தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை: வெற்று ஆரவார அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதற்கடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெற்று ஆரவாரம்தான் என அம்பலமாகியுள்ளது. முழுமையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பரிசீலனை செய்தால் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இருக்கிறது.

விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க, விவசாயிகளின் வாழ்வா சாவா எனப்படும் இயற்கை பேரிடர்கள், பயிர்க் காப்பீடுகள், விவசாய கடன்கள் மற்றும் தள்ளுபடிகள் வரை ஒதுக்கப்பட்ட நிதி மிகமிகக் குறைவானதே !

ஜனவரி 26, 2023 சேலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

சேலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி


டில்லியில் ஓராண்டுக்குமேல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது
ஒன்றிய பாஜக மோடி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி SKM சார்பில், இன்று  ஜனவரி 26.1.2023 வியாழன் மாலை  5 மணி அளவில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் இருந்து டிராக்டர் பேரணி துவங்கியது.  டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் அணிவகுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இகை(மாலெ) சார்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போர் நடத்தி மனு அளிக்கப்பட்டது.

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

செப்டம்பர் 18,2022 ஐக்கிய விவசாயிகள் முன்னணி செப் 15-25 வரை பிரச்சார இயக்கம்...

செப்டம்பர் 18,2022 ஐக்கிய விவசாயிகள் முன்னணி செப் 15-25 வரை பிரச்சார இயக்கம்...

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கப்பலூரில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் மகாசபை AIKM சார்பில் மாவட்ட அமைப்பாளர் தோழர் சண்முகம் உரையாற்றினார்.

கோரிக்கை:-

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் அதற்கான சட்டபூர்வ உத்தரவாதம் வேண்டும்.

செப்டம்பர் 18, AIKS-CPIM 30 வது மாநில மாநாட்டில் AIKM தோழர் சந்திரமோகன் மாநில பொது செயலாளர் வாழ்த்துரை!

செப்.18 அன்று நாகப்பட்டினத்தில் துவங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - (AIKS- CPIM) 30 வது மாநில மாநாட்டில், பொது அமர்வில், அகில இந்திய விவசாயிகள் மகாசபை AIKM மாநில குழு சார்பில், தோழர். சந்திரமோகன், மாநில பொது செயலாளர் வாழ்த்துரை வழங்கினார்.

கார்ப்பரேட் சூறையாடலுக்கு எதிராக இடதுசாரி விவசாய சங்கங்கள் இணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன்… "கார்ப்பரேட் முதலாளிகளின் ஹைட்ரோகார்பன் திட்டங்களால்

ஆகஸ்ட் 28, 2022 சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

28.08.22 ஞாயிறு சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம் குப்பனூரில் நடைப்பெற்றது.

தோழர் மோகனசுந்தரம் மாவட்ட செயலாளர் இகக(மா-லெ) சிறப்புரை ஆற்றினார்.

தோழர் V.அய்யந்துரை மாவட்ட செயலாளர் AIKM தோழர் அ.வேல்முருகன் துணைச்செயலாளர. AICCTU .தோழர் V.சுரேஷ் தோழர் பி .ராவணன் தோழர் சண்முகசுந்தரம் தோழர் அறிவழகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

குப்பனூர் தைலனுர் கூட்டாத்துப்பட்டி அயோத்தியாபட்டணம் ஆச்சகுட்டப்பட்டி ஊராட்சிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

கோரிக்கை முடிவுகள்:-