயல்படுத்துவதில்தான் மாற்றத்திற்கான பாதை திறக்கப்படும். இந்தியாவில் பாஜக-சங்கிகள் திட்டமிட்டு இந்து மத வெறியை, மூட நம்பிக்கை களை பாடப் புத்தகங்களில் கொண்டு வருகின்ற இவ் வேளையில், தமிழ்நாட்டில் பெரியார், அம்பேத்கர், அயோத்தி தாசர், வள்ளலார் போன்றவர்களின் கருத்துகளை மாணவர்களிடம் திட்டமிட்டு கொண்டு செல்ல வேண்டும் தமிழ்நாடு அரசு.

(தொகுப்பு : சந்திரமோகன்)