நாட்டின் தென்கோடியிலுள்ள கன்னியா குமரியில் 2023 ஜூலை 8-9 தேதிகளில் இந்தியா முழுவதுமிருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்ட மாநாடாக, அகில இந்திய கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பின் 4வது தேசிய மாநாடு அமைந்தது. புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், கார்பி, குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு என இந்தியா முழுவதுமிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். ஜூலை 8 துவக்க நாளில் மாநாட்டு அரங்க நுழைவு வாயிலில் AICWF கொடியை தேசியத் தலைவர் தோழர் சோ.பாலசுப்பிரமணியன் ஏற்றி வைத்தார். தோழர் சுகுந்தன் உள்ளிட்ட வர்க்க போரில் உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் மாநாடு துவங்கியது.
முதலில் நடைபெற்ற பொது அமர்வில் இந்திய கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு (சிஐடியு), ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி (எல் எல் எஃப்) ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மாநாட்டை துவக்கி வைத்து ஏஐசிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் வீ.சங்கர் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து புரட்சிகர கட்டுமான தொழிலாளர் இயக்கத்தை கட்டி எழுப்புவோம் என்ற சிறு புத்தகம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிடப்பட்டது. கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் எஸ்.கே.சர்மா புத்தகத்தை வெளியிட ஏஐசிசிடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் ராஜீவ் டிம்ரி பெற்றுக் கொண்டார். பின்னர் CWFI - CITU மாநிலத் தலைவர் தோழர் கே.பி.பெருமாள், ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் என்.செல்வராஜ், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரிய உறுப்பினரும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளருமான தோழர் பேரறிவாளன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநாட்டுக்கு வந்திருந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அடுத்து துவங்கிய பிரதிநிதிகள் அமர்வில் தோழர் எஸ்.கே. சர்மா மாநாட்டு அறிக்கையை முன் வைத்தார். அறிக்கை மீது பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். ஜூலை 9ஆம் தேதியும் பிரதிநிதிகள் விவாதம் தொடர்ந்தது. இறுதியாக பொதுச் செயலாளர் தோழர் சர்மா தொகுப்புரையாற்றினார். அறிக் கையை மாநாடு ஏக மனதாக ஏற்றுக் கொண்டது. அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநாட்டில் மனதாகத் ஏக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அகில இந்திய தலைவராக தோழர் சோ.பாலசுப்பிரமணியனும் பொதுச் செயலாளராக தோழர் எஸ்.கே.சர்மாவும் மீண்டும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். மாநாட்டை வாழ்த்தி இகக(மாலெ) தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி பேசினார். இறுதியாக மாநாட்டை வாழ்த்தி ஏஐசிசிடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் ராஜீவ் டிம்ரி உரையாற்றினார்.
மாநாட்டில் இறுதி நிகழ்ச்சியாக கன்னியா குமரியில் பல்வேறு போராட்டங்களில் சிறை சென்ற தோழர்களுக்கும்,தஞ்சையில் போராட் டத்தில் சிறை சென்ற தோழர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மூன்று நாள் மாநாட்டை சிறப்பாக நடத்த அயராது உழைத்த கன்னியா குமரி மாவட்ட தோழர்களுக்கும் தொண்டர்க ளுக்கும் கர ஒலி எழுப்பி வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தது. 2024 தேர்தலில் மோடி ஆட்சியை தோற்கடிப்போம்! புரட்சிகர கட்டுமானத் தொழிலாளர் இயக்கத்தை கட்டி எழுப்பவோம்! என்ற முழக்கங்களுடன் மாநாடு நிறைவு பெற்றது.