இதுதான் இகக(மாலெ) விடுதலையின் 11ஆவது கட்சிக் காங்கிரஸின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியும் அரசியல் முழக்கமும் ஆகும். கட்சி அணிகளுக்கும் அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் நாடெங்கிலுமுள்ள போராடும் மக்களுக்கும் ஒரு மிகத் தெளிவான அழைப்பாகும்.-ஒரு நீண்ட கால புரட்சிகர கண்ணோட்டத்தில் இன்று நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிகவும் அவசரமான அரசியல் பணிகளாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகும்.
வளர்ந்து கொண்டிருக்கும் பாசிசத் தாக்குதல்களுக்கும் அதற்குச் சமமாக நடக்கின்ற பரந்த மக்கள் எதிர்ப்புகளுக் குமிடையே அதிமுக்கியத்துவம் வாய்ந்த 2024ன் தேர்தல்களை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும்போது, முதலாவதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான வெளிப்படையான சவால் என்பது- வேர்க்கால் மட்டங்களில் இருந்தும் அதே வேளை மேலிருந்து கீழ் நோக்கி கிராமங்கள் வரை-இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு ஒரு ஒருங்கிணைந்த அரசியல் பரப்புரை மற்றும் பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கிடையே இயன்றளவில் பரந்த ஒன்றுமையைக் கட்டமைப்பதுமாகும். இந்த மைய அழுத்தமானது, காங்கிரஸின் ஆவணங்களில், விவாதங்களில் மட்டுமல்ல, முதல்முறையாக, மிக வெற்றிகரமாக நடத்தப்பட்ட "ஜனநாயகம் காப்போம், இந்தியாவைக் காப்போம்- கருத்தரங்கத்தில்" முன்னிலைப்படுத்தப் பட்டிருந்தது. கட்சிக் காங்கிரஸ் அரங்கத்திலேயே நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில், பீகாரின் உயர்மட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண் டனர். அது தேசிய ஜனநாயக கூட்டணியை ஓரங்கட்டுவதற்கு பீகார் மாதிரியை முன்நிறுத்துவதை உறுதியான வகையில் வெளிப்படுத்தியது. ஆர்வமூட்டும் வகையில் விவாதமானது, காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட சல்மான் குர்ஷித்தைத் தூண்டிவிடும் வகையில் நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகள் ஓற்றுமை விசயத்தில் காங்கிரஸ் கட்சி பகிரங்கமாகவும் தெளிவாகவும் வெளியே வரவேண்டும் என்று நகைச்சுவையுடன் மறைமுகமாக விமர்சனம் செய்தார். குர்ஷித்தும் அதற்கு ஈடுகொடுத்து நகைச்சுவையுடன் நம்பிக்கைதரும் வகையில் பதிலளித்தார். சில நாட்களுக்குப் பின்னர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் நானா ராய்பூரில், பாஜகவிற்கு எதிரான அனைத்து கட்சிகளின் ஒற்றுமையின் அவசரத் தேவை பற்றி வெளிப்படையாகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரவிருக்கும் மாகாண மற்றும் தேசிய தேர்தல்களுக்கான தேர்தல் கூட்டணிகளைத் தாண்டி ஒரு போர்க்குணமிக்க பாசிச எதிர்ப்பு ஒற்றுமைக்காக இகக(மாலெ) நிற்கிறது. முதலாவது, முக்கியமான தேவை என்பது, அனைத்து வகையான பாசிசத் தாக்குதல், மோசமான தந்திரங்களுக்கு எதிராக பல்வேறு வகையான மக்கள் இயக்கங்களைச் சக்தியூட்டி ஒற்றுமைப்படுத்துவது ஆகும். அதில், நாடாளு மன்றம் தவிர்த்த, பரந்த மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களில் பெரிய அளவில் ஐக்கியப் பட்ட இடதுசாரிக் கட்சிகள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் வளர்ந்து கொண்டிருக்கும் பாசிச/ஏதேச்சதிகார அபாயத்திற்கு எதிராக பெரிய அளவில் சர்வதேச ஒற்றுமை என்பது இந்த சூழலில் மிக முக்கியமான தேவையாகும். இந்த பிரதான நோக்கத்திற்காக முழு ஆதரவையும் அளிப்பதாக இந்திய இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் சர்வதேச விருந்தினர்களும் தங்களின் உற்சாகமான பேச்சுகள் மற்றும் வாழ்த்துச் செய்திகள் மூலம் தெரிவித்தார்கள். இவ்வாறாக, பாசிச எதிர்ப்பு எனும் ஒரு பொது நோக்கத்திற்காக ஒரு திடமான இடதுசாரிக் கூட்ட ணியை கருவாகக் கொண்ட பரந்த எதிர்க்கட்சி களின் ஒற்றுமை மற்றும் சர்வதேச இடதுசாரி- ஜனநாயக ஒருமைப்பாடு- இந்த மூன்றையும் ஒன்றிணைத்த ஒரு பெரிய மேடையாக 11ஆவது கட்சிக் காங்கிரஸ் இருந்தது.
இரண்டாவது (இரண்டாம் நிலை அல்ல) மிக்க, நீடித்த தன்மை கொண்ட பாசிச எதிர்ப்புப் போராட்டம் கொண்ட இந்தச் சூழ்நிலையில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டப்படியான ஜனநாயகத்தை பாசிச மிருகத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவது என்பது அதிமுக்கியமான, அவசரமான இலக் காகும். ஆனால், தேர்தலில் தோற்கடித்து விட்டாலே பாசிசத்திற்கு மரணம்தான் என்று பகட்டாகச் சொல்வது சுய மாயை, இந்திய மக்களை ஏமாற்றுவது என்பதைத் தவிர வேறல்ல. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரந்து விரிந்த பரிவாரங்களின் உறுதி செய்யப்பட்ட வரலாறானது, அது (தடை செய்யப்பட்டிருந்த போதும்) தலைமறைவில் செழித்து வளர்வதற்கு விரைவாக விரிவடைதற்கு, ஆட்சியில் இருந் தாலும் இல்லாவிட்டாலும் பல்வேறு விதமான குறைபாடுகளையும் இந்திய சமூகத்தில் உள்ளார்ந் துள்ள தவறான பாதைகளையும் பயன்படுத்தி, அதற்குச் சாதகமாக அரசியல் செய்வதற்கு போதுமான அனுபவமும் திறனும் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இப்போது அதோடு கூடவே இந்திய சமூகத்தில் உள்ள கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களையும் அளவற்ற பாசிசமயமாக்கி 2014ல் இருந்து அரசிலும் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து 2024ல் மோடி-ஷா ஆட்சியைத் தோற்கடித்தாலும் காவிப் பாசிஸ்டுகள் அதிகாரத்தின் தாழ்வாரங் களில் உடனடியாகவோ அல்லது பின்னரோ பழிவாங்கும் எண்ணத்துடன் திரும்பவும் வந்து அமர்வதற்குப் போதுமான வழிகளை வைத்திருப் பார்கள் என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
சங்கிகள் முளைத்து வேர் விட்டு கிளை பரப்பிய சமூக நிலத்தை முதற்கட்டமாக முற்றிலும் மாற்றியமைப்பதுதான் முன்கூட்டியே செய்யப்பட வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கை யாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாளைய சுதந்திரத்தைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் தீர்க்க தரிசனமாகச் சொன்னது போல் 'அடிப்படையில் ஜனநாயகமற்ற இந்திய மண்ணில்' நேர்மையான ஜனநாயகத்தை நிறுவ முடியாது. ஆகையால், அரசிலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, கூட்டாட்சி மற்றும் இதர இலட்சியங்ளை மீட்டெடுக்கும் போராட்டமானது பாசிசத்தை தேர்தல்களில் தோற்கடிப்பதினால் மட்டுமே இறுதி வெற்றியை அடையமுடியாது. அது, 'சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய அரசாங்கத்தின் வடிவமும் வழிமுறையும்...' என அம்பேத்கர் வரையறுத்தது போல், ஜனநாயகத்தை மறு கட்டமைப்பு செய்ய ஒரு இடைநிறுத்தம்கூட இல்லாமல் முன் செல்ல வேண்டும்.
நேர்மையான, நிலையான மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கான பொறுப்பை வரலாறு நம் தோள்களில் சுமத்தியுள்ளது. இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்புடன் அதை நிறைவேற்ற 11ஆவது கட்சிக் காங்கிரஸ் உறுதியேற்றுள்ளது. அதற்காக, நமது கட்சியை அதிவேகமாக விரிவாக்கம் செய்வது அவசர அவசியமாகும். அதற்குத் தேவையான மனித வளங்கள் ஒவ்வொரு நாளும் எல்லா இடங்களிலும் நடைபெறுகின்ற எதிர்ப்புகளிலும் போராட்டங்களிலும் நம் நாட்டில் காணப்படும் சமூக பொருளாதாரத்திலும் உற்பத்தி செய்யப்ப டுகின்றன. நம்முடைய அமைப்புக் கலாச்சாரத் திலும் வேலை நடையிலும் காணப்படும் குறிப்பிட்ட பெரும் பலவீனங்களைக் களை வதற்கு தீவிரமாக கவனம் செலுத்துவது மட்டுமே ஒரே வழியாகும். பிரதிநிதிகள் அமர்வு அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டு கவனம் செலுத்தி ஒரு தெளிவான, ஒன்றுபட்ட புரிதலுக்கு வந்தது. அழுத்தம் கொடுக்க வேண்டிய விசயத்தின் முக்கிய அம்சம் என்பது தத்துவம், அரசியல் மற்றும் அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவை ஒன்றோடு ஒன்றிணைந்து செல்லும் விரிவாக்கம். இரண்டுமே சம அளவு முக்கியத்துவம் கொண்டது. கட்சி கட்டுதல் என்கிற ஒற்றைப் பணிக்கு ஒன்றோடு ஒன்று இட்டு நிரப்பக் கூடியது.
இந்தப் பணிகள் எல்லாம் மிகவும் சவாலானவைதான். ஆனால் மக்களைச் சார்ந்து நிற்கும் போது அவற்றை நாம் கண்டிப்பாக சாதிக்க முடியும். நேர்மையான ஜனநாயகம், கூட்டாட்சி, மதச் சார்பற்ற, சோசலிச இந்தியாவைக் கட்டமைக்க மக்களுடைய மகத்தான புரட்சிகர சக்தியை மற்றும் படைப்பாற்றலைக் கண்டு பிடித்து ஆயுதமாக்கிட அவர்களை அரசியல் ரீதியாக ஊக்குவித்திட வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் இன்று வரையிலும் இலட்சக்கணக்கான நம் தோழர்கள் போராடி, உயிர்த் தியாகம் செய்த, அவர்கள் கனவு கண்ட ஒரு இந்தியாவை உருவாக்கிட வேண்டும்.
அந்த நாள் வரும்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தோழர்களும் நண்பர்களும் சிவப்பாக்கப்பட்ட வயல் வெளிகளில், சாலை களில், வான வீதியில் பூத்துக்குலுங்கும் வண்ணப் பூக்களால், புது வசந்தத்தின் முன்னோடிகளால் வாழ்த்தப்படுவார்கள். கட்சிக் காங்கிரஸ் முடிவுற்ற பின்னர், செம்பூக்களால் கட்டப்பட்ட மாலை போல் காணப்பட்ட அமைப்பாளர்களும் தொண்டர்களும், "செவ் வணக்கம் தோழர்களே! மீண்டும் சந்திப்போம், நாம் வெற்றி பெறுவோம்! புரட்சி ஓங்குக! என்று சொல்லி ஒருவருக்கொருவர் விடைபெற்றுக் கொண்டார்கள். நம்பிக்கை தரும் ஒரு புதிய தெம்புடன், உயர்ந்த அரசியல் தெளிவு மற்றும் ஒற்றுமையுடன் தோழர்கள், புரட்சிகர செய்தியைப் பரப்புவதற்காகவும் அதன்படி செயலாற்றுவதற்காகவும் வி.எம்.நகரிலிருந்து தங்கள் இடங்கள் நோக்கிப் புறப்பட்டார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)