ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CPIML கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி கண்டன உரை ஆற்றினார். அ.வி.கி.தொ.ச மற்றும் அ.வி.ம.ச சார்பில் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய மாநில அரசுகளே!

தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாள் கூலி ரூ.600 உயர்த்திட வேண்டும்.

வீடு, நிலம், வழங்கிட நில சீர்திருத்த சட்டத்தை செயல்படுத்திடு!

55 வயது கடந்த அனைவருக்கும் ஒரு ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்கிடு!

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரிநாடு தழுவிய பிரச்சாரம்

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரியும் உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் இடதுசாரிக் கட்சிகள், விசிக நாடு தழுவிய பி

திண்டுக்கல் மாவட்டம் மனு கொடுக்கும் போராட்டம்

ஏப்ரல் 11, 2022 திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் உழைக்கும் மக்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது...

கோரிக்கைகள்:

✓ 100 நாள் வேலைத்திட்டத்தில் 200 நாள் வேலை ரூ.500 கூலி மற்றும் கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு வீடு, வீட்டுமனைபட்டா, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும்.

✓ நாள்தோறும் ஏறிவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!

கம்மாபுரத்தில் அ.வி.கி.தொ.ச கண்டன ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 08, 2022 கடலூர் மாட்டம், கம்மாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம்(AIARLA) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெய்வசிகாமணி அ.வி.கி.தொ.ச மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது.


தோழர்கள் வீராசாமி, குப்புசாமி, கங்கையம்மாள், புகழேந்தி, கணேசன், அம்புஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.வி.கி.தொ.ச மாநில தலைவர் பாலசுந்தரம், CPIML மாவட்ட செயலாளர் தோழர்.தனவேல், அ.வி.கி.தொ.ச.மாநில செயலாளர் தோழர்.இராஜசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


கோரிக்கைகள்:


மத்திய , மாநில அரசுகளே! 

 

மார்ச் 28,29 பொதுவேலைநிறுத்தம் வாழ்த்தும் ஒருமைப்பாடும்

வெற்றிகரமான பொது வேலைநிறுத்தத்திற்காக தொழிலாளர் வர்க்கத்தை இகக(மாலெ) வாழ்த்துகிறது...