நாம் ஒரு பேரிடர் காலத்தில் இருக்கிறோம்!

இந்தியா கூட்டணியிடமிருந்து மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். மேதா பட்கர் போன்றவர்கள் இக் கூட்டணி முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சி மாதிரிக்காக கடப்பாடு கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மற்ற சிலரோ பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றினால் போதுமானது என நினைக்கிறார்கள். கூட்டணியில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில் உங்களது எதிர்பார்ப்பு என்ன?

பாலின நீதியும் சமத்துவமும் வேண்டும்; பொது சிவில் சட்டம் என்ற பெயரில் வகுப்புவாத துருவச் சேர்க்கையை ஏற்படுத்தும், முஸ்லிம்களை தீயவர்களாக சித்தரிக்கும் அரசியல் வேண்டாம்!

போபாலில் வாக்குச்சாவடி மட்ட அளவிலுள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக உரத்த கூச்சலை எழுப்பினார்கள். சிறிது நேரத்தில், அதே மாநிலத்தில் இருந்து, அதிகார போதையில் மிதந்த பாஜக இளைஞரணித் தலைவரான பிரவேஷ் சுக்லா, தஸ்மத் ராவத் எனும் ஆதிவாசி தொழிலாளி மீது சிறுநீர் கழிக்கும் காணொளி வெளியாகி, சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவியது. இருபதாண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் மத்தியப் பிரதேசத்தில் உண்மையிலேயே களத்தில் நிலவும் அநாகரிக நடத்தையை, காட்சிகளை அதிர்ச்சியூட்டும் இந்தக் காணொளி சித்தரித்துக் காட்டியது.

இமாச்சல், டெல்லி, குஜராத்திலிருந்து வரும் சமிஞ்கைகளும் பாடங்களும்

நிச்சயமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தத்தக்க பாஜகவின் குஜராத் வெற்றியின் அளவு தவிர, குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல், டெல்லியின் நகர்மன்ற தேர்தலின் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு இணங்கவே வெளிவந்துள்ளன. இந்த மூன்று தேர்தல்களிலும் பாஜக தான் ஆட்சியில் இருந்த கட்சியாகும். தற்போது இரண்டில் அது ஆட்சியை இழந்துள்ளது. இந்த அர்த்தத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது எனலாம். ஆனால் வாக்கின் பங்கு (52 சதத்திற்கும் மேல்), இடங்களின் பங்கு (85 சதத்திற்கும் மேல்) ஆகிய இரண்டு அளவுகளின் படி குஜராத்தில் அது பெற்ற வெற்றி அதன் தோல்வி மீது நிழலாக படிந்து அதனை மறைத்து விட்டது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இ ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தையும் அதன் உயிர்ப்பையும் கேலிக்கூத்தாக்குகிறது

முற்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தோடு மோடி அரசாங்கம் கொண்டு வந்த 10% ஒதுக்கீட்டை சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வில் பொதிந்துள்ள குறிக்கோளையும் நோக்கத்தையும் தெள்ளத் தெளிவாக மீறியுள்ளது. இந்த தீர்ப்பானது உரிமை பறிக்கப்பட்ட பிரிவினருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை மேலும் இறுக்கிட மட்டுமே செய்துள்ளது. இதைதான் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவி னருக்கான தீர்ப்பில், தலைமை நீதிபதி யு.யு.

சமூக நீதி பேசும் ஆட்சியில் சாதியாதிக்கமும் பெண்ணடிமையும் தலைவிரித்தாடுகிறது!

தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளத்தில் சாதிய வன்மத்துடன் அங்கிருந்த கடையில் பட்டியலின சிறுவர்களுக்கு பொருள்கள் கொடுக்க மறுத்ததன் காரணமாக பிரச்சனை எழுந்து, போராட்டங்கள் நடத்திய பின்னர் சாதி ஆதிக்கத்துடன் செயல்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு அவர்கள் ஆறு மாத காலத்திற்கு ஊருக்குள் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது திருநெல்வேலி வன் கொடுமை தடுப்பு நீதிமன்றத்தால். அதே தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் என்ற ஊரில் உள்ள 7ம் வகுப்பு படித்து வந்த சீனு என்கிற அருந்ததியர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.