ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் இகக மாலெ
நடைபெறவிருக்கும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே ஜார்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ள தோழர் வினோத் சிங் பகோதார் தொகுதியில் போட்டியிடுகிறார். தோழர் அருப் சட்டர்ஜி நிர்ஷா தொகுதியிலும் தோழர் சந்திரதியோ மகாதோ சிந்திரி தொகுதியிலும் தோழர் ராஜ்குமார் யாதவ் தன்வார் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். தன்வார் தொகுதியில் இசுக(மாலெ)வுக்கும் ஜேஎம்எம்-மிற்கும் இடையே நட்புப் போட்டி உள்ளது. மற்ற மூன்று தொகுதிகளில் இந்தியா கூட்டணியிலிருந்து போட்டியிடுகிறது. நான்கு தொகுதிகளிலும் வரும் நவம்பர் 30 அன்று தேர்தல் நடக்கவிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிதி மாவட்டத்தில் உள்ள பகாதோர் சட்டமன்றத் தொகுதியில் 2014ல் நடந்த தேர்தலில் மட்டும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இசுக(மாலெ) தோல்வியுற்றதைத் தவிர 1990லிருந்து தொடர்ந்து இகக(மாலெ) பகாதோர் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறது. 2005 சட்டமன்றத் தேர்தலின் போது வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்த பின்னர், படுகொலை செய்யப்பட்ட தோழர் மகேந்திர சிங் அந்தத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். 2006 தேர்தல் ஜார்கண்ட் தனி மாநிலமாக உருவான பின் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2005ல் இருந்து, 2014-2019 தவிர, தோழர் வினோத் சிங் அத் தொகுதியில் தொடர்ந்து இசுக(மாலெ) சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இறப்பதற்கு முன்னர் நடைபெற்ற தன்னுடைய கடைசி தேர்தல் உரையில், தோழர் மகேந்திர சிங், பகாதோர் தொகுதி மக்களுக்கும் இசுசு(மாலெ)வுக்குமிடையே குடும்ப ரீதியான உறவு உள்ளதே தவிர தேர்தல் ரீதியான உறவு கிடையாது என்று கூறினார்.
தன்வார் தொகுதியில் 2014ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோழர் ராஜ்குமார் யாதவ் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவின் பாபுலால் மாரண்டியைத் தோற்கடித்தார். 201மல் வெற்றி பெற்ற பாபுலால் மாரண்டி மக்களுக்கு துரோகமிழைத்து பாஜகவில் ஐக்கியமானார். தற்போது மக்கள் அவருக்கு பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறார்கள். 2019 தேர்தலில் 6ஆவது இடத்தைப் பெற்ற ஜேஎம்எம், கெடுவாய்ப்பாக தன்வார் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
மேலும் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களில் பீகார், அசாம் மற்றும் மே.வங்கத்தில் தலா ஒரு தொகுதியில் இசுக(மாலெ) போட்டியிடுகிறது. மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றன. இகக(மாலெ) நைகாட்டி தொகுதியில் போட்டியிடுகிறது. அத் தொகுதியில் தியோதி மஜூம்தார் இகக(மாலெ) வேட்பாளர் ஆவார்.