பெண்கள் மீது பிஜேபி தொடுக்கும் போர்

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிக்கும் 20 வயது மாணவியை மூன்று பேர் சேர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கூட்டுப் பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்கிற செய்தி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், 2023ம் ஆண்டின் கடைசி நாளில்தான் வெளியே தெரிந்தது. இறுதியாக அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் பிஜேபி ஐடி செல்லைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பிஜேபி வாரணாசி ஐடி செல்லின் அமைப்பாளர். மற்றொருவர் துணை அமைப்பாளர்.

பில்கிஸ் பானோ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கு சாதகமானது: பில்கிஸ் பானோவின் அயராத போராட்டத்திற்குத் தலை வணங்குகிறோம் பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதை பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

பில்கிஸ் பானோ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நீதிக்கு சாதகமானதும் பில்கிஸ் பானோவின் அயராத போராட்டத்தின் விளைவும் ஆகும். இந்த முடிவுக்குப் பிறகு, பாலியல் வல்லுறவாளர்களைப் பாதுகாப்பதை பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் நீக்கம், எதிர்ப்புக் குரல்களை மவுனமாக்கும் மோடி அரசாட்சியின் வெட்கக்கேடான செயலாகும்

வெள்ளிக்கிழமையன்று மக்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை நீக்கியிருப்பதன் மூலம் அதானியுடைய மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியை அல்லது கார்ப்பரேட் போட்டிகளாலும் நேர்மையற்ற அரசியல் வழிமுறைகளாலும் உந்தப்படும் மோடி அதானி கூட்டை கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் சட்டப்பூர்வமற்றதாக்க மோடிஷா அரசாட்சி எந்தவொரு எல்லைக்கும் செல்லும் என தெளிவாக்குகிறது.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக புதுச்சேரி மாநில 9வது மாநாடு

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் புதுச்சேரி மாநில 9வது மாநாடு 21.09.2023 அன்று புதுவை தமிழ் சங்கத்தில் தோழர் சரோஜா அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மல்லிகா, மீனாட்சி, சுகுணா, விசாலாட்சி, ஜெயா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநாட்டில் வேலை அறிக்கை மாநிலச் செயலாளர் விஜயா சமர்ப்பித்தார். இகக(மாலெ) புதுச்சேரி மாநிலச் செயலர் எஸ்.புருஷோத்தமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசியத் தலைவர் டாக்டர் ரத்தி ராவ் சிறப்புரையாற்றினார்.

'அவர்களுடைய முறைப்படி 'ஒன்றை' உருவாக்குவதற்கு, இந்து இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் மற்றவருடன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்"

இப்போது நம்முடைய அரசாங்கம், 'ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு வாக்கு, ஒரு மொழி, ஒரு மதம்' ஆகியவற்றிற்கு அதிக அழுத்தம் கொடுகிறது. அவர்களுடைய முறைப்படி 'ஒன்றை’ உருவாக்குவதற்கு, இந்து இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் மற்றவருடன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். சங்பரிவார் சாதிய முறையின் அடித்தளத்தை நன்கு புரிந்துகொண்டு, அதை பயன்படுத்துவதோடு, அது நிலைத்திருக்கச் செய்ய முயற்சிக்கிறது. திறந்தவெளியில் தீப்பிடிக்க ஒரு தீப்பொறி போதும் என மாவோ கூறினார். ஆனால், நமது சமூகம் திறந்தவெளியல்ல, இது திக்குத் தெரியாத காடு. அதற்குள் தீப்பொறி கூட காணாமல் போகும். சாதிய அமைப்பு முறைதான் அந்த திக்குத் தெரியாத காடு.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் 9வது அகில இந்திய மாநாடு

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் 9 ஆவது அகில இந்திய மாநாடு டெல்லி, எச்.கே.எஸ்.சுர்ஜித் பவனில் 30.9.2023 மற்றும் 1.10.2023 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் நடைபெற்ற துவக்க மாநாட்டில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். எழுத்தாளர் அருந்ததிராய், நேகா சிங் ரத்தோர், நவ்சரண் கவுர், பாஷா சிங், சுதேஷ் கோயல், மீனா கோட் வான் மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய பெண்கள் சம்மேளனம் ஆகியவற்றின் தலைவர்களும் உரையாற்றினர்.

குற்றவாளிகளின், மோசடிப் பேர்வழிகளின் புகலிடம் பாஜக)

நாடு முழுவதும் குற்றவாளிகள் ஒருவர் பின்  ஒருவராக பாஜகவிற்குப் படையெடுக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, ஏற்கனவே பாஜகவில் இருப்பவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதுவும் பாலியல் குற்ற வழக்குகளில் முதலிடத்தில் பாஜக உள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. மகள்களைப் பாதுகாப்போம் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்றும் பேசிக் கொண்டிருக்கும் மோடியின் ஆட்சியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கே பாதுகாப்பு இல்லை. 

பெண்கள் விரோத பாஜக மோடி ஆட்சியை வெளியேற்றுவோம்

அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் மாநில ஊழியர் கூட்டம் 16.04.2023 அன்று திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ரேவதி, இக்க(மாலெ) கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் கிருஷ்ணவேணி, தேன்மொழி, பிலோமினா, ஈஸ்வரி, மனோன்மணி கொண்ட தலைமைக்குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சமத்துவம், நீதி, கண்ணியமிக்க வாழ்வாதாரம் பெறும் உரிமைகளுக்காகப் போராடுவோம்! பெண்களுக்கு எதிரான கார்ப்பரேட் இந்துத்துவா வன்முறைக்கு பதிலடி கொடுப்போம்!

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் சாதனைகளை மதிக்கவும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், பெண்கள் தினம் என குறிக்கப்பட்டுள்ள எட்டு மணிநேர வேலையின் வெற்றி, புதிய தொழிலாளர் சட்டங்களின் மூலம் தலைகீழாக மாற்றப்பட்டு வருகிறது என்பது நமது காலத்தின் நகைமுரணாகும். பணியிடங்களில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய சம வேலைக்கு சம ஊதியத்திற்கான உத்தரவாதம் இன்னும் அளிக்கப்படவில்லை.