"காஸா இல்லாமல் பெண்ணிய போராட்டம் இல்லை! காஸா இல்லாமல் எதிர்காலம் இல்லை" என்ற முழக்கத்துடன் காஸா மீதான தாக்குதலுக்கு எதிராக உறுதி ஏற்று சர்வதேச உழைக்கும் பெண்கள் நாள் 2024 தொடங்கியது. காஸாவில் கொல்லப்பட்ட 30 ஆயிரம் பேர்களுள் பெண்களும் குழந்தைகளுமே அதிகம். அந்தப் பகுதியிலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருட்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவே செய்யும். முகாம்களில் உணவுப் பொருள் வழங்க பெரிய ட்ரக்குகள் வருகின்றன. பட்டினியால் தவிக்கும் மக்கள் அவற்றை நோக்கி ஓடுகிறார்கள். பாலஸ்தீனியர்கள் முற்றுகையிடுகிறார்கள் என்று கூறி இஸ்ரேலிய ராணுவம் கண்மூடித்தனமாக கும்பலை நோக்கி சுட்டுத்தள்ளுகிறது. பெண்கள் துடிதுடித்து சாகிறார்கள்! ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் ஒழித்துக்கட்டுவது என்னும் நோக்கத்துடன் சியோனிச தாக்குதல்களின் இலக்காக பெண்களும் குழந்தைகளுமே உள்ளனர். பெண்கள், குழந்தைகள் குறிவைக்கப்படுவதன் காரணமென்ன? இனியும் பாலஸ்தீனிய கருவைச் சுமக்க பெண்கள் இருக்கக்கூடாது. பாலஸ்தீன இளம் தலைமுறை இருக்கவே கூடாது என்பதுதான் காரணமென்று பியூசிஎல் தேசியத் தலைவர் கவிதா சிறீவாஸ்தவா கூறுகிறார். எனவே காஸாவில் மேற்கொள்ளப்படும் இந்த இன அழிப்புக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட உலகப் பெண்கள் இயக்கம் தங்களுடைய குரலை இந்த ஆண்டு மார்ச் 8ல் எழுப்பியுள்ளது.

எந்தவொரு பாசிச ஆட்சியின் மைய செயல்பாடும் பெண்கள், பெண்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களாகவே உள்ளன. இதனை நாம் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கண்டு வருகிறோம். பாரம்பரிய வழக்கமான ஒரே சாதிக்குள் திருமணம் செய்ய மறுக்கிற பெண்கள் மீது அடிப்படைவாத ஒழுக்கக் காவலர்கள் தாக்குதல் தொடுக்கின்றனர். பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களை பாதுகாக்கிறார்கள். பெண்களை நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கும், அடிமையாக்கும் மனுஸ்மிருதியை முன்மொழிகிறார்கள். வாழ்க்கைத் தங்களது துணைவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை மறுக்கும் உத்தரகண்ட் பொது சிவில் சட்டம் போன்ற பிற்போக்கு சட்டங்களை கொண்டு வருகிறார்கள். பாஜகவின் அப்பட்டமாக எதிரானதாகவும், ஆணாதிக்கம் ஆளும் பாசிச செயல்பாடுகள் பெண்களுக்கு மிகுந்ததாகவும் உள்ளது. பிரிஜ் பூசன் சரண் சிங் போன்றவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால், நமது மல்யுத்த வீராங்கனைகள், பில்கிஸ் பானுக்கள் நீதிக்காக அலைக்கழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நீதி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து வெற்று வாய்ச்சவடால்களை வீசுவதற்கு கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் மோடி அரசாங்கம் தவற விடுவதில்லை. நாட்டில் உள்ள பெண்களைப் பாதுகாக்க அது தவறிவிட்டது. பிஹெச்யு - ஐஐடி மாணவியையும், சுற்றுலா வந்த ஸ்பானிய பெண்ணையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் மோடி அரசின் முழுமையான தோல்வியையே வெளிப்படுத்துகிறது. மேலும், "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற தனது முழக்கத்திற்கு மோடி அரசு எவ்வித பொறுப்புமில்லாமல் இருப்பதையும் காட்டுகிறது. பணவீக்கமும் விண்ணைத்தாண்டும் விலைவாசி உயர்வும் பெண்களுக்கு பெருந்துன்பத்தை கொடுக்கின்றன. சமையல் எரிவாயு விலையை 1000 க்கும் மேல் உயர்த்திவிட்டு தேர்தலுக்காக ரூ 100 குறைத்து விட்டு பெண்களுக்கு நவராத்திரி பரிசு என்று கூறுகிறார் மோடி. இந்தப் பின்னணியில் சர்வதேச பெண்கள் நாள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

வெறுப்பு, போர், இனப்படுகொலை அரசியலுக்கு எதிரான செய்தியை நாடு முழுவதும் கொண்டு செல்ல அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. மார்ச் 6 அன்று அய்ப்வாவின் டெல்லி பிரிவு, பிற பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து கூட்டுப் போராட்டத்தை நடத்தியது. அதில் திரளான மகளிர் பங்கேற்றனர். அந்தப் போராட்டத்தை காவல்துறை ஒடுக்கியது. போராட்டக்காரர்களை கைதும் செய்தது. மார்ச் 7 மற்றும் 8 இல் பல மாநிலங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் ஆகியவை ஓர் செயலாளர் தோழர் மீனா திவாரி தலைமை ஏற்று உரையாற்றினார். ஜெகனாபாத்திலும் கூட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் உத்தரப்பிரதேசத்தில் ஒரு நடத்தப்பட்டன. கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அசாம், மேற்குவங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் பேரணிகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. இம்மாதம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் திரளான மகளிர் பங்கேற்றனர். தோழர் சரஸ்வதி அந்த நிகழ்வுக்கு தலைமை ஏற்றார். தோழர் வள்ளி வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பிலோமினா சிறப்புரை நிகழ்த்தினார். மயிலாடுதுறையில் தோழர் மாதவி தலைமையிலான பெண்கள் குழுவினர் அய்ப்வாவின் கொடியை ஏற்றினர். உறுதிமொழியும் ஏற்றனர். சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டம் சாந்திபுரத்தில் நடைபெற்ற மகளிர் உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் தோழர்கள் சந்தனமேரி, இக்க (மாலெ) மாவட்டச்செயலாளர் சிம்சன், பேராசிரியர்கள் கோச்சடை, அரசமுருகபாண்டியன் ஆகியோர் பேசினர். குமரி, தென்காசி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில், சுசிலா. கார்மல், வள்ளிமயில், மல்லிகா, ரேவதி, மணிமேகலை உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

கர்நாடகாவில் "நானும் ராணி சென்னம்மா தான்" என்ற போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக பெண்கள் கழகமும் கலந்து கொண்டது. நாடு முழுவதும் இருந்து 3500 க்கும் அதிகமான மகளிர் கிட்டூரில் நடைபெற்ற இந்த போராட்ட இயக்கத்தில் கலந்து கொண்டனர். ஜனநாயகத்தை, அரசியல் சாசன சட்ட உரிமைகளைப் பாதுகாக்க உறுதியும் ஏற்றுக் கொண்டனர். கிட்டூர் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

மனுஸ்மிருதி ஆதரவு, மகளிர் விரோத பாசிச மோடி ஆட்சியை தோற்கடிக்க பெரும் எண்ணிக்கையில் மகளிரை அணிதிரட்ட இந்த நிகழ்ச்சிகளில் உறுதி ஏற்கப்பட்டன.