மக்களவைத் தேர்தலில் சிபிஐஎம்எல் பங்கேற்பு

  • சில முக்கிய அம்சங்கள்

பெரும் பணபலம்கார்ப்பரேட் அதிகாரத்தைக் கொண்டும்அரசு எந்திரத்தைப் பயன்படுத்தியும் வெறுப்பு, பொய்கள் நிறைந்ததாகவும் பாஜகவின் பரப்புரை இயக்கம் இருந்தது. இருந்த போதிலும் மோடியின் பாஜகவை 243 இடங்கள் என்ற எண்ணிக்கையில் தடுத்து நிறுத்தியதற்கு இந்திய மக்களாகிய நாம் மிகச் சிறந்த போராட்டம் நடத்தியுள்ளோம்நாட்டின் மதச்சார்பற்றஜனநாயக நெறிமுறைகளையும்அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் உயர்த்திப் பிடிக்கக் கூடியதாகபாதுகாக்கக் கூடியதாகபொதுமக்களின் வெல்லப்பட முடியாத உணர்வின் பிரதிபலிப்பாக இந்தியா கூட்டணி எழுந்தது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பாகும்ஜனநாயகம்அரசமைப்புச் சட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்நாட்டில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உத்தர பிரதேசத்தில் இக்கூட்டணியின் செயல்பாடுகள் வழிவகுத்தனஅது பாஜகவிற்கு மிகச் சிறந்த பதிலடியாக அமைந்ததுநரேந்திர மோடிஅமித்ஷா தலைமையிலான ஆட்சியை நிராகரிப்பதாகவும் அது அமைந்தது என இந்த முடிவுகள் குறித்து சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் திபங்கர் தனது கருத்தை கூறினார்இந்தத் தேர்தல்களில் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் முக்கியப் பிரச்சினையாக மாறியது. மேலும் பாஜக கைக்கொண்ட பிரித்தாளும் கொள்கைகளுக்கு எதிரான தீர்ப்பாகவும் இது அமைந்தது.

பீகாரில் போட்டியிட்ட மூன்றில் இரண்டு இடங்களை சிபிஐஎம்எல் வென்றதுகாராக்கட்டில் தோழர் ராஜாராம் சிங், அராவில் தோழர் சுதாமா பிரசாத் ஆகியோர் வெற்றி பெற்றனர். நாளந்தா மக்களவைத் தொகுதியில் முனைவர் சந்தீப் சவுரவ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்தியா கூட்டணியின் ஓர் அங்கமாக ஜார்க்கண்டின் கொடர்மாவிலும் சிபிஐஎம்எல் போட்டியிட்டது. அங்கு பகோதர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தோழர் வினோத் சிங் போட்டியிட்டார். அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கில் தண்டிக்கப்பட்டதால் பீகாரின் அகியோன் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மனோஜ் மன்சில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றதுஅதில் சிபிஐஎம்எல் தோழர் சிவபிரகாஷ் ரஞ்சன் வெற்றிபெற்றிருக்கிறார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது. ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடாஒடிசாவின் கோராபுட்மேற்கு வங்கத்தின் பர்தமான் கிழக்கு ஆகிய தொகுதிகளிலும் சிபிஐஎம்எல் தனித்துப் போட்டியிட்டதுமேலும் ஆந்திர பிரதேசம்ஒடிசா சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் தலா அய்ந்து தொகுதிகளில் சிபிஐஎம்எல் போட்டியிட்டது.

உயர்சாதி நிலப்பிரபுத்துவ சக்திகள் வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்திய சில சம்பவங்களை போஜ்பூர் கண்டதுபாஜகவின் நிச்சயமான தோல்வியைக் கண்ட நிலப்பிரபுத்துவ குண்டர்கள் பல்வேறு இடங்களில் வாக்காளர்களை அச்சுறுத்திஅவர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க தீவிர முயற்சி செய்தனர். ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தனர் என்பதற்காக ஜூன்இல் பர்காரா சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியிலுள்ள வாக்குச் சாவடிக்கு அருகில் நான்கு பேர் துப்பாக்கியால் சுடப்பட்டுகுண்டு காயங்களுக்கு உள்ளாகினர்.

மக்களிடமிருந்து பெற்ற நிதியைக் கொண்டு மட்டுமே சிபிஐஎம்எல் தேர்தல் பரப்புரை இயக்கத்தை நடத்தியதுஇதற்காகவே இந்தத் தேர்தல்கள் நினைவு கொள்ளப்படும்ஒருபுறம் சட்டவிரோத தேர்தல் பத்திரங்கள் மூலமாக சுருட்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் என்ற பணபலத்தோடு நடத்தப்பட்ட பாஜகவின் பரப்புரை இயக்கம்மறுபுறம் வாக்காளர்களிடமிருந்து கூப்பன்கள் மூலம் பெற்ற 20 ரூபாய். கட்சி ஆதரவாளர்களின் சிறு பங்களிப்புகள் மூலம் பெற்ற நிதியை மட்டுமே சார்ந்திருந்தது சிபிஐஎம்எல்மக்களுக்காகமக்களால், மக்களே என்ற ஜனநாயக மரபை வலுப்படுத்துகிறமக்களின் அதிகாரத்தால் பணபலம் எதிர்கொள்ளப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டு மாதத் தேர்தல் பரப்புரை இயக்கத்தில் பீகார் முழுவதற்கும் நூற்றுக்கணக்கான பேரணிகள்சாலைவழி பரப்புரைகள்பொதுக்கூட்டங்கள் நடைபெற்றனஇந்த நிகழ்வுகளில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் கூட்டாக பங்கேற்று உரையாற்றினர். அத்தகைய பேரணிகளில் கடைசியாக நடைபெற்ற ஒன்றில்அரா நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதாமா பிரசாத்அகியோன் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் சிவப்பிரகாஷ் ரஞ்சன் ஆகியோரை ஆதரித்து, போஜ்பூரின் கதாணி மேளா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தோழர் திபங்கர்தேஜஸ்வி யாதவ் ஆகியோர் முக்கிய பேச்சாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்மேலும் சுதாமா பிரசாத்துக்கு ஆதரவாக மே 27 அன்று ஜெகதீஷ்பூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில்காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்தும் அவர்கள் உரையாற்றினர்.

இந்தத் தேர்தல்களில் பாஜகவின் பணபலம், ஆள்பலம்நிர்வாக ஆதரவு ஆகியவற்றுக்கு எதிராக மிகவும் சமனற்ற ஒரு களத்தில் எதிர்க்கட்சிகள் போராடினமாதிரி நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய ஆளுங்கட்சிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதுமுழுவதும் வெளிப்படையான தேர்தல் என்ற மக்களின் உரிமையை அவர்களிடமிருந்து பறித்தது. இந்தியா கூட்டணி கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகார்களுக்கும் முறையீடுகளுக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய தேர்தல் ஆணையம் அமைதி காத்தது; அல்லது திருப்திகரமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லைஜூன்அன்று நடைபெற்ற தேர்தலின் கடைசி நாளில்ஜூன்அன்று நடைபெறப் போகும் வாக்கு எண்ணிக்கைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் கூட்டம் ஒன்றை நடத்தினர். வாக்கு எண்ணிக்கை நாளுக்கு தேவையான செயல்முறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பற்றி அவர்கள் விவாதித்தனர்அதற்கு அடுத்த நாள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க முடிவும் செய்தனர்வாக்கு எண்ணிக்கை  செயல்முறையில் வெளிப்படை தன்மையையும் நேர்மையையும் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கடைசி கட்ட தேர்தல் நாளான ஜூன்அன்று தேர்தல் முகவர்களுக்கு அவர்கள் கேட்காவிட்டாலும் கூட கண்டிப்பாக வழங்கப்பட வேண்டிய படிவம் 17 சி-இன் நகல்கள் வழங்கப்படவில்லைஅராகாராக்கட்நாளந்தாவின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அதன் தலைமை அதிகாரிகள் சிபிஐஎம்எல் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டனர்கட்சியின் வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடமும் மத்திய பார்வையாளர்களிடமும் புகார்களை சமர்ப்பித்தனர்ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எந்த ஒரு அதிகாரிகளாலும் எடுக்கப்படவில்லை. நளந்தாஅராகாராக்கட் நாடாளுமன்ற தொகுதிகள், அகியோன் சட்டமன்ற இடைத்தேர்தலின் தேர்தல் முகவர்களுக்கு 17 சி படிவம் வழங்கப்படவில்லை என்பது குறித்து பீகார் தலைமை தேர்தல் ஆணையர், புது தில்லியிலுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோரிடம் புகார் மனுவை கட்சி சமர்ப்பித்ததுபல வாக்குச்சாவடிகளில் 17 சி படிவம் கேட்ட கட்சியின் தேர்தல் முகவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டனர். தேர்தல் செயல்முறையோடு நெருக்கமாக உள்ள ஒவ்வொரு தேர்தல் முகவருக்கும் பதிவான வாக்குகளின் விவரங்களை பதிவு செய்து சான்றளிக்கப்பட்ட நகல் படிவம் 17 சி-யாக வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். இவை அனைத்தும் தேர்தலை நடத்துவதற்கான விதிகளை தெளிவாகவே மீறிய செயலாகும். இதன் மூலம் சுதந்திரமானநியாயமான தேர்தல் செயல்முறைக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடந்து கொண்டது என்ற சந்தேகம் வலுப்பெறுகிறதுபடிவம் 17 சி இல்லாவிட்டால்வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கை செயல்முறைக்கு தேவையான வாக்குச்சீட்டு பகுதியின் எண்கள்கட்டுப்படுத்தும் பகுதியின் எண்கள்மொத்தமாக பதிவான வாக்குகள்இன்னபிற அனைத்து தகவல்களையும் சரிபார்ப்பது இயலாத காரியம் ஆகும்இந்தத் தெளிவான விதிமுறை மீறலுக்கு எதிராக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 17 சி படிவம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என சிபிஐஎம்எல் கோரியது. ஆனால் இது சம்பந்தமாக தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகைமுரணாக தேர்தல் ஆணையம் அடுத்த நாளே பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி, உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் செயல்பாட்டை நடத்தியதற்காக தன்னைத் தானே பாராட்டிக் கொண்டது!

உயிரைப் பறிக்கும் வெப்ப அலைக்கு தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு படையினர்வாக்காளர்கள்பரப்புரையாளர்கள் என டஜன் கணக்கானவர்கள் தங்களது இன்னுயிரை இழந்த இந்தத் தேர்தல் தான் உண்மையில் இந்தியாவின் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட ஒரு தேர்தலாகும்மிகக் கொடூரமான இந்த வெப்பத்தில் வாக்காளர்களின் பங்கேற்பை எளிதாக்குவதற்கு தேவையான முறையான திட்டமிடலோ ஏற்பாடுகளோ எதுவும் இல்லைபல்வேறு நிகழ்வுகளில் தேர்தல் அதிகாரிகள் 17 சி படிவத்தை தேர்தல் முகவர்களுக்கு வழங்க மறுத்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறினர். மேலும்பிரதம மந்திரி நேரடியாக தலைமை ஏற்று நடத்திய வெறுப்புப் பரப்புரை இயக்கத்தைமிக நீண்ட தேர்தல் காலம் முழுவதும் பாஜக, மாதிரி நடத்தை விதிமுறைகளை மீறியதைமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளை வெட்கக்கேடான முறையில் பாஜக மீறியதை கண்டும் காணாமல் இருந்ததன் மூலம்தேர்தல் ஆணையம் தனக்குத்தானே அவப் பெயரை தேடிக்கொண்டது; தனது சொந்த நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திக் கொண்டது; இது மிகவும் மோசமான வருத்தத்திற்குரியதாகும்.

அனைத்து பாதக நிலைமைகள் இருந்தபோதும் மக்கள் மிகச் சிறந்த ஆற்றலோடும் உற்சாகத்தோடும் இந்தத் தேர்தல்களில் போராடினர். குறிப்பாக இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் பேரணிகளிலும் தினசரி பரப்புரைகளிலும் பங்கேற்றனர்சிபிஐஎம்எல் போட்டியிட்ட தொகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் பெண்களின் செயலூக்கமிக்க பங்கேற்பு ஒரு சிறப்பாகும்அரா, காராக்கட்நாளந்தாகோடர்மாவில் ஒவ்வொரு மட்டத்திலும் அவர்கள் பங்கேற்றனர்அவர்களுடைய சொந்த முயற்சியில் வளங்களையும் ஆதரவையும் அணிதிரட்டினர்அனைத்து சட்டமன்ற பகுதிகளிலும் பெண் தலைவர்களின் குழுக்கள் சுதந்திரமாக பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டனர்ஆயிரக்கணக்கான பெண் வாக்காளர்களை அணிதிரட்டி கிராமங்கள் மட்டத்தில் கூட்டங்களை அவர்கள் ஏற்பாடு செய்தனர்அவற்றில் விலை உயர்வுசமையல் எரிவாயு முதல் மணிப்பூரின் நிலைமைகள், காசா மக்கள் மீதான போர் வரையிலும் பல்வேறு விசயங்களில் கட்சியின் நிலைப்பாடுகளை விளக்கிப் பேசினர்பாடல்கள்இசை நிகழ்ச்சிகள் மூலமாக மோடி ஆட்சியின் மக்கள் விரோதகார்ப்பரேட் ஆதரவுமதவெறி குணாம்சத்தை திறன்மிக்க விதத்தில் இந்தக் குழுக்கள் எடுத்துக்கூறின.

சர்வாதிகாரஆணவமிக்க மோடி ஆட்சியின் பத்தாண்டுகள்மாற்றத்திற்கான ஏக்கத்தை மக்களிடம் தீவிரமாக்கியது. மக்கள் எளிதாக அணுகக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மத்தியில் ஒரு பொறுப்புணர்வுமிக்க அரசாங்கத்தையும் உறுதிசெய்ய அவர்கள் வாக்களித்துள்ளனர்நாட்டு மக்களின் இந்தத் தீர்ப்பை வரவேற்கும் அதேவேளையில் ஜனநாயகத்திற்காகவும் அரசமைப்புச் சட்டத்திற்காகவும் சிபிஐஎம்எல் தனது போராட்டத்தை தொடரும்.