கார்ப்பரேட் ஆதரவு, காவிப் பாசிச மோடி அரசை வீழ்த்த, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய தொழிலாளர் வர்க்கம் விவசாயிகள் சமூகம் நாடு முழுவதும் நவம்பர் 26,27, 28 மூன்று நாட்கள் மாநில தலைநகர்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளை முற்றுகை பெருந்திரள் அமர்வுப் போராட்டம் திட்டமிடப்பட்டது.
தமிழ்நாட்டிலும் நவம்பர் 26ல் சென்னை ஆளுநர் மாளிகை அருகிலுள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளான ஐக்கிய விவசாயிகள் முன்னணி - எஸ்கேஎம் மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய பெருந்திரள் அமர்வு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் அணி திரண்டனர்.
தொமுச தொழிற்சங்கத் தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான சண்முகம், எஸ்கேஎம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஏஐசிசிடியு தேசியத் தலைவர் வீ.சங்கர், ஏஐகேம் மாநிலச் செயலாளர் அ.சந்திரமோகன், அனைத்து மையத் தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம்-ல் இணைந்துள்ள விவசாயிகள் சங்கங்கள், விதொச தலைவர்கள் குறிப்பாக, சிபிஐஎம்-ஏஐகேஎஸ் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் சாமி நடராஜன், சிபிஐ-ஏஐகேஎஸ் மாநில தலைவர் குணசேகரன், மாநில செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் இரணியப்பன் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்க துணைச் செயலாளர் இராஜசங்கர் ஆகியோரும் உரை யாற்றினர். ஏஐசிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஞானதேசிகன், மாநிலத் துணைத் தலைவர் அந்தோணிமுத்து, மாநிலச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நவம்பர் 28 அன்று புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட் டத்தில் ஏஐசிசிடியு தேசியத் துணைத் தலைவர் சோ.பாலசுப்பிரமணியன், விஜயா உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.