விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு ஆதார விலை வழங்கிடுக! இடதுசாரி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு ஆதார விலை வழங்கிடுக உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏஐகேஎம், அயர்லா உள்ளிட்ட இடதுசாரி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பாக ஜூலை 31 - ஆகஸ்டு 1 தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு 3 வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தினால் மோடி அரசு அந்த சட்டங்களை திரும்பப் பெற்றது. அப்போது பிரதமர் ஆதார விலை குறித்தும் இதர கோரிக்கைகள் குறித்தும் குழு அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

4-வது தேசிய மாநாடு 23-24 செப்டம்பர்,2022, பிக்ரம்கஞ்ச், ரோத்தாஸ், பீகார்.

நிலம், விவசாயம் விவசாயிகளை பாதுகாப்போம்! கார்ப்பரேட் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!

4-வது தேசிய மாநாடு 23-24 செப்டம்பர்,2022, பிக்ரம்கஞ்ச், ரோத்தாஸ், பீகார்.

MSP குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கு!

விவசாயிகள் மாநாடு

23 செப்டம்பர், காலை 11 மணி, பிக்ரம்கஞ்ச்

அகில இந்திய விவசாயிகள் மகாசபை- AIKM

4-வது தேசிய மாநாடு 23-24 செப்டம்பர்,2022, பிக்ரம்கஞ்ச், ரோத்தாஸ், பீகார்.

நிலம், விவசாயம் விவசாயிகளை பாதுகாப்போம்! கார்ப்பரேட் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!

4-வது தேசிய மாநாடு 23-24 செப்டம்பர்,2022, பிக்ரம்கஞ்ச், ரோத்தாஸ், பீகார்.

MSP குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கு!

விவசாயிகள் மாநாடு

23 செப்டம்பர், காலை 11 மணி, பிக்ரம்கஞ்ச்

அகில இந்திய விவசாயிகள் மகாசபை- AIKM

தோழர் மகேந்திரன் அகால மரணம் தோழருக்கு செவ்வஞ்சலி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) திருச்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர், AICCTU தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் மகேந்திரன் அகால மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக கட்சியின் பல்வேறு மட்ட பொறுப்புகளில் பணியாற்றிய தோழர். மகேந்திரனுக்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) தமிழ்நாடு மாநில கமிட்டி அஞ்சலி செலுத்துகிறது. அவரது பிரிவால் துயர் உறும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறது.

ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CPIML கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி கண்டன உரை ஆற்றினார். அ.வி.கி.தொ.ச மற்றும் அ.வி.ம.ச சார்பில் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய மாநில அரசுகளே!

தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாள் கூலி ரூ.600 உயர்த்திட வேண்டும்.

வீடு, நிலம், வழங்கிட நில சீர்திருத்த சட்டத்தை செயல்படுத்திடு!

55 வயது கடந்த அனைவருக்கும் ஒரு ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்கிடு!

ஜூலை 31, 2022 புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) சார்பில் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) சார்பில் ஆர்ப்பாட்டம்.

விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை (MSP)அமுல்படுத்த கோரியும், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் AIKM மாவட்ட செயலாளர் விஜயன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஜூலை 31, 2022 சேலத்தில் SKM ஐக்கிய விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் கைது

சேலத்தில் SKM ஐக்கிய விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் கைது

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு 3 வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு அந்த சட்டங்களை வாபஸ் பெற்றது. அதனை தொடர்ந்து பிரதமர் ஆதார விலை குறித்தும் இதர கோரிக்கைகள் குறித்தும் குழு அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார்