ஜூலை 18, 2022 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் AICCTU ஆர்ப்பாட்டம்!

சேலத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகள் மீதான கடன், வட்டி + அபராத வட்டிகளை உடனே தள்ளுபடி செய்!

விலையில்லா கிரயப் பத்திரம், பட்டா உடனே வழங்கிடு! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 18.07.2022 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்...

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்கம் _ இணைப்பு AICCTU சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரிநாடு தழுவிய பிரச்சாரம்

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரியும் உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் இடதுசாரிக் கட்சிகள், விசிக நாடு தழுவிய பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்

பயிற்சி முகாமில் இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் முன் வைத்த அறிக்கை

பயிற்சி முகாமில் இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் முன் வைத்த அறிக்கை

தமிழக அரசியலில் முன்முயற்சிமிக்க பாசிச எதிர்ப்பு அரசியல் சக்தியாக அறுதியிட உறுதிஏற்போம்!

ஊழியர்கள் பயிற்சிமுகாம், கொடைக்கானல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை

ஊழியர்கள் பயிற்சிமுகாம், கொடைக்கானல்

இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி

பகுதி 3

மோடி அரசே தேசவிரோத அக்னிபாத்தை திரும்பப்பெறு! சேலத்தில் SKM ஆர்ப்பாட்டம்!

மோடி அரசே தேசவிரோத அக்னிபாத்தை திரும்பப்பெறு!
சேலத்தில் SKM ஆர்ப்பாட்டம்!

சேலம் கலெக்டர் அலுவலகம் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) இன்று 24.6.2022 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் ஏ.ராமமூர்த்தி (SKM., மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் ஏஐகேஎம் நிர்வாகி அய்யந்துரை, AIKKMS நடராஜன், AIKS உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். 

AIKM- சிபிஐஎம்எல், AIKS-  சிபிஎம், சிபிஐ,  எஸ்யூசிஐ அமைப்பு விவசாயிகளும், முன்னணி ஊழியர்களும் பங்கேற்றனர்.

ஜுன் 24, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுன் 24, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்…

நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

AIKM சார்பில் CPIML மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி, AIKM மாவட்ட செயலாளர் தோழர் ஆறுமுகம், கோலமுத்து, கொளஞ்சி, ஜான்பாட்ஷா, ராஜேந்திரன், வழக்கறிஞர் கணேசன், எல்லப்பன், ஏழுமலை, செல்வம், கலாமணி, வீரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.