மார்ச் 2 அன்று புதுச்சேரியில் ஒன்பது வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு மூன்று நாட்கள் கழித்து உள்ளூர் வாய்க்காலிலேயே பிணமாகக் கிடந்தது. இது, புதுச்சேரி மட்டுமின்றி, கேள்விப்பட்டோர் நெஞ்சை எல்லாம் உறைய வைக்கும் கொடூரச் சம்பவமாகும். பாஜக- என்ஆர்கே ஆட்சியின், பொருளாதார வளர்ச்சியை சீரழிக்கும் சுற்றுலா, போதைக் கலாச்சாரத்தின் கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வெகுண்டு எழுந்த புதுச்சேரி குடிமைச் சமூகம் பாஜக-என்ஆர்கே ஆட்சியின் அலட்சியத்துக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. குழந்தை கடத்தப்பட்ட நாள் முதல், பாஜக என்ஆர்காங்கிரஸ் தவிர்த்து, புதுச்சேரியின் அனைத்து அரசியல் கட்சிகள், ஐனநாயக அமைப்புக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. இதுவரையிலும் கண்டிராத அளவிலான வெகுமக்கள் கொந்தளிப்பை புதுச்சேரி கண்டது.

ஆறாக ஓடும் சாராயம், ரெஸ்டோ பார்கள், சுற்றுலா விடுதிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புதுச்சேரியில் மிக சாதாரணமாய் கிடைக்கின்றன. இளைஞர்களைக் குறிவைத்து இந்த குற்ற வணிகம் ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடைபெற்று இகக (மாலெ) பல்வேறு வருகிறது. உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் இப்பிரச்சினையை விடாப்பிடியாக வருகின்றன. எழுப்பி அதைத் துளியும் சட்டை செய்யாமல் பாஜக-என்ஆர்கே அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் போராட்டத்திற்கு பிறகும் காவல்துறை மிக மெத்தனமாகவே இருந்தது. இது, சாமானிய மக்களின் கோபத்திற்குக் காரணமாக அமைந்தது.

பலவிதமான போராட்டங்களில் புதுச்சேரியின் அனைத்துப் பிரிவு மக்களும் வீதிக்கு வந்தனர். கணிசமான எண்ணிக்கையில் திருநங்கைகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாஜக-என்ஆர்கே ஆட்சியில் திருநங்கைகள் போன்ற விளிம்புநிலை, அடித்தட்டுப் பிரிவினர் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள்சமூகக் குற்றவாளிகளாக மாறிவிட்டனர் என்ற நடுத்தரவர்க்க குற்றச்சாட்டுக்கு பாஜக-என்ஆர்கே கூட்டணியின் சீரழிந்த அரசியலே காரணம். அவர்களே குற்றவாளிகள். ஜாபர் சாதிக் கூட்டாளிகள் புதுச்சேரியில் பதுங்கியிருக்கிறார்கள் என்று ஆளுநர் கூறுகிறார். ஆளுநருக்கு குற்றவாளிகளைத் தெரிந்திருந்தும் இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்? இது யார் குற்றம்? பெற்றோர்கள் தங்கள் ஆண், பெண் குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க வேண்டும் என்று கூறி ஆளுநர் தமிழிசை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார்.

குழந்தை காணாமல் போன அடுத்த நாளே கட்சி மத்தியக் கமிட்டி உறுப்பினர் சோ.பாலசுப்பிரமணியன், அஇமுபெக மாநிலசெயலாளர் விஜயா, பகுதி பொறுப்பாளர் தோழர் அருள், சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறுமியைப் பறிகொடுத்த பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது. இக்குற்றத்துக்கு பாஜக- என்ஆர்கே அரசு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியது.

குழந்தை மத்தியில் கொல்லப்பட்தையொட்டி எழுந்துள்ள காரணமாக, மக்கள் கொந்தளிப்பின் சிபிஐஎம்எல் கட்சியையும் உள்ளடக்கிய, இந்தியா கூட்டணி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. முழுஅடைப்பு ஆதரவு பிரச்சார ஊர்வலத்தில் கட்சித் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்ற நமது அச்சம் உண்மையாகிவிட்டது. குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது; சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ 30 லட்சம் வழங்கிட வேண்டும். புதுச்சேரி மாநில மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறுமியின் படுகொலைக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற நமது கோரிக்கைகள் போராடுவோரது கோரிக்கைகளானது.

தனது குற்றமுகத்தை மறைத்திட குழந்தையின் பெற்றோருக்கு அரசு 20 லட்சம் வழங்கியுள்ளது. இத்தோடு அரசின் பொறுப்பு முடிந்துவிட்டதாக முதலமைச்சர் ரங்கசாமி கருதினால் அது முற்றிலும் தவறு. புதுச்சேரி மக்களவை தொகுதியை மட்டுமின்றி புதுச்சேரி மக்களது பாதுகாப்பை, எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்ட என்ஆர் காங்கிரசை, பாஜகவோடு சேர்த்து மக்கள் தண்டிப்பது உறுதி.