வெள்ளிக்கிழமையன்று மக்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை நீக்கியிருப்பதன் மூலம் அதானியுடைய மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியை அல்லது கார்ப்பரேட் போட்டிகளாலும் நேர்மையற்ற அரசியல் வழிமுறைகளாலும் உந்தப்படும் மோடி அதானி கூட்டை கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் சட்டப்பூர்வமற்றதாக்க மோடிஷா அரசாட்சி எந்தவொரு எல்லைக்கும் செல்லும் என தெளிவாக்குகிறது.
குற்றம் சாட்டப்பட்டது முதல் விசாரணையும், பின்னர் நீக்கப்பட்டது வரையிலும் நெறிமுறைகள் கமிட்டியின் இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் நாடாளுமன்ற விதிமுறைகளையும் பாரபட்சமற்ற நீதி வழங்கும் இயக்கப்போக்கையும் முற்றிலும் மதிக்காமல் நாசமாக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மோடி அதானி கூட்டை அம்பலமாக்கும் ஆற்றல்மிக்க உரைவீச்சுக்கு - பெயர்பெற்ற மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு என்பது ஜார்க்கண்ட் மாநில கட்டாவின் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்றத்தில் தரக்குறைவான, பெண்களை இழிவுபடுத்தக்கூடிய மொழியை பயன்படுத்துவதில் தொடர்ந்து குற்ற மிழைக்கும் நிசிகாந்த்தூபே கொடுத்த ஆதாரமற்ற புகாரின் அடிப்படையிலானதாகும். அவருடைய குற்றச்சாட்டு உடனடியாக மக்களவையின் நெறிமுறைகள் கமிட்டிக்கு சபாநாயகரால் அனுப்பி வைக்கப்பட்டது.
துபாயைத் தலைமையகமாகக் கொண்ட ஹிரநந்தனி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி தர்சன் ஹிரநந்தனியால் கையெழுத்திடப்பட்டு, சந்தேகத்திற்கிடமான 'வாக்கு மூலப்பத்திரம்' ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அவர் திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அதற்கு கைமாறாக கேள்விகளை சமர்ப்பிக்க மஹூவா மொய்த்ரா அவரது நாடாளுமன்ற கணக்கையும் அதன் கடவுச் சொல்லையும் தன்னிடம் கொடுத்த தாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதுவே மஹூவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச் சாட்டாகும். வாக்குமூலப்பத்திரத்தை தொடர்ந்து தூபேயின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாக ஹிரநந்தனி குழுமத்தால் தொடக்கத்தில் மறுப்பு வெளியிடப்பட்டது.
நெறிமுறைகள் கமிட்டி இந்தக் குற்றச்சாட்டு களை மேலோட்டமாகவே மதிப்பிட்டு தர்சன் ஹிரநந்தனியை நேரடியாக அழைத்து குறுக்கு விசாரணை செய்யவோ அல்லது வாக்கு மூலப் பத்திரத்தில் உள்ள தகவல்களை சரிபார்க்கவோ மறுத்து விட்டது. மேலும் அந்தக் கமிட்டியால் மஹுவா மொய்த்ராவுக்கு நியாயமான விசாரணையும் மறுக்கப்பட்டது. அந்த விசாரணையிலும் பாஜக உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரசின் நாடாளு மன்ற உறுப்பினருக்கு தொல்லையையும் அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதையும் செய்தனர்.
மோடியையும் அவரது கார்ப்பரேட் கூட்டாளி களையும் பாதுகாப்பதற்கு, மஹுவா மொய்த்ராவை குற்றவாளியாக்கி அவரை நீக்குவதற்கு நெறி முறைகள் கமிட்டியின் 'முடிவை' பாஜக ஏற்கனவே தீர்மானித்து விட்டது என்பது, எந்தவொரு கலந்துரை யாடலும் இன்றி வரைவு அறிக்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் தெளிவாகிறது.
மக்களவையிலிருந்து ராகுல் காந்தியின் நீக்கம், சஞ்சய் சிங்கின் கைது, நாடாளுமன்றத்திற்குள் டேனிஷ் அலி மீதான மதவெறி தாக்குதல் என நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பாஜகவின் பழிவாங்கும் நீண்ட பட்டியலில் மஹுவாவின் நீக்கமும் சேர்ந்துள்ளது. மஹுவா மொய்த்ராவின் நீக்கத்தை உறுதி செய்ய பாஜக கொஞ்சமும் நேரத்தை வீணாக்காத அதேவேளையில் நாடாளுமன்றத்திற்குள் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி மீது வெறுப்புணர்வுமிக்க மதவெறி தாக்குதல் தொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி எந்தவொரு தண்டனையுமின்றி சுதந்திரமாக உலாவுகிறார்.
மஹுவா மொய்த்ராவின் நீக்கத்தை இக்கமாலெ வன்மையாக கண்டிக்கிறது. அவரை உடனடியாக மக்களவை உறுப்பினர் பதவியில் மீண்டும் அமர்த்த வேண்டுமெனவும் கோருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)