அச்சுறுத்தல்களை மீறி தூத்துக்குடி மாநகராட்சி ஓட்டுனர்தூய்மைப் பணியாளர்பேரவை.

ஏப்ரல் 27 அன்று தூத்துக்குடி மாநகராட்சியின் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுனர்தூய்மைப் பணியாளர் நலச் சங்கத்தின் வது பொதுப் பேரவை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது ஏஐசிசிடியு இணைப்பு சங்கமாக செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

தொழிலாளர்சங்கமாக திரண்டால் கொடி பிடிப்பார்கள்கோரிக்கை வைப்பார்கள்நிர்வாகத்தில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவார்கள் என அஞ்சிய ஒப்பந்ததாரரும் மாநகராட்சி நிர்வாகமும் தொழிலாளரை அச்சுறுத்தி அடி பணிய வைத்து விடலாம், சங்கமாக அணி திரள்வதை தடுத்து விடலாம் என நினைத்தனர். சங்கத்தின் கருவாக செயல்பட்ட தோழர் பொன்ராஜ் அவர்களுக்கு வேலை மறுத்தனர்சில பெண் தொழிலாளரை அணுகி பாலியல் தொல்லை கொடுத்ததாக சங்க அமைப்பாளர்கள் மீது பொய் புகார் கொடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்தனர்தொழிலாளர்கள் உறுதி பட மறுத்ததன் மூலம் ஏஐசிசிடியு சங்கம் நிலை பெற்றுவிட்ட செய்தி நிர்வாகத்துக்கு கிடைத்தது. ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சகாயம் உள்ளிட்ட தலைவர்கள் மாநகராட்சி ஆணையரை சந்தித்துப் பேசிய பிறகு வேலை தர ஒப்புக் கொண்ட நிர்வாகம் அவரை 10 கிமீ தள்ளியுள்ள வேறு மண்டலத்துக்கு மாற்றியதுஅதை சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லைமீண்டும் அதே இடத்தில் பணியமர்த்துவதற்கான போராட்டம் தொடரும் நிலையில்ஏப்ரல் 27 அன்று திட்டமிட்டபடி தோழர் பொன்ராஜ் தலைமையில் சங்க பொதுப் பேரவை நடைபெற்றது.

பொதுப் பேரவையில் ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் தோழர் சங்கரபாண்டியன்அகில இந்திய தூய்மைப் பணியாளர் கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்வேல்முருகன், ஏஐசிசிடியு மாநில துணைத் தலைவர் வெங்கடாச்சலம், கோவை தூய்மைப் பணியாளர் சங்க நிர்வாகிகள் சந்தானம், வள்ளி ஆகியோருடன் தூத்துக்குடி சிபிஐ எம்எல் கட்சி பொறுப்பாளர் தோழர் முருகன் ஏஐசிசிடியு தோழர் சிவராமன் ஆகியோரும் வாழ்த்தி உரையாற்றினர். இந்த நிகழ்வில்ஓட்டுனர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் மண்டபம் நிரம்பி வழிந்தது.

தொழிலாளரின் பணிப் பாதுகாப்புவருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் முறையான அமலாக்கம்அரசு அறிவித்த குறைந்தபட்ச சட்டக் கூலி பெறுவதுஒப்பந்தத் தொழிலாளர் பணி நிரந்தரம்ஓட்டுனர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வைப்பதுஆணாதிக்கசாதீய பாகுபாட்டு அணுகுமுறை எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராட பொதுக் குழு முடிவு செய்தது.

                         -முருகன்