இந்து ராஜ்யம் அமைப்பதுதான் ஆர்எஸ்எஸ் - பிஜேபி - மோடியின் கனவு!

  • இந்து ராஜ்யம் என்றால் இந்துக்களின் ஆட்சி அல்ல,  உழைக்கும் இந்து  மக்களின் ஆட்சி அல்ல, ஏழை, எளிய மக்களின் ஆட்சி அல்ல. இந்துத்துவ மதவெறியர்களின், கார்ப்பரேட் பண முதலைகளின், அதானி - அம்பானிகளின் ஆட்சி. அதுதான் பிஜேபி சொல்லும் இந்து ராஜ்யம். ஆகவே, வேண்டாம் மோடி!
  • இந்து ராஜ்யம் என்றால் அங்கு மதச்சார்பின்மைக்கு இடம் கிடையாது.
  • பன்மைத்துவம் கொண்ட இந்தியத் தாய்த்திருநாடு இந்து தலிபான்கள் ஆட்சியாக மாற்றப்படும்.

இந்து ராஜ்யத்தில் பெயருக்குக் கூட ஜனநாயகம் இருக்காது.

  • கடந்த பத்தாண்டுகளில் மக்களவையில் விவாதங்களே இல்லாமல் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, வரலாறு காணாத வகையில், 146 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, விவாதமே இல்லாமல் பல மக்கள் விரோதச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜிரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா பிஆர்எஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவிதா, செந்தில் பாலாஜி... இப்படி எண்ணற்ற சட்டவிரோத கைதுகள்! 
  • பாமகவை வளைத்துப் போட்ட கைது நடவடிக்கைப் புகைப்படங்கள்.
  • நாம் தமிழர் கட்சி அலுவலகங்களில் திடீர் சோதனை (ரெய்டு).
  • தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம்.
  • ஊழலை எதிர்க்க வேண்டும். அதில் இரு கருத்து இருக்க முடியாது.
  • ஆனால், எதிர்க்கட்சிகளை மிரட்ட, எம்எல்ஏக்கள், எம்பிக்களை மிரட்டி வாங்கிட ஒரு தந்திரமாக அதைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
  • காங்கிரஸ் இல்லாத இந்தியா அல்ல, எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா - இதுதான் இந்து ராஷ்ட்ரா!

அதனால்தான், வேண்டாம் மோடி!

ஒற்றை ஆட்சி

  • இந்தியத் தாய்நாட்டின் மிக முக்கியமான சிறப்பம்சம் பன்மைத்துவம். அதைத் துடைத்தெறிந்திட துடிக்கிறது மோடி - பிஜேபி ஆட்சி. 
  • ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே உடை, ஒரே உணவு, ஒரே சிவில் சட்டம், ஒரே இனம் - இப்படி பன்மைத்துவத்தை ஒழித்து ஒற்றைத் தன்மையை, ஒற்றை ஆட்சியை நிறுவுவதையே தனது லட்சியமாகக் கொண்டிருக்கிறது. 

அரசமைப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்கிறது ஆர்எஸ்எஸ் - பிஜேபி

  • டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இயற்றிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதனிடத்தில், மனு (அ)நீதியை, காட்டுமிராண்டிகால சட்டத்தை அரசமைப்புச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும். இதுதான் மோடி- பிஜேபியின் கனவு.
  • அதற்காகத்தான் 400 தொகுதி, மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற வேண்டும் என துடிக்கிறார் மோடி. 
  • நமக்குத் தேவை ஒரு நவீன இந்தியக் குடியரசு.
  • மன்னர்கால, காட்டுமிராண்டிகால, சர்வாதிகார பாசிச ஆட்சி வேண்டாம்.

அதனால்தான், வேண்டாம் மோடி!

மனு(அ)நீதி என்ன சொல்கிறது?

  • சட்டத்தின் முன் அனைவரும் சமமல்ல என்கிறது மனு அநீதி.
  • பிறப்பால் உயர்வு - தாழ்வு பாராட்டுகிறது.
  • பிறந்த சாதி, செல்வச் செழிப்புக்கு ஏற்ப பாரபட்சமான நீதி வழங்கப்படும் என்கிறது.
  • சட்டத்தின் மூலமான ஆட்சி அல்ல, மன்னராட்சிக்கு சமமான சர்வாதிகார ஆட்சியை முன்வைக்கிறது.
  • நவீன, நாகரீகக் குடியரசுக்கு ஒவ்வாத தண்டனைகளை சாதியின் அடிப்படையில் முன்வைக்கிறது.
  • இந்த நாட்டில் பிறந்த அனைவரும், சுமார் 97 சதவீதம் பேர், மேலிருக்கும் 3 சதவீதம் பேருக்கு, பிராமணர்களுக்கு, சேவை செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்கிறது (மனு ஸ்மிருதி - பகுதி 8 - ஸ்லோகம் 410, 413, 414).
  • அப்படி கேள்விகளின்றி சேவை செய்ய மறுத்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிறது.
  • நாக்கை அறுப்பது, கை-கால்களை வெட்டுவது உள்ளிட்ட குரூரமான, கொடூரமான தண்டனைகளை முன்வைக்கிறது.
  • சண்டாளர்கள் (பஞ்சமர்கள் ஆகிய தாழ்த்தப்பட்டவர்கள்) கிராமத்துக்கு / ஊருக்கு வெளியே வாழ வேண்டும் என்கிறது.
  • நாய்களும் கழுதைகளும்தான் அவர்களின் சொத்து.
  • செத்துப்போனவற்றின் தோல்களையே உடையாக உடுத்திக் கொள்ள வேண்டும் என்கிறது.
  • அவர்கள் உண்ணுவதற்காக மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டும், உடைந்துபோன பாத்திரங்களில்தான் உண்ண வேண்டும் என்கிறது.
  • அவர்கள் ஊருக்குள்ளும் கிராமத்திற்குள்ளும் இரவெல்லாம் சுற்றித் திரியக் கூடாது.
  • பகலில், மன்னர் ஆணைப்படி, ஏதாவது வேலைகள் செய்ய வேண்டும் என்றால், ஊருக்கு வெளியே, ஊரைச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்,
  • அவர்கள் தம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் சின்னங்களை அணிந்திருக்க வேண்டும் என்கிறது (மனு ஸ்மிருதி - பகுதி 10 - ஸ்லோகம் 51 – 56).

    பெண்களை அடிமைகளாக்கும் மனு ஸ்மிருதி
     

  • பெண்களை இரண்டாம் தர குடிமக்களை விட                           கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் சித்தரிக்கிறது.
  • பெண்கள் நான்கு சுவர்களுக்குள் கட்டுண்டு கிடக்க வேண்டும்;
  • அவர்கள் குழந்தை பெறும் எந்திரங்கள்தான் என்கிறது.
  • உரிமையற்ற அடிமைகளாக பெண்களைச் சித்தரிக்கிறது.
  • அவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது.
  • அவர்கள் சம்பாதிப்பது எல்லாம் ஆணுக்கே சொந்தம் (மனு ஸ்மிருதி - பகுதி 5 + 8 - ஸ்லோகம் 148 – 149 + 416)
  • அதைத்தான் இந்து ராஷ்ட்ராவின் அரசமைப்புச் சட்டமாக கொண்டுவரத் துடிக்கிறது.

அதனால்தான், வேண்டாம் மோடி!

விவசாயிகள் விரோத மோடி ஆட்சி

  • விவசாயம் செய்ய அருகதை உள்ளவர்கள் அதானிகளும் அம்பானிகளும்தான், விவசாயிகள் அல்ல என்கிறது.
  • உணவுக்காக விவசாயம் என்பது போய் சந்தைக்காக விவசாயம் என்கிறது.
  • விவசாயத்தை வணிகமயமாக்குகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமானது என்கிறது.
  • விவசாயத்தில் காண்ட்ராக்ட் முறையைப் புகுத்துகிறது.
  • சாமான்ய மக்கள் விவசாயத்தை விட்டு ஓட வேண்டுமென அதை நஷ்டகரமாக்குகிறது.
  • சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்குமாறு நிர்ப்பந்தப்படுத்துகிறது.
  • இடுபொருட்கள் விலை அதிகரிக்கிறது.
  • விளைபொருட்களுக்கு போதுமான விலை, குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட மறுக்கிறது.
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறது.
  • புதிய நிலக் கையகப்படுத்தும் சட்டங்கள் மூலம் விவசாயிகள் விளை  நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.

அதனால்தான், வேண்டாம் மோடி!

விவசாயத் தொழிலாளர்கள் விரோத மோடி ஆட்சி!

  • நூறு நாள் வேலைத் திட்டத்தை நாற்பது நாள் வேலைத் திட்டமாக சுருக்கி விட்டது.
  • ஆதாரோடு வங்கிக் கணக்கை இணைப்பது என்ற பெயரில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நூறு நாள் வேலைத் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது.
  • நகர்ப்புற முதலாளிகளுக்கு மலிவான உழைப்பு, மலிவான கூலி பெறும் தொழிலாளர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, விவசாயத் தொழிலாளர்களை கிராமப்புறத்திலிருந்து வெளியேற்றி, நகரங்களுக்கு குடிபெயர கட்டாயப்படுத்துகிறது.
  • குறைந்தபட்ச கூலியும் கூட மறுக்கப்படுகிறது.
  • தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ஊதியபாக்கியை மறுத்து வரும் மோடி அரசு தேர்தல் சமயத்தில் கூலியை உயர்த்துவதாக நாடகமாடுகிறது.
  • நிலமின்றி, வீடின்றி, வருமானமின்றி அனாதைகளாக, மேலும் வறியவர்களாகத் தவிக்கும் விதத்தில், விவசாயத் தொழிலாளர்களை, அவர்கள் வாழ்க்கையை நாசப்படுத்துகிறது.

அதனால்தான், வேண்டாம் மோடி!

தொழிலாளர் விரோத மோடி ஆட்சி!

புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால்

  • பணி நிரந்தரம் என்பது கிடையவே கிடையாது. வேலைக்கு ஆலாய்ப் பறக்கும் உதிரிப் பாட்டாளிகளாக தொழிலாளர்கள் மாற்றப்படுகின்றனர்.
  • குறைந்தபட்ச ஊதியம் (சுமார் ரூ 15,000) பறிக்கப்படுகிறது. தரைமட்ட ஊதியம் (இன்று நாளொன்றுக்கு ரூ 178 மாதத்திற்கு ரூ 5340) வழங்கினால் போதும் என்கிறது.
  • பணி நிலைமைகள் கடுமையானதாக்கப்படுகின்றன.
  • இ எஸ் அய், பி எஃப் கட்டாயமில்லை.
  • புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர மறுக்கிறது.
  • ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியமும் கிடையாது, சம உரிமைகளும் கிடையாது.
  • சங்க அங்கீகாரம் அறவே கிடையாது.
  • வேலை நிறுத்த உரிமை பறிக்கப்படுகிறது. வேலை நிறுத்தம் சட்டவிரோதமாக்கப்படுகிறது.
  • வேலை நிறுத்தம் செய்தால், தொழிலாளர் தலைவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
  • மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்ட அந்த சட்டங்கள் ஒரே ஒரு கையெழுத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.
  • தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் மோடி.

அதனால்தான், வேண்டாம் மோடி!

மாணவர் விரோத மோடி ஆட்சி!

  • நீட், க்யூட் என எண்ணற்ற தமிழ் மாணவர் விரோத நுழைவுத் தேர்வுகள்
  • இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு நியாயமே என வாதாடும் ஆட்சியாளர்கள்.
  • அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மூடுவிழா நடத்துவதையே தமது கடமையாகக் கொண்ட கல்விக் கொள்கை.
  • கல்வித் துறையில் சாதி ஏற்றத் தாழ்வு போல ஏழை - பணக்காரன் ஏற்றத் தாழ்வு.
  • கல்வி எட்டாக் கனியாகி விட்டது. ஏழைகளுக்கோர் கல்வி. செல்வம் படைத்தவர்களுக்கோர் கல்வி என ஏற்றத்தாழ்வு.
  • வளாக ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு விட்டது. மாணவர் சங்கத் தேர்தல்களே நடத்தப்படுவதில்லை.
  • அறிவார்ந்த, அறிவியல்பூர்வமான கல்வி முறைக்கு மாறாக, மூடத்தனத்தைக் கற்பிக்கும் அடிமைக் கல்வி முறை.

அதனால்தான், வேண்டாம் மோடி!

இளைஞர் விரோத மோடி ஆட்சி!

  • வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.
  • கல்வி, திறமைக்கேற்ப வேலை கிடைப்பதில்லை.
  • வேலை கொடுக்க வக்கில்லாத அரசு, இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்கிறது.
  • அரசுப் பணிகளில் பலப்பல லட்சக்கணக்கான வேலையிடங்கள் காலியாகவே இருக்கின்றன.
  • தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை இல்லை.
  • வேலையில்லாக் காலத்துக்கு (வேலைதேட) வேலையற்றோர் நிவாரணமும் இல்லை.
  • பெண்கள் வேலை பார்க்க சரியான பாதுகாப்பு இல்லை.
  • பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் இல்லை.

அதனால்தான், வேண்டாம் மோடி!


பெண்கள் விரோத மோடி ஆட்சி!

  1. பெண்கள் மீது பாலியல் வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து விட்டன.
  2. அவமரியாதைக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
  3. பெண்கள் தம் விருப்பப்படி மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.
  4. காதலிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. மீறி காதலித்தால் ஆர் எஸ் எஸ் குண்டர் படைகள் தாக்குகின்றன.
  5. ஒழுக்கக் காவலர்கள் என்ற பெயரில் இளம் பெண்கள் தாக்கப்படுகின்றனர். கூட்டுப் புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
  6. பில்கிஸ் பானு மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு அரசு பாதுகாப்பு!
  7. குற்றவாளிகள் விடுதலையானால், இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
  8. தலித் பெண்கள் மீது பல மடங்கு அதிகரித்து வரும் பாலியல் தாக்குதல்கள்!

அதனால்தான், வேண்டாம் மோடி!

கூட்டமைப்புக்கு எதிரான மோடி ஆட்சி

  • பல மாநிலங்களுக்கும் உரிமை இருக்கிற ஓர் ஒன்றிய அரசு என்பதைத்தான் அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், மாநிலங்களை நகராட்சிகள் போல உரிமையற்றதாக மாற்றிட எத்தனிக்கிறது மோடி ஆட்சி. 
  • ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகளை, முதன்மைச் செயலாளர்கள் முதல் அனைத்து அதிகாரிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து, ஒன்றிய சாம்ராஜ்யத்தை உருவாக்கப்பார்க்கிறது.
  • ஜி எஸ் டி மூலம் வரி வசூல் செய்து, அதை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டியதை மறுப்பதன் மூலம், மாநில அரசுகளை பொருளாதாரரீதியாக நசுக்குகிறது. 
  • இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மொழி உரிமையை, தேசிய இன உரிமையைப் பறிக்கிறது. 
  • இப்படி, சமூக, பொருளாதார, அரசியல்ரீதியில் கூட்டமைப்புத் தத்துவத்தை ஒழித்துக்கட்டப் பார்க்கிறது.

அதனால்தான், வேண்டாம் மோடி!